< 1 хроніки 26 >

1 Че́рги придве́рних, від Кора́хівців: Мешелемія, син Коре, з Асафових синів.
ஆலய வாசல் காவலர்களின் பிரிவுகள்: கோராகியரிலிருந்து ஆசாப்பின் மகன்களில் ஒருவனான கோரேயின் மகன் மெஷெலேமியா.
2 А в Мешелемії сини: перворо́джений — Захарій, другий — Єдіаїл, третій — Зевадія, четвертий — Ятніїл,
மெஷெலேமியாவிற்கு மகன்கள் இருந்தார்கள்: மூத்தவன் சகரியா, இரண்டாவது எதியாயேல், மூன்றாவது செபதியா, நான்காவது யதனியேல்.
3 п'ятий — Елам, шостий — Єгоханан, сьомий — Ел'єгоенай.
ஐந்தாவது ஏலாம், ஆறாவது யோகனான், ஏழாவது எலியோனாய் என்பவர்கள்.
4 А в Овед-Едома сини: перворо́джений — Шемая, другий — Єгозавад, третій — Йоах, четвертий — Сахар, і п'ятий — Натанаїл,
ஓபேத் ஏதோமுக்கும் மகன்கள் இருந்தார்கள்: மூத்தவன் செமாயா, இரண்டாவது யெகோசபாத், மூன்றாவது யோவாக், நான்காவது சாக்கார், ஐந்தாவது நெதனெயேல்,
5 шо́стий — Амміїл, сьо́мий — Іссахар, во́сьмий — Пеуллетай, бо поблагословив його Бог.
ஆறாவது அம்மியேல், ஏழாவது இசக்கார், எட்டாவது பெயுள்தாயி என்பவர்கள். ஏனெனில் இறைவன் ஓபேத் ஏதோமை ஆசீர்வதித்திருந்தார்.
6 У сина його Шемаї народи́лися сини, що панували над домом їхнього батька, бо вони — хоробрі вояки́.
ஓபேத் ஏதோமின் மகன் செமாயாவுக்கும்கூட மகன்கள் இருந்தார்கள். அவர்கள் ஆற்றல்மிக்கவர்களாய் இருந்தபடியால், தங்கள் தகப்பன் குடும்பத்தில் தலைவர்களாயிருந்தனர்.
7 Сини Шемаї: Отні, і Рефаїл, і Овед, Елзавад; його брати, мужі хоробрі, — Елігу та Шемахія.
செமாயாவின் மகன்கள்: ஒத்னி, ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத் என்பவர்கள். அவர்களுடைய உறவினர்களான எலிகூ, செமகியா என்பவர்களும் ஆற்றல்மிக்கவர்களாய் இருந்தார்கள்.
8 Усі ці — з Оведових сині́в; вони й сини та брати їхні — кожен хоробрий муж у силі до праці, шістдеся́т і два для Овед-Едома.
இவர்கள் எல்லோரும் ஓபேத் ஏதோமின் வம்சங்களாயிருந்தார்கள்; இவர்களும் இவர்களது மகன்களும், உறவினர்களும் வேலைசெய்வதற்கு பலமும் ஆற்றலும் உடையவர்களாயிருந்தனர். ஓபேத் ஏதோமின் சந்ததிகள் எல்லாம் அறுபத்திரண்டுபேர்.
9 А в Мешелемії було синів та братів, мужів хоробрих, вісімнадцять.
மெஷெலேமியாவுக்கு மகன்களும் உறவினர்களும் எல்லாமாக பதினெட்டுப்பேர் இருந்தார்கள். அவர்களும் ஆற்றல்மிக்க மனிதராயிருந்தார்கள்.
10 А в Хоси, з синів Мерарі, сини: голова — Шімрі, бо хоч не був він перворо́джений, та батько його настановив його за голову:
மெராரியனான ஓசாவுக்கும் மகன்கள் இருந்தார்கள்: மூத்த மகன் சிம்ரி. இவன் முதல் பிறந்தவனல்லாதபோதிலும் அவன் தகப்பன் ஓசா இவனை மூத்தவனாக நியமித்திருந்தான்.
11 другий — Хілкійя, третій — Тевалія, четвертий Захарій; усіх синів та братів у Хоси — тринадцять.
இரண்டாம் மகன் இல்க்கியா, மூன்றாம் மகன் தெபலியா, நான்காம் மகன் சகரியா. ஓசாவின் மகன்களும், அவனுடைய உறவினர்களும் மொத்தம் பதிமூன்றுபேர்.
12 У цих були че́рги придве́рних, за головами мужчин, че́рги відповідно до їхніх братів на слу́ження в Господньому домі.
இந்த வாசல் காவலர்களின் பிரிவினரும், அவர்களுடைய உறவினர்களுக்கிருந்தது போலவே யெகோவாவின் ஆலயத்தில் பணியாற்றும் கடமைகளைத் தலைவர்களுக்கு வழியாகப் பெற்றிருந்தார்கள்.
13 І кинули вони жеребки́, як малий, так і великий, за домом їхніх батьків, для кожної брами.
அவர்களுடைய குடும்பங்களுக்கேற்றவாறு இளைஞர், முதியவர் என்ற வேறுபாடின்றி, ஒவ்வொரு வாசலுக்குமென சீட்டுபோடப்பட்டது.
14 І впав жеребо́к на схід для Шелемії. І кинули жеребки́ для сина його Захарія, мудрого дорадника, і вийшов жеребок його на пі́вніч,
கிழக்கு வாசலுக்குரிய சீட்டு செலேமியாவிற்கு விழுந்தது. வடக்கு வாசலுக்குரிய சீட்டு அவனுடைய மகனான சகரியாவிற்கு விழுந்தது. அவன் ஞானமுள்ள ஆலோசனை கூறுபவன்.
15 для Овед-Едома, — на пі́вдень, а для синів його — комо́ри.
தெற்கு வாசலுக்குரிய சீட்டு ஓபேத் ஏதோமிற்கும், பண்டகசாலைக்குரிய சீட்டு அவனுடைய மகன்களுக்கும் விழுந்தன.
16 Для Шуппіма та для Хоси — на за́хід, ра́зом із брамою Шаллехет, де підійма́ється битий шлях, ва́рта навпроти ва́рти.
மேற்கு வாசலுக்குரிய சீட்டும், மேல்தெருவிலுள்ள சலேகேத் வாசலுக்குரிய சீட்டும் சுப்பீமுக்கும், ஓசாவுக்கும் விழுந்தன. வாசல் காவலர்களுக்குரிய இடங்கள் முறைப்படி அடுத்தடுத்து அமைந்திருந்தன.
17 На схід — шість Левитів, на північ — четверо на день, на пі́вдень — четверо на день, а для комори — по двоє.
நாள்தோறும் கிழக்கில் ஆறு லேவியர்களும், வடக்கில் நான்கு லேவியர்களும், தெற்கில் நான்கு லேவியர்களும் இருந்தனர். களஞ்சியத்திற்கு ஒரே தடவையில் இரண்டு லேவியர்கள் இருந்தார்கள்.
18 Для Парбару на за́хід — четверо для битого шля́ху, двоє для Парбару.
மேற்கில் இருந்த முற்றத்தின் வீதியில் நான்கு லேவியர்களும், முற்றத்திற்கு இரண்டு லேவியர்களும் நிறுத்தப்பட்டனர்.
19 Оце че́рги придве́рних із синів Корахівців та з синів Мерарі.
கோராகு, மெராரி ஆகியோரின் வழித்தோன்றல்களிலிருந்து வாசல் காவலர்களின் பிரிவுகள் இவையே.
20 А Левити: Ахійя був над ска́рбами Божого дому та до скарбів святині.
அவர்களுடைய உடனொத்த லேவியர்கள் இறைவனின் ஆலயத்திலிருந்த திரவியக் களஞ்சியங்களுக்கும், அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களின் களஞ்சியங்களுக்கும் பொறுப்பாயிருந்தனர்.
21 Сини Ладана, сини Ґершонівців, від Ладана, голови дому батьків, від Ладана Ґершонівця: Єхилі.
லாதான் கெர்சோனியரின் சந்ததிகளில் ஒருவன். கெர்சோனியனான லாதானைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள் யெகியேலியும்,
22 Сини Єхіїлі: Зетам та Йоїл, брат його, над ска́рбами Господнього дому.
யெகியேலியின் மகன்களான சேத்தாமும், அவன் சகோதரன் யோயேலுமே. அவர்கள் யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சியத்துக்குப் பொறுப்பாயிருந்தார்கள்.
23 Для Амрамівців, для Їцгарівців, для Хевронівців, для Аззіїлівців:
மேலும் அம்ராமியர், இத்சாரியர், எப்ரோனியர், ஊசியேலியரிலிருந்து பொறுப்பு கொடுக்கப்பட்டவர்கள்:
24 Шевуїл, син Ґершома, сина Мойсея, — володар над скарбами.
மோசேயின் மகன் கெர்சோமின் வழித்தோன்றலில் வந்த செபுயேல் என்பவன் திரவிய களஞ்சியங்களுக்குப் பொறுப்பதிகாரியாயிருந்தான்.
25 А брати його від Еліезера: його син — Рехавія, і його син Ісая, і його син — Йорам, і його син — Зіхрі, і його син — Шеломіт.
எலியேசர் மூலமாய் அவனுக்கிருந்த உறவினர்கள்: எலியேசரின் மகன் ரெகேபியா, அவனுடைய மகன் எஷாயா, அவனுடைய மகன் யோராம், அவனுடைய மகன் சிக்ரி, அவனுடைய மகன் செலோமித் என்பவர்கள்.
26 Цей Шеломіт та брати його були над усіма́ ска́рбами святині, які посвятив цар Давид та голови дому батьків, і тисячники, і сотники та зверхники війська, —
செலோமித்தும், அவனுடைய உறவினர்களும் தாவீது அரசனால் அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களின் களஞ்சியங்களுக்குப் பொறுப்பாயிருந்தனர். இவை குடும்பங்களின் தலைவர்களாயிருந்த ஆயிரம்பேரின் தளபதிகளினாலும், நூறுபேரின் தளபதிகளினாலும், மற்ற தளபதிகளினாலும் அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களும் இருந்தன.
27 з во́єн та зо здо́бичі вони присвячували на підтри́мання Господнього дому, —
இவர்கள் போர்க்களத்திலிருந்து கொண்டுவந்த கொள்ளைப்பொருட்களில் சிலவற்றை யெகோவாவின் ஆலயத்தைத் திருத்துவதற்காக அர்ப்பணித்தார்கள்.
28 і все, що посвятив прозорли́вець Самуїл, і Саул, син Кішів, і Авнер, син Нерів, і Йоав, син Церуїн, — усе посвячене було в руці Шеломіта та братів його.
இவ்வாறு தரிசனக்காரனான சாமுயேல், கீஷின் மகன் சவுல், நேரின் மகன் அப்னேர், செருயாவின் மகன் யோவாப் ஆகியோரால் அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களும் மற்ற அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களும் செலோமித்தின் பராமரிப்பிலும் அவனுடைய உறவினர்களுடைய பராமரிப்பிலும் இருந்தன.
29 Від Їцгарівців: Кенанія та сини його — на зо́внішню роботу над Ізраїлем, на писарі́в та на су́ддів.
இத்சாரியரைச் சேர்ந்தவர்கள்: கெனனியாவும், அவனுடைய மகன்களும் ஆலயத்தின் வெளியே வேலைகளைக் கவனிப்பதற்கும், இஸ்ரயேலருக்கு மேலாக நீதிபதிகளாகவும், அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டார்கள்.
30 Від Хевронівців: Хашавія та брати його, мужі хоробрі, тисяча й сім сотень, — над пере́глядом Ізраїля з другого боку Йорда́ну на за́хід, для всякої Господньої праці та для роботи царсько́ї.
எப்ரோனியரைச் சேர்ந்தவர்கள்: அஷபியாவும், அவனுடைய உறவினருமாக 1,700 ஆற்றல்மிக்க மனிதர்கள் இருந்தனர். இவர்கள் யோர்தானின் மேற்கேயிருந்த இஸ்ரயேலரில் எல்லா வேலைகளுக்கும், யெகோவாவின் பணிக்கும், அரசனின் பணிக்கும் பொறுப்பாயிருந்தனர்.
31 Від Хевронівців: Єрійя — голова для Хевронівця, для його наща́дків, за домом батьків. У сороковому році Давидового царюва́ння вони були досліджені, і серед них зна́йдено хоробрих мужів в гілеадському Язері.
எப்ரோனியருக்கு அவர்களுடைய குடும்ப வம்சவரலாற்று பதிவேட்டின்படி யெரியா தலைவனாயிருந்தான். தாவீதின் அரசாட்சியின் நாற்பதாவது வருடத்தில் பதிவேடுகள் ஆராயப்பட்டன. அப்போது எப்ரோனியர் மத்தியில் கீலேயாத்திலுள்ள யாசேர் என்னும் இடத்தில் ஆற்றல்மிக்க மனிதர்கள் இருப்பதைக் கண்டனர்.
32 А брати його — мужі хоробрі, дві тисячі й сім сотень, го́лови дому батьків. І цар Давид настанови́в їх над Руви́мівцями і над Ґадівцями та над половиною племени Манасіїного для всякої Божої справи та справи царсько́ї.
எரியாவுக்கு ஆற்றல்மிக்க குடும்பத் தலைவர்களான உறவினர் 2,700 பேர் இருந்தனர். இவர்களைத் தாவீது அரசன் ரூபனியர், காத்தியர், மனாசேயின் பாதிக்கோத்திரத்தினர் ஆகியோருக்கும், இறைவனோடு சம்பந்தப்பட்ட காரியங்களுக்கும், அரசனுடைய விவகாரங்களுக்கும் பொறுப்பாக வைத்தான்.

< 1 хроніки 26 >