< До колоссян 1 >

1 Павло, із волі Божої апо́стол Христа Ісуса, і брат Тимофі́й
தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும்,
2 до святих і вірних братів у Христі, що в Коло́сах: благода́ть вам і мир від Бога, Отця нашого!
கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3 Ми дякуємо Богові, Отцеві Господа нашого Ісуса Христа, за́вжди за вас мо́лячись,
கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,
4 прочувши про вашу віру в Христа Ісуса та про любов, яку маєте до всіх святих
பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
5 через надію, пригото́вану в небі для вас, що про неї давніше ви чули в слові правди Єва́нгелії,
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
6 що до вас прибула́, і на ці́лому світі плодоно́сна й росте, як і в вас, з того дня, коли ви почули й пізнали благодать Божу в правді.
அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது;
7 Отак ви і навчилися від Епа́фра, улю́бленого співробі́тника нашого, що за вас він вірний служитель Христа,
அதை எங்களுக்குப் பிரியமான உடன் வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாக இருக்கிற எப்பாப்பிராவினிடம் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;
8 що й виявив нам про вашу духовну любов.
ஆவியானவருக்குள்ளான உங்களுடைய அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
9 Через це то й ми з того дня, як почули, не перестаємо молитись за вас та просити, щоб для пізна́ння волі Його були́ ви напо́внені всякою мудрістю й розумом духовним,
இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
10 щоб ви пово́дилися нале́жно щодо Господа в усякому дого́дженні, в усякому доброму ді́лі прино́сячи плід і зростаючи в пізна́нні Бога,
௧0எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும்,
11 зміцняючись усякою силою за могутністю слави Його для всякої витрива́лости й довготерпі́ння з радістю,
௧௧சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்.
12 дя́куючи Отцеві, що вчинив нас достойними участи в спа́дщині святих у світлі,
௧௨ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
13 що визволив нас із вла́ди те́мряви й переставив нас до Царства Свого улю́бленого Сина,
௧௩இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம்.
14 в Якім маємо відку́плення і про́щення гріхів.
௧௪குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
15 Він є образ невиди́мого Бога, ро́джений перш усякого тво́рива.
௧௫அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர்.
16 Бо то Ним ство́рено все на небі й на землі, види́ме й невиди́ме, чи то престоли, чи то госпо́дства, чи то влади, чи то начальства, — усе через Нього й для Нього створено!
௧௬ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது.
17 А Він є перший від усього, і все в Нім стоїть.
௧௭அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
18 І Він — Голова тіла, Церкви. Він початок, перворо́джений з мертвих, щоб у всьому Він мав пе́ршенство.
௧௮அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்.
19 Бо вгодно було́, щоб у Нім перебува́ла вся повнота́,
௧௯எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,
20 і щоб Ним поєднати з Собою все, примиривши кров'ю хреста Його, через Нього, чи то зе́мне, чи то небесне.
௨0அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது.
21 І вас, що були́ колись відчужені й вороги думкою в злих учинках,
௨௧முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
22 тепер же примирив смертю в лю́дськім тілі Його, щоб учинити вас святими, і непорочними, і неповинними перед Собою,
௨௨நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
23 якщо тільки пробува́єте в вірі тверді́ та ста́лі, і не відпадаєте від надії Єва́нгелії, що ви чули її, яка проповідана всьому створі́нню під небом, якій я, Павло, став служи́телем.
௨௩அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
24 Тепер я радію в стражда́ннях своїх за вас, і доповнюю недостачу скорбо́ти Христової і тілі своїм за тіло Його, що воно — Церква;
௨௪இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன்.
25 якій я став служи́телем за Божим заря́дженням, що для вас мені дане, щоб виконати Слово Боже, —
௨௫ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn g165)
26 Таємницю, захо́вану від віків і поколінь, а тепер виявлену Його святим, (aiōn g165)
௨௬உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
27 що їм Бог захотів показати, яке багатство слави цієї таємниці між поганами, а вона — Христос у вас, надія слави!
௨௭யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
28 Його ми проповідуємо, нагадуючи кожній люди́ні й навчаючи кожну люди́ну всякої мудрости, щоб учинити кожну люди́ну досконалою в Христі.
௨௮எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி, எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம்.
29 У то́му й працюю я, борючи́ся силою Його, яка сильно діє в мені.
௨௯அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.

< До колоссян 1 >