< 2 хроніки 10 >
1 І пішов Рехав'ам до Сихе́му, бо до Сихему зійшовся ввесь Ізраїль, щоб настанови́ти його царем.
ரெகொபெயாம் சீகேமுக்குப் போனான், ஏனெனில் இஸ்ரயேலர் எல்லோரும் அவனை அரசனாக்குவதற்காக அங்கே போயிருந்தார்கள்.
2 І сталося, як почув це Єровоа́м, Неватів син, — він був в Єгипті, куди втік від царя Соломона, — то вернувся Єровоам з Єгипту.
அரசனாகிய சாலொமோனுக்குப் பயந்து எகிப்தில் அடைக்கலம் புகுந்த நேபாத்தின் மகன் யெரொபெயாம் இதைக் கேள்விப்பட்டான். அப்பொழுது அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான்.
3 І послали й покликали його. І прийшов Єровоам та ввесь Ізра́їль, і вони говорили до Рехав'ама, кажучи:
எனவே ஆள் அனுப்பி அவர்கள் யெரொபெயாமை வரவழைத்து, பின் அவனும் எல்லா இஸ்ரயேலரும் ரெகொபெயாமிடம் வந்து,
4 „Твій батько вчинив був тяжки́м наше ярмо́, а ти полегши́ жорсто́ку роботу батька свого та тяжке́ його ярмо, що наклав він був на нас, і ми бу́демо служити тобі“.
“உமது தகப்பன் எங்கள்மேல் பாரமான சுமையை வைத்தார், ஆனால் இப்பொழுது நீர் அவர் எங்கள்மேல் வைத்த கடினமான உழைப்பையும், பாரமான சுமையையும் இலகுவாக்கும். அப்பொழுது நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்” என்றனர்.
5 А він відказав їм: „ Ідіть ще на три дні, і верніться до ме́не“. І пішов той наро́д.
அதற்கு ரெகொபெயாம், “மூன்று நாட்களில் திரும்பவும் என்னிடம் வாருங்கள்” என்றான். எனவே மக்கள் போய்விட்டார்கள்.
6 І радився цар Рехав'а́м зо старши́ми, що стояли перед обличчям його батька Соломона, коли він був живий, говорячи: „Як ви радите відповісти́ цьому́ наро́дові?“
அதன்பின்பு, அரசன் ரெகொபெயாம் தன் தகப்பன் சாலொமோனின் காலத்தில் அவரிடம் பணிசெய்த முதியோருடன் கலந்து ஆலோசனை செய்தான். அவன் அவர்களிடம், “இந்த மக்களுக்கு நான் பதில்சொல்வதற்கு நீங்கள் என்ன ஆலோசனை சொல்கிறீர்கள்?” எனக் கேட்டான்.
7 І вони говорили йому, кажучи: „Якщо ти будеш добрим для цього наро́ду, і зробиш за волею їх, і говори́тимеш їм добрі слова́, то вони будуть тобі раба́ми по всі дні“.
அதற்கு அவர்கள், “நீர் இந்த மக்களுக்குத் தயவுகாட்டி, அவர்களைப் பிரியப்படுத்தி, அவர்களுக்கு சாதகமான பதிலைக் கொடுப்பீரானால் அவர்கள் எப்பொழுதும் உமது பணியாட்களாயிருப்பார்கள்” என்றார்கள்.
8 Та він відкинув пораду старши́х, що радили йому, і радився з молодика́ми, що ви́росли ра́зом із ним, що стояли перед ним.
ஆனால் ரெகொபெயாம் முதியோர் தனக்குக் கூறிய புத்திமதியை உதாசீனம் செய்துவிட்டு, தன்னுடன் வளர்ந்து தனக்குப் பணிசெய்த வாலிபரிடம் ஆலோசனை கேட்டான்.
9 І сказав він до них: „Що́ ви радите, і що́ відповімо́ цьому́ наро́дові, який говорив мені, кажучи: Полегши́ ярмо́, яке твій ба́тько наклав був на нас“.
அவன் அவர்களிடம், “‘உமது தகப்பன் எங்கள்மேல் வைத்த பாரத்தை எளிதாக்கும்’ என்று கேட்கிற இந்த மக்களுக்கு நான் பதில் கொடுப்பதற்கு நீங்கள் எனக்கு என்ன ஆலோசனை தருவீர்கள்?” என்று கேட்டான்.
10 І говорили з ним ті молодики́, що виросли з ним, кажучи: „Так скажеш тому наро́дові, що промовляв до тебе, говорячи: „Твій ба́тько вчинив був тяжки́м наше ярмо́, а ти дай поле́гшу нам.“Отак скажеш до них: Мій мізи́нець грубілий за сте́гна мого батька!
அவனுடன் வளர்ந்த வாலிபர்கள், “உமது தகப்பன் எங்கள்மேல் பாரமான நுகத்தை வைத்தார், நீர் எங்கள் நுகத்தை இலகுவாக்கும் என உம்மிடம் சொல்கிற அந்த மக்களிடம், எனது சிறிய விரல் என் தகப்பனின் இடுப்பைவிடத் தடிமனானது என்று சொல்லும்.
11 А тепер: мій батько наклав був на вас тяжке́ ярмо, а я доба́влю до вашого ярма! Батько мій карав вас бича́ми, а я би́тиму скорпіо́нами“.
அத்துடன் என் தகப்பன் உங்கள்மேல் பாரமான சுமையைச் சுமத்தினார். நான் இதை இன்னும் பாரமாக்குவேன். என் தகப்பன் உங்களைச் சவுக்கினால் அடித்தார். நான் உங்களைத் தேள்களின் வேதனையைப்போன்ற சாட்டையினால் அடிப்பேன் என்று சொல்லும்” என்றார்கள்.
12 І прийшов Єровоам та ввесь народ до Рехав'ама третього дня, як цар говорив, кажучи: „Верніться до мене третього дня“.
“மூன்று நாட்களுக்குப்பின் என்னிடம் திரும்பிவாருங்கள்” என்று அரசன் கூறியபடியே நாட்களுக்குப்பின் யெரொபெயாமும் எல்லா மக்களும் ரெகொபெயாமிடம் திரும்பி வந்தார்கள்.
13 І цар жорсто́ко відповів їм. І відкинув цар Рехав'ам пораду старши́х,
அப்போது அரசன் ரெகொபெயாம் அவர்களுக்குக் கடுமையாகப் பதிலளித்தான். முதியோர் அவனுக்குக் கொடுத்த புத்திமதியைத் தள்ளிவிட்டு,
14 і говорив до них за порадою тих молодикі́в, кажучи: „Мій батько вчинив був тяжки́м ваше ярмо, а я добавлю до нього! Батько мій карав вас бичами, а я — скорпіонами!“
வாலிபரின் ஆலோசனையைப் பின்பற்றி மக்களிடம், “என் தகப்பன் உங்கள்மேல் பாரமான சுமையைச் சுமத்தினார். நான் இதை இன்னும் பாரமாக்குவேன். என் தகப்பன் உங்களைச் சவுக்கினால் அடித்தார். நான் உங்களைத் தேள்களின் வேதனையைப்போன்ற சாட்டையினால் அடிப்பேன்” என்றான்.
15 І не послухався цар наро́ду, бо це спричи́нене було від Бога, — щоб спра́вдити Господе́ві слово Своє, яке Він говорив був через шілонянина Ахійю, Неватового сина.
இப்படியாக அரசன் மக்களின் வேண்டுகோளைக் கவனிக்கவில்லை. நேபாத்தின் மகனான யெரொபெயாமுக்கு சீலோவைச் சேர்ந்த அகியா என்ற இறைவாக்கினன் மூலம் கூறிய யெகோவாவின் வார்த்தையை நிறைவேற்றும்படி, இந்த மாறுதலான நிகழ்வுகள் இறைவனிடமிருந்தே வந்தன.
16 І побачив увесь Ізраїль, що цар не послухався їх, і народ відповів царе́ві, кажучи: „Яка нам части́на в Давиді? І спа́дщини нема нам у сині Єссе́я! Усі до наметів своїх, о Ізраїлю! Позна́й тепер дім свій, Давиде!“І пішов увесь Ізраїль до наметів своїх...
அரசன் தங்களுக்கு செவிகொடுக்க மறுத்ததைக் கண்ட எல்லா இஸ்ரயேலரும் அரசனிடம் சொன்னதாவது: “தாவீதிடம் எங்களுக்கு என்ன பங்குண்டு? ஈசாயின் மகனிடம் எங்களுக்கு என்ன பாகமுண்டு? இஸ்ரயேலரே உங்கள் கூடாரங்களுக்குப் போங்கள்! தாவீதே, உன் சொந்த வீட்டைக் கவனித்துக்கொள்!” எனவே எல்லா இஸ்ரயேலரும் தங்கள் வீடுகளுக்குப் போய்விட்டார்கள்.
17 А Ізраїлеві сини, що сиділи в Юдиних містах, — то над ними зацарюва́в Рехав'ам.
ஆனால் யூதாவில் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரயேலரைப் பொறுத்தமட்டில் அவர்கள் எல்லோர்மேலும் இன்னும் ரெகொபெயாம் ஆட்சிசெய்தான்.
18 І послав цар Рехав'ам Гадорама, що був над дани́ною, та Ізра́їлеві сини закидали його камі́нням, і він помер. А цар Рехав'ам поспішив сісти на колесни́цю та втекти́ до Єрусалиму.
அரசன் ரெகொபெயாம் கட்டாய வேலைக்குப் பொறுப்பாயிருந்த அதோராமை மக்களிடம் அனுப்பினான். ஆனால் இஸ்ரயேலர்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றுவிட்டார்கள். அரசன் ரெகொபெயாம் எப்படியோ ஒருவழியாகத் தனது தேரில் ஏறி எருசலேமுக்குத் தப்பி ஓடினான்.
19 І відпав Ізраїль від Давидового дому, і так є аж до цього дня.
இவ்வாறு இஸ்ரயேலர் தாவீதின் வீட்டாருக்கெதிராக இந்நாள்வரைக்கும் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள்.