< Adiyisɛm 3 >
1 “Twerɛ krataa yi kɔma ɔbɔfoɔ ɔwɔ asafo a ɛwɔ Sardi no sɛ: Yei ne asɛm a ɛfiri deɛ ɔwɔ Onyankopɔn ahonhom nson ne nsoromma nson no nkyɛn. Menim deɛ woreyɛ. Menim sɛ woagye din sɛ wote ase, nanso woawu.
௧சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது; உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவன் என்று பெயர்பெற்றிருந்தும் செத்தவனாக இருக்கிறாய்.
2 Enti nyane, na kanyane deɛ aka wo nkyɛn no na anwu koraa. Ɛfiri sɛ, mahunu sɛ deɛ woayɛ no nya nnii mu wɔ Onyankopɔn anim.
௨நீ விழித்துக்கொண்டு, மரித்துப்போகிறதாக இருக்கிற காரியங்களைப் பெலப்படுத்து; உன் செய்கைகள் தேவனுக்குமுன்பாக நிறைவானவைகளாக நான் பார்க்கவில்லை.
3 Kae deɛ wɔkyerɛɛ wo no ne sɛdeɛ woteeɛ no. Di so na twe wo ho firi wo bɔne ho. Sɛ woankanyane wo ho a, mɛba wo so sɛ ɔkorɔmfoɔ, na worenhunu ɛberɛ ko a mɛba.
௩எனவே நீ கேட்டதையும், பெற்றுக்கொண்டதையும் நினைத்துப்பார்த்து, அதற்குக் கீழ்ப்படிந்து மனம்திரும்பு. நீ விழிப்படையாவிட்டால், திருடனைப்போல உன்னிடம் வருவேன்; நான் உன்னிடம் வரும் நேரத்தை நீ தெரியாமல் இருப்பாய்.
4 Nanso, mo mu kakra bi a wɔwɔ Sardi no mfaa ewiase nkekaeɛ nkekaa wɔn ntadeɛ mu. Wɔne me bɛnante a wɔhyɛ ntadeɛ fitaa, ɛfiri sɛ, ɛsɛ wɔn sɛ wɔyɛ saa.
௪ஆனாலும் தங்களுடைய ஆடைகளை அசுத்தப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்கு உண்டு; அவர்கள் தகுதி உடையவர்களாக இருப்பதால், வெண்மையான ஆடை அணிந்து என்னோடு நடப்பார்கள்.
5 Deɛ ɔbɛdi nkonim no, wɔbɛhyɛ no atadeɛ fitaa, na merentwa ne din mfiri ateasefoɔ nwoma no mu. Na mɛda ne din adi wɔ mʼAgya no ne nʼabɔfoɔ anim sɛ ɔyɛ me dea.
௫ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு வெண்மையான ஆடை அணிவிக்கப்படும்; ஜீவபுத்தகத்திலிருந்து அவனுடைய பெயரை நான் நீக்கிப்போடாமல், என் பிதாவிற்கு முன்பாகவும் அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் அவன் பெயரை அறிக்கைச் செய்வேன்.
6 Deɛ ɔwɔ aso no ntie deɛ Honhom no ka kyerɛ asafo no.
௬ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.
7 “Twerɛ krataa yi kɔma ɔbɔfoɔ a ɔwɔ asafo a ɛwɔ Filadelfia no sɛ: Yei ne asɛm a ɛfiri deɛ ɔyɛ kronkron na ɔyɛ nokorɛ na ɔkura Dawid safoa no nkyɛn. Deɛ ɔbue a, obi ntumi nto mu na sɛ ɔto mu nso a, obi ntumi mmue no.
௭பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவென்றால்: பரிசுத்தம் உள்ளவரும், சத்தியம் உள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவனும் பூட்டமுடியாதபடி திறக்கிறவரும், ஒருவனும் திறக்கமுடியாதபடி பூட்டுகிறவருமாக இருக்கிறவர் சொல்லுகிறதாவது;
8 Menim deɛ woyɛ. Menim sɛ wowɔ tumi kakra. Woadi me nkyerɛkyerɛ no so, nam so adi me nokorɛ. Mabue ɛpono bi wɔ wʼanim a obi ntumi nto mu.
௮நீ செய்த உன் செயல்களை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலிக்காமல், என் வசனத்திற்கு கீழ்ப்படிந்து நடந்ததினால், இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
9 Tie! Ekuo a ɔbonsam afa wɔn no, saa atorofoɔ a wɔka sɛ wɔyɛ Yudafoɔ nanso wɔnyɛ bi no, mɛma wɔaba wʼanim abɛbu wo nkotodwe. Wɔn nyinaa bɛhunu sɛ medɔ wo.
௯இதோ, யூதர்களாக இல்லாதிருந்தும் தங்களை யூதர்கள் என்று பொய் சொல்லுகிற சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாக இருப்பதை அவர்கள் தெரிந்துகொள்ளும்படி செய்வேன்.
10 Esiane sɛ woadi me mmara so anya boasetɔ enti, sɛ ɔhaw a ɛreba ewiase nyinaa de asɔ asase so nnipa nyinaa ahwɛ no ba a, mɛgye wo afiri mu.
௧0என் பொறுமையைப்பற்றிச் சொல்லிய வசனத்திற்கு நீ கீழ்ப்படிந்து நடந்ததினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிப்பதற்காகப் பூச்சக்கரத்தின்மேல் வரப்போகிற சோதனைக்காலத்திற்கு நான் உன்னைத் தப்பித்துக் காப்பேன்.
11 Mereba nnansa yi ara. Kora wʼagyapadeɛ, na obi anwia wo nkonim abotire no.
௧௧இதோ, சீக்கிரமாக வருகிறேன்; யாரும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடி நான் உனக்குச் சொன்னதையெல்லாம் செய்துகொண்டு இரு.
12 Deɛ ɔbɛdi nkonim no, mɛyɛ no odum me Onyankopɔn asɔredan mu, na ɔremfiri mu bio da. Mɛtwerɛ me Onyankopɔn din ne me Onyankopɔn kuro din a ɛyɛ Yerusalem foforɔ a ɛbɛfiri ɔsoro me Onyankopɔn nkyɛn aba no agu ne ho. Bio, mɛtwerɛ me din foforɔ agu ne ho.
௧௨ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக வைப்பேன், அதில் இருந்து அவன் எப்போதும் நீங்குவது இல்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்தில் இருந்து இறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
13 Deɛ ɔwɔ aso no ntie deɛ Honhom no ka kyerɛ asafo no.
௧௩ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.
14 “Twerɛ krataa yi kɔma ɔbɔfoɔ a ɔwɔ Laodikea asafo mu no sɛ: Yei ne asɛm a ɛfiri Amen a ɔyɛ ɔdanseni nokwafoɔ a ɔyɛ biribiara a Onyankopɔn bɔeɛ no sodifoɔ nkyɛn.
௧௪லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: உண்மையும் சத்தியமுள்ள சாட்சியும், தேவனுடைய படைப்பிற்கு ஆதியுமாக இருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
15 Menim deɛ woayɛ. Menim sɛ wonyɛ nwunu nso wonyɛ hye. Me pɛ ne sɛ, anka wobɛyɛ mu baako.
௧௫உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிரும் இல்லை அனலும் இல்லை; நீ குளிராக அல்லது அனலாக இருந்தால் நன்றாக இருக்கும்.
16 Nanso, ɛsiane sɛ woyɛ boturobodwo, na wonyɛ hye na wonyɛ nwunu enti, merebɛte wo sɛ ntasuo afiri mʼanom.
௧௬இப்படி நீ குளிரும் இல்லாமல் அனலும் இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்கிறதினால் உன்னை என் வாயில் இருந்து வாந்திபண்ணிப்போடுவேன்.
17 Woka sɛ, ‘meyɛ ɔdefoɔ na manya me ho na mewɔ deɛ ɛhia me nyinaa.’ Nanso, wonnim hia a ahia wo ne mmɔborɔ a woyɛ. Woyɛ ohiani. Woda adagya, na wʼani afira.
௧௭நீ பாக்கியமில்லாதவனாகவும், பரிதாபப்படத்தக்கவனாகவும், தரித்திரனும், பார்வை இல்லாதவனாகவும், நிர்வாணியாகவும் இருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவான் என்றும், பொருளாதார வசதிபடைத்தவன் என்றும், எனக்கு ஒரு குறையும் இல்லை என்றும் சொல்லுகிறதினால்;
18 Enti, metu wo fo sɛ tɔ sikakɔkɔɔ, sikakɔkɔɔ amapa, firi me nkyɛn, sɛdeɛ ɛbɛma woayɛ ɔdefoɔ. Afei, tɔ ntadeɛ fitaa hyɛ fa kata wʼanimguaseɛ adagya no so. Afei, tɔ aduro gu wʼani so, sɛdeɛ wobɛhunu adeɛ.
௧௮நான்: நீ ஐசுவரியவானாவதற்காக நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தெரியாதபடி நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்மையான ஆடைகளையும் என்னிடம் வாங்கிக்கொள்ளவும், நீ பார்வை பெறுவதற்காக உன் கண்களுக்கு மருந்து போடவேண்டும் என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.
19 Mekɔ so twe wɔn a medɔ wɔn no nyinaa aso. Enti bɔ mmɔden na twe wo ho firi bɔne ho.
௧௯நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; எனவே நீ எச்சரிக்கையாக இருந்து, மனம்திரும்பு.
20 Tie! Megyina ɛpono no akyi rebɔ mu; sɛ obi te me nne na ɔbue ɛpono no a, mɛba mu na me ne no adidi na ɔno nso ne me adidi.
௨0இதோ, வாசற்படியிலே நின்று கதவைத் தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், நான் அவன் வீட்டிற்குள் சென்று, அவனோடுகூட உணவு உண்பேன், அவனும் என்னோடு உண்பான்.
21 Mɛma nkonimdifoɔ no atena mʼahennwa no ho, sɛdeɛ madi nkonim enti, mete mʼAgya ahennwa ho seesei no.
௨௧நான் ஜெயம்பெற்று என் பிதாவுடைய சிங்காசனத்திலே அவரோடு உட்கார்ந்ததுபோல, ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடு உட்காருவதற்கு அருள்செய்வேன்.
22 Sɛ wowɔ aso a, ɛnneɛ tie deɛ Honhom no ka kyerɛ asafo no.”
௨௨ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது என்றார்.