< Об'явлення 14 >

1 І поглянув я, і ось, Агнець стоїть на X. горі Сіон, а з ним сто сорок чотири тисяч, у котрих імя Отця Його написано на чолї їх.
பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடு அவருடைய பிதாவின் பெயர் தங்களுடைய நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேரும் நிற்பதைப் பார்த்தேன்.
2 І чув я голос із неба, наче голос многих вод, і наче голос великого грому; і чув я голос кобзарів, що грали на кобзах своїх.
அல்லாமலும், பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர்கள் தங்களுடைய சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது.
3 І сьпівають, як би нову пісню, перед престолом, і перед чотирма животними і старцями. І нїхто не зміг навчитись піснї, тільки сто сорок чотири тисячі, що викуплені від землї.
அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம் நபர்களைத்தவிர வேறொருவரும் கற்றுக்கொள்ளமுடியாமல் இருந்தது.
4 Се що не опоганились з жінками, вони бо чисті. Се що йдуть слїдом за Агнцем, де б Він не йшов. Се що викуплені від людей, первістки Богу і Агнцеві.
பெண்களால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே சென்றாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனிதர்களில் இருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
5 І в устах їх не знайшов ся підступ; вони бо непорочні перед престолом Божим.
இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக குற்றமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.
6 І бачив я иншого ангела, що летів серед неба, а в нього Євангелия вічна, що мав її благовіствувати домуючим на землї, і всякому народові, і родові, і язикові, і людові, (aiōnios g166)
பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, (aiōnios g166)
7 глаголючи голосом великим: Бій-те ся Бога, і дайте славу Йому, прийшла бо година суду Його; і покланяйтесь Тому, що створив небо і землю і море і жерела вод.
அதிக சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது; வானத்தையும் பூமியையும் கடலையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரைத் தொழுதுகொள்ளுங்கள் என்று சொன்னான்.
8 І другий ангел ішов слїдом (за ними), глаголючи: Упав, упав Вавилон, великий город, що пристрастним вином блудодїяння свого напоїв всї народи.
வேறொரு தூதன் பின்னேசென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான்.
9 І третїй ангел ійшов слїдом за ними, глаголючи голосом великим: Коли хто покланяєть ся перед зьвіром і образом його, і приймає пятно на чоло своє, або на руку свою,
அவர்களுக்குப் பின்னால் மூன்றாம் தூதன் வந்து, அதிக சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்கித் தன் நெற்றியிலோ தன் கையிலோ அதின் முத்திரையை அணிந்து கொள்ளுகிறவன் எவனோ,
10 той пити ме також од вина гнїва Божого, намішаного, наточеного в чашу гнїва Його; і буде мучений в огнї і сїрцї перед сьвятими ангелами і перед Агнцем.
௧0அவன் தேவனுடைய கோபத்தின் தண்டனையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் ஊற்றப்பட்ட அவருடைய கோபமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.
11 А дим їх муки буде зноситись по вічні віки; і не мають впокою день і ніч ті, що покланяють ся зьвірові і образові його, і коли хто приймає пятно імени його. (aiōn g165)
௧௧அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. (aiōn g165)
12 Ось терпиливість сьвятих; ось ті, що хоронять заповіді Божі і віру Ісуса.
௧௨தேவனுடைய கட்டளைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே வெளிப்படும் என்று சொன்னான்.
13 І чув я голос з неба, що глаголав мені: напиши: Блаженні мертві, що в Господеві вмирають від нинї. Так глаголе Дух, щоб впокоїлись від трудів своїх; дїла ж їх ідуть слїдом за ними.
௧௩பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்று எழுது; அவர்கள் தங்களுடைய வேலைகளில் இருந்து ஒய்வெடுப்பார்கள்; அவர்களுடைய செய்கைகள் அவர்களோடு கூடப்போகும்; ஆவியானவரும் ஆம் என்று சொல்லியிருக்கிறார் என்று சொல்லியது.
14 І поглянув я, і ось, біла хмара, а на хмарі сидїв подібний Синові чоловічому, а на голові Його вінець золотий, а в руцї Його гострий серп.
௧௪பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனிதகுமாரனைப்போல தமது தலையின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கூர்மையான அரிவாளையும் வைத்திருக்கும் ஒருவர் உட்கார்ந்திருப்பதையும் பார்த்தேன்.
15 Ще инший ангел вийшов з храму і покликнув голосом великим до сидячого на хмарі: Пішли серпа твого, і жни; бо прийшла для тебе година жати, достигло бо жниво землї.
௧௫அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரைப் பார்த்து: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, எனவே உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான்.
16 І скинув сидячий на хмарі серп свій на землю, і земля була пожата.
௧௬அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைச்சல் அறுக்கப்பட்டது.
17 І вийшов инший ангел із храму, що в небі, а мав і він гострий серп.
௧௭பின்பு வேறொரு தூதனும் கூர்மையான அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.
18 І вийшов инший ангел із жертівнї, в котрого власть над огнем, і покликнув покликом великим на того, що мав гострий серп, глаголючи: Пішли твій гострий серп і збирай грозна з виноградини земної, вже бо доспіли грозна її.
௧௮அக்கினியின்மேல் அதிகாரம் உள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கூர்மையான அரிவாளைப் பிடித்திருக்கிறவனைப் பார்த்து: பூமியின் திராட்சைப்பழங்கள் பழுத்திருக்கிறது, கூர்மையான உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று அதிக சத்தத்தோடு சொன்னான்.
19 І кинув ангел серп свій на землю, і зібрав виноград земний, і кинув у велику винотоку гнїва Божого.
௧௯அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சைப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபத்தின் தண்டனை என்னும் பெரிய ஆலையிலே போட்டான்;
20 І товчено осторонь города в винотоцї, і вийшла кров з винотоки аж по узди кінські на тисяч шістьсот стадий
௨0நகரத்திற்கு வெளியே உள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து முந்நூறு கிலோமீட்டர் தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டு குதிரைகளின் கடிவாளங்களின் உயரம்வரைக்கும் பெருகிவந்தது.

< Об'явлення 14 >