< 2 царів 3 >
1 А Єгора́м, Ахавів син, зацарював над Ізраїлем у Самарії, у вісімнадцятому році Йосафа́та, Юдиного царя, і царював дванадцять років.
௧யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினெட்டாம் வருட ஆட்சியில் ஆகாபின் மகனாகிய யோராம் சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிப் பன்னிரெண்டு வருடங்கள் ஆட்சிசெய்து,
2 І чинив він лихо в Господніх оча́х, тільки не так, як ба́тько його та мати його, — він викинув Ваалового бовва́на, що зробив був батько його.
௨யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனைப் போலவும் தன் தாயைப் போலவும் அல்ல; தன் தகப்பன் உண்டாக்கிய பாகாலின் சிலையை அகற்றிவிட்டான்.
3 Проте гріхів Єровоама, Неватового сина, що вво́див у гріх Ізраїля, він трима́вся, і не відставав від них.
௩என்றாலும் இஸ்ரவேலைப் பாவம் செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் நீங்காமல் அவைகளிலே சிக்கிக்கொண்டிருந்தான்.
4 А Меша, цар моавський, розво́див дрібну́ худобу, і давав Ізраїлевому цареві сто тисяч ягнят та сто тисяч ру́нних барані́в.
௪மோவாபின் ராஜாவாகிய மேசா, திரளான ஆடுமாடுகளை உடையவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவிற்கு ஒரு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், ஒரு இலட்சம் குறும்பாட்டுக் கடாக்களையும் செலுத்திவந்தான்.
5 І сталося, як помер Ахав, то збунтувався моавський цар проти Ізра́їлевого царя.
௫ஆகாப் இறந்தபின்பு மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவிற்கு விரோதமாகக் கலகம் செய்தான்.
6 І вийшов того дня цар Єгорам із Самарії, і перелічи́в усього Ізраїля.
௬அந்தக் காலத்திலே யோராம் என்னும் ராஜா சமாரியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலையெல்லாம் எண்ணிக்கை செய்து போய்:
7 І пішов він, і послав до Йосафа́та, царя Юдиного, говорячи: „Збунтувався проти мене цар моавський. Чи пі́деш зо мною на війну до Моаву?“А той відказав: „Ви́йду. Я — як ти, мій народ — як твій народ, мої коні — як твої коні!“
௭மோவாபின் ராஜா எனக்கு விரோதமாகக் கலகம்செய்தான்; மோவாபியர்கள்மேல் போர்செய்ய, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு; அவன் நான் வருகிறேன்; நான்தான் நீர், என்னுடைய மக்கள் உம்முடைய மக்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.
8 І сказав: „Котро́ю дорогою пі́демо?“А той відказав: „Дорогою едомської пустині“.
௮எந்த வழியாகப் போவோம் என்று கேட்டான்; அதற்கு அவன்: ஏதோம் வனாந்திரவழியாகப் போவோம் என்றான்.
9 І пішов цар Ізраїлів, і цар Юдин, і цар едомський, і йшли обхідно́ю доро́гою сім день. І не було води табо́рові та худобі, що була при них.
௯அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாட்கள் சுற்றித்திரிந்தபோது, அவர்களுக்குப் பின்செல்லுகிற இராணுவத்திற்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாமல்போனது.
10 І сказав Ізраїлів цар: „Ах, Госпо́дь ви́кликав трьох оцих царів, щоб віддати їх у руку Моава“.
௧0அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் யெகோவா மோவாபியர்களின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.
11 І сказав Йосафа́т: „Чи нема тут Господнього пророка, щоб через нього вивідати слово Господа?“І відповів один із слуг Ізраїлевого царя й сказав: „Тут є Єлисей, Шафатів син, що служив Іллі“.
௧௧அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிப்பதற்கு யெகோவாவுடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் ஊற்றிய சாப்பாத்தின் மகனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் வேலைக்காரர்களில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான்.
12 І сказав Йосафа́т: „Слово Господнє з ним!“І зійшли до нього цар Ізраїлів, і Йосафат, і цар едомський.
௧௨அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: யெகோவாவுடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்திற்குப் போனார்கள்.
13 І сказав Єлисей до Ізраїлевого царя: „Що́ тобі до мене? Іди до пророків батька свого та до пророків своєї матері!“А Ізраїлів цар відказав йому: „Ні, бо Госпо́дь покли́кав трьох цих царів, щоб віддати їх у руку Моава“.
௧௩எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பன் மற்றும் தாயாருடைய தீர்க்கதரிசிகளிடம் போ என்றான்; அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, யெகோவா இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியர்களின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.
14 І сказав Єлисей: „ Як живий Госпо́дь Савао́т, що я стою́ перед лицем Його, — коли б я не зважа́в на Йосафата, Юдиного царя, не спогля́нув би на тебе, і не побачив би я тебе.
௧௪அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பார்க்காமலிருந்தால் நான் உம்மைக் கவனிக்கவும் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய யெகோவாவுக்கு முன் நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
15 А тепер приведіть мені гусляра́“. І сталося, коли грав гусля́р, то на Єлисеї була Господня рука,
௧௫இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது யெகோவாவுடைய கரம் அவன்மேல் இறங்கி,
16 і він сказав: „Так сказав Господь: Накопайте на цій долині яму за ямою!
௧௬அவன்: யெகோவா உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்.
17 Бо так сказав Господь: Не побачите вітру, і не побачите дощу́, а поті́к цей бу́де напо́внений водою. І бу́дете пити ви, та че́реди ваші, та ваша худо́ба.
௧௭நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும், உங்களுடைய ஆடுமாடுகளும் கால்நடைகளும் குடிப்பதற்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று யெகோவா சொல்லுகிறார்.
18 Та буде цього мало в Господніх оча́х, — і Він видасть і Моава в вашу руку.
௧௮இது யெகோவாவின் பார்வைக்கு சாதாரணகாரியம்; மோவாபியர்களையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்.
19 І ви поб'є́те всяке укріплене місто та всяке місто ви́бране, і всяке добре дерево повалите, і всі водні джере́ла зага́тите, і всяку добру полеву́ діля́нку завалите камі́нням“.
௧௯நீங்கள் சகல கோட்டைகளையும், சிறந்த பட்டணங்களையும் தகர்த்து நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் அடைத்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.
20 І сталося ра́нком, коли прино́ситься хлі́бна жертва, аж ось полила́ся вода з едомської дороги. І напо́внилася земля водою.
௨0அடுத்தநாள் காலையில் பலிசெலுத்துகிற நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாக வந்ததால் தேசம் தண்ணீரால் நிரம்பினது.
21 А ввесь Моав почув, що ті царі вийшли воювати з ними. І вони скли́кали всіх, хто но́сить по́яса й старше, і постава́ли на границі.
௨௧தங்களோடு போர்செய்ய ராஜாக்கள் வருகிறதை மோவாபியர்கள் அனைவரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் பயன்படுத்தக்கூடிய வயதுள்ளவர்களையும், அதற்குமேல் தகுதியானவர்கள் எல்லோரையும் சேர்த்து அழைத்துக்கொண்டுவந்து எல்லையிலே நின்றார்கள்.
22 І повстава́ли вони рано вранці, і сонце засвітило над водою. І побачили моавляни навпроти воду, червону, як кров.
௨௨மோவாபியர்கள் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின்மேல் பிரகாசித்ததால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தத்தைப் போல சிவப்பாகக் காணப்பட்டது.
23 І казали вони: „Це кров, — рубаючися, поруба́лися царі меча́ми, і позабива́ли один о́дного. А тепер на здо́бич, Моаве!“
௨௩அதனால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு இறந்துபோனார்கள்; ஆதலால் மோவாபியர்களே, கொள்ளையிட வாருங்கள் என்று சொன்னார்கள்.
24 І прийшли вони до Ізраїлевого табо́ру. І встав Ізраїль та й побив моавля́н, і ті повтіка́ли перед ними. І вони ввійшли до них, і били моавля́н,
௨௪அவர்கள் இஸ்ரவேலின் முகாமிற்கு வந்தபோது, இஸ்ரவேலர்கள் எழும்பி, மோவாபியர்களைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாகத் தாக்கி, அவர்களுடைய தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியர்களைத் தாக்கி,
25 а міста руйнува́ли, і на всяку добру польову́ діля́нку — усі ки́дали свого ка́меня й закида́ли її, і всяке джерело́ води зага́чували, і вали́ли всяке добре дерево, й аж тільки в Кір-Харешеті позоста́вили камі́ння його. І оточи́ли тарани́, та й били його.
௨௫பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலங்களிலும் கற்களால் நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் அடைத்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிக்கப்படாமல் இருக்கிறபோது; கவண்காரர்கள் அதைச் சுற்றிவளைத்து அதையும் சேதமாக்கினார்கள்.
26 І побачив моавський цар, що бій перемага́є його́, і взяв він сім сотень чоловіка, що орудують мече́м, щоб проде́ртися до едомського царя́, та не зміг.
௨௬போர் மும்முரமாகிறதென்று மோவாபியர்களின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் கடுமையாகத் தாக்குகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டுபோனான்; ஆனாலும் அவர்களாலே முடியாமல்போனது.
27 І він узяв свого перворі́дного сина, що мав царюва́ти замість нього, і приніс його цілопа́ленням на мурі. І повстав великий гнів на Ізраїля, — і вони відступи́ли від нього, і верну́лися до свого кра́ю.
௨௭அப்பொழுது அவன் தன்னுடைய இடத்தில் ராஜாவாகப்போகிற தன் மூத்த மகனைப் பிடித்து, மதிலின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்கள்மேல் கடுங்கோபம் ஏற்பட்டதால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள்.