< 2 хроніки 10 >

1 І пішов Рехав'ам до Сихе́му, бо до Сихему зійшовся ввесь Ізраїль, щоб настанови́ти його царем.
ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர்கள் எல்லோரும் சீகேமுக்கு வந்திருந்ததால், அவனும் சீகேமுக்குப் போனான்.
2 І сталося, як почув це Єровоа́м, Неватів син, — він був в Єгипті, куди втік від царя Соломона, — то вернувся Єровоам з Єгипту.
ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் அதைக் கேட்டபோது, அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான்.
3 І послали й покликали його. І прийшов Єровоам та ввесь Ізра́їль, і вони говорили до Рехав'ама, кажучи:
ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; பின்பு யெரொபெயாமும் இஸ்ரவேலர்கள் அனைவரும் வந்து, ரெகொபெயாமை நோக்கி:
4 „Твій батько вчинив був тяжки́м наше ярмо́, а ти полегши́ жорсто́ку роботу батька свого та тяжке́ його ярмо, що наклав він був на нас, і ми бу́демо служити тобі“.
உம்முடைய தகப்பன் பாரமான சுமையை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான சுமையையும் எளிதாக்கும்; அப்பொழுது உமக்கு சேவை செய்வோம் என்றார்கள்.
5 А він відказав їм: „ Ідіть ще на три дні, і верніться до ме́не“. І пішов той наро́д.
அதற்கு அவன்: நீங்கள் மூன்று நாட்களுக்குப்பின்பு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே மக்கள் போனார்கள்.
6 І радився цар Рехав'а́м зо старши́ми, що стояли перед обличчям його батька Соломона, коли він був живий, говорячи: „Як ви радите відповісти́ цьому́ наро́дові?“
அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கும்போது அவனுக்கு முன்பாகநின்ற முதியோர்களிடம் ஆலோசனைசெய்து, இந்த மக்களுக்கு மறுஉத்திரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
7 І вони говорили йому, кажучи: „Якщо ти будеш добрим для цього наро́ду, і зробиш за волею їх, і говори́тимеш їм добрі слова́, то вони будуть тобі раба́ми по всі дні“.
அதற்கு அவர்கள்: நீர் இந்த மக்களுக்கு தயவையும் ஆதரவையும் காண்பித்து, அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரர்களாக இருப்பார்கள் என்றார்கள்.
8 Та він відкинув пораду старши́х, що радили йому, і радився з молодика́ми, що ви́росли ра́зом із ним, що стояли перед ним.
முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடு வளர்ந்தவர்களும் தனக்கு முன்பாக நிற்கிறவர்களுமாகிய வாலிபர்களோடு ஆலோசனைசெய்து,
9 І сказав він до них: „Що́ ви радите, і що́ відповімо́ цьому́ наро́дові, який говорив мені, кажучи: Полегши́ ярмо́, яке твій ба́тько наклав був на нас“.
அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த சுமையை எளிதாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு மறுஉத்திரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
10 І говорили з ним ті молодики́, що виросли з ним, кажучи: „Так скажеш тому наро́дові, що промовляв до тебе, говорячи: „Твій ба́тько вчинив був тяжки́м наше ярмо́, а ти дай поле́гшу нам.“Отак скажеш до них: Мій мізи́нець грубілий за сте́гна мого батька!
௧0அவனோடு வளர்ந்த வாலிபர்கள் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் சுமையை பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு எளிதாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.
11 А тепер: мій батько наклав був на вас тяжке́ ярмо, а я доба́влю до вашого ярма! Батько мій карав вас бича́ми, а я би́тиму скорпіо́нами“.
௧௧இப்போதும் என் தகப்பன் பாரமான சுமையை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் சுமையை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொல்லும் என்றார்கள்.
12 І прийшов Єровоам та ввесь народ до Рехав'ама третього дня, як цар говорив, кажучи: „Верніться до мене третього дня“.
௧௨மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் அனைத்து மக்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.
13 І цар жорсто́ко відповів їм. І відкинув цар Рехав'ам пораду старши́х,
௧௩ராஜாவாகிய ரெகொபெயாம் முதியோரின் ஆலோசனையைத் தள்ளிவிட்டு, அவர்களுக்குக் கடினமான பதில் கொடுத்தான்.
14 і говорив до них за порадою тих молодикі́в, кажучи: „Мій батько вчинив був тяжки́м ваше ярмо, а я добавлю до нього! Батько мій карав вас бичами, а я — скорпіонами!“
௧௪வாலிபர்களுடைய ஆலோசனையின்படியே அவர்களோடு பேசி, என் தகப்பன் உங்கள் சுமையை பாரமாக்கினார்; நான் அதை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொன்னான்.
15 І не послухався цар наро́ду, бо це спричи́нене було від Бога, — щоб спра́вдити Господе́ві слово Своє, яке Він говорив був через шілонянина Ахійю, Неватового сина.
௧௫ராஜா, மக்கள் சொல்வதைக் கேட்காமற்போனான்; யெகோவா சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்த தேவனாலே இப்படி நடந்தது.
16 І побачив увесь Ізраїль, що цар не послухався їх, і народ відповів царе́ві, кажучи: „Яка нам части́на в Давиді? І спа́дщини нема нам у сині Єссе́я! Усі до наметів своїх, о Ізраїлю! Позна́й тепер дім свій, Давиде!“І пішов увесь Ізраїль до наметів своїх...
௧௬தாங்கள் சொன்னதை ராஜா கேட்கவில்லை என்று இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது, மக்கள் ராஜாவுக்கு மறுமொழியாக: “தாவீதோடு எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் மகனிடத்தில் எங்களுக்கு உரிமை இல்லை; இஸ்ரவேலே உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி,” இஸ்ரவேலர்கள் எல்லோரும் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
17 А Ізраїлеві сини, що сиділи в Юдиних містах, — то над ними зацарюва́в Рехав'ам.
௧௭ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் மக்கள்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.
18 І послав цар Рехав'ам Гадорама, що був над дани́ною, та Ізра́їлеві сини закидали його камі́нням, і він помер. А цар Рехав'ам поспішив сісти на колесни́цю та втекти́ до Єрусалиму.
௧௮பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் கட்டாய வேலைக்காரர்களின் தலைவனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேல் மக்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் விரைவாக இரதத்தின்மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனான்.
19 І відпав Ізраїль від Давидового дому, і так є аж до цього дня.
௧௯அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர்கள் தாவீதின் வம்சத்தைவிட்டுக் கலகம்செய்து பிரிந்துபோயிருக்கிறார்கள்.

< 2 хроніки 10 >