< Atemmufoɔ 1 >
1 Yosua wuo akyi no, Israelfoɔ bisaa Awurade sɛ, “Abusuakuo bɛn na ɛsɛ sɛ wɔkɔto hyɛ Kanaanfoɔ no so kane?”
௧யோசுவா இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி: கானானியர்களை எதிர்த்து யுத்தம்செய்யும்படி, எங்களில் யார் முதலில் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.
2 Awurade buaa sɛ, “Yuda na ɛsɛ sɛ ɔkɔ; mede asase no so die ahyɛ wɔn nsam.”
௨அதற்குக் யெகோவா: யூதா எழுந்து புறப்படட்டும்; இதோ, அந்த தேசத்தை அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.
3 Enti, Yuda ntuanofoɔ ka kyerɛɛ wɔn nuanom Simeon abusuakuo no sɛ, “Mommɛka yɛn ho na yɛnko ntia Kanaanfoɔ a wɔte asase a wɔde ama yɛn no so. Yɛn nso, yɛbɛboa mo ama moako afa mo asase.” Enti, Simeonfoɔ mmarima no ne Yudafoɔ no kɔeɛ.
௩அப்பொழுது யூதாவின் மனிதர்கள் தங்களுடைய சகோதரர்களாகிய சிமியோனின் மனிதர்களை நோக்கி: நாம் கானானியர்களோடு யுத்தம்செய்ய நீங்கள் என்னுடைய சுதந்திரப் பங்குவீதத்தில் எங்களோடு எழுந்துவாருங்கள்; உங்களுடைய சுதந்திரப் பங்குவீதத்தில் நாங்களும் உங்களோடு வருவோம் என்றார்கள்; அப்படியே சிமியோன் கோத்திரத்தார்கள் அவர்களோடு போனார்கள்.
4 Ɛberɛ a Yuda kɔɔ wɔn so no, Awurade ma wɔdii Kanaanfoɔ ne Perisifoɔ no so nkonim, na wɔkunkumm atamfoɔ akofoɔ ɔpedu wɔ Besek.
௪யூதா மனிதர்கள் எழுந்துபோனபோது, யெகோவா கானானியர்களையும், பெரிசியர்களையும் அவர்களுடைய கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே 10,000 பேரை வெட்டினார்கள்.
5 Besek hɔ, wɔne ɔhene Adoni-Besek hyiaeɛ, na wɔko tiaa no, dii Kanaanfoɔ no ne Perisifoɔ no so nkonim.
௫பேசேக்கிலே அதோனிபேசேக்கைப் பார்த்து, அவனோடு யுத்தம்செய்து, கானானியர்களையும், பெரிசியர்களையும் வெட்டினார்கள்.
6 Adoni-Besek dwaneeɛ, nanso ankyɛre na Israelfoɔ kɔkyeree no twitwaa ne nsa ne ne nan kokurobetie.
௬அதோனிபேசேக் ஓடிப்போகும்போது, அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவனுடைய கை கால்களின் பெருவிரல்களை வெட்டிப்போட்டார்கள்.
7 Ɛmaa Adoni-Besek kaa sɛ, “Ɛberɛ bi na mewɔ Ahemfo aduɔson a wɔatwitwa wɔn kokurobetie bɛtasee mporoporowa wɔ me didipono ase. Afei, Awurade atua me deɛ meyɛɛ wɔn no so ka.” Wɔde no kɔɔ Yerusalem na ɔwuu wɔ hɔ.
௭அப்பொழுது அதோனிபேசேக்: 70 ராஜாக்கள், கை கால்களின் பெருவிரல்கள் வெட்டப்பட்டவர்களாக என்னுடைய மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிகட்டினார் என்றான். அவனை எருசலேமிற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் இறந்தான்.
8 Yuda mmarima no to hyɛɛ Yerusalem so, dii so nkonim. Wɔkunkumm kuropɔn no so nnipa nyinaa, too mu ogya.
௮யூதாவின் மக்கள் எருசலேமின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்து, அங்குள்ளவர்களை கூர்மையான பட்டயத்தினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கினார்கள்.
9 Ɛno akyi, wɔdane faa anafoɔ fam, kɔto hyɛɛ Kanaanfoɔ a wɔtete bepɔ asase, Negeb ne atɔeɛ fam nkokoɔ so no so.
௯பின்பு யூதாவின் மக்கள் மலைத்தேசத்திலும், தெற்கிலும், பள்ளத்தாக்குகளிலும் குடியிருக்கிற கானானியர்களோடு யுத்தம்செய்யப் புறப்பட்டுப்போனார்கள்.
10 Yuda bɔ wuraa Kanaanfoɔ a na wɔte Hebron a kane no na wɔfrɛ hɔ Kiriat-Arba no mu, dii Sesai, Ahiman ne Talmai so.
௧0அப்படியே யூதா கோத்திரத்தார்கள் எபிரோனிலே குடியிருக்கிற கானானியர்களுக்கு எதிராகப்போய் சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முன்நாட்களில் அந்த எபிரோனுக்கு கீரியாத் அர்பா என்று பெயர்.
11 Wɔfiri hɔ kɔtoaa nnipa a wɔte Debir a kane no na wɔfrɛ hɔ (Kiriat-Sefer no).
௧௧அங்கேயிருந்து தெபீரில் குடியிருப்பவர்களுக்கு எதிராகப் போனார்கள்; முன்நாட்களில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பெயர்.
12 Na Kaleb kaa sɛ, “Obiara a ɔbɛto ahyɛ Kiriat-Sefer so na wafa no, mede me babaa Aksa bɛma no aware.”
௧௨அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரை முறியடித்துப் பிடிக்கிறவனுக்கு என்னுடைய மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்றான்.
13 Ɛnna Kaleb nua kumaa Kenas babarima Otniel kɔfaeɛ. Enti, Aksa bɛyɛɛ Otniel yere.
௧௩அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; எனவே, தன்னுடைய மகளாகிய அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
14 Aksa waree Otniel no, ɔka kyerɛɛ no sɛ ɔmmisa nʼagya Kaleb na ɔmma wɔn asase nka deɛ wɔwɔ no ho. Ɔfiri nʼafunumu so sii fam ara pɛ, Kaleb bisaa no sɛ, “Asɛm bɛn? Ɛdeɛn na menyɛ mma wo?”
௧௪அவள் புறப்படும்போது, என்னுடைய தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று ஒத்னியேலினிடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான்.
15 Ɔbuaa sɛ, “Ma me nhyira bio. Woadom me ama me asase wɔ Negeb, na mesrɛ wo ma me asase a nsuo wɔ so.” Enti, Kaleb maa no atifi ne anafoɔ fam nsuwansuwa asase.
௧௫அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
16 Ɛberɛ a Yuda abusuakuo firii Yeriko no, Kenifoɔ a wɔyɛ Mose ase barima asefoɔ ne wɔn kɔɔ Yuda ɛserɛ no so. Wɔtenaa nnipa a wɔwɔ hɔ no mu wɔ beaeɛ bi a ɛbɛn Arad a ɛwɔ Negeb.
௧௬மோசேயின் மாமனாகிய கேனியனின் மக்களும் யூதாவின் மக்களோடு பேரீச்சை மரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கில் இருக்கிற யூதாவின் வனாந்திரத்திற்கு வந்து, மக்களோடு குடியேறினார்கள்.
17 Afei, Yuda ne Simeon ka bɔɔ mu ko tiaa Kanaanfoɔ a wɔte Sefat no sɛee kuro no pasaa. Enti, wɔtoo kuro no edin Horma.
௧௭யூதா தன்னுடைய சகோதரனாகிய சிமியோனோடு போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியர்களை முறியடித்து, அதை அழித்து, அந்தப் பட்டணத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டார்கள்.
18 Ɛno akyi, Yuda ko faa nkuropɔn Gasa, Askelon ne Ekron ne wɔn nsase a atwa wɔn ho ahyia.
௧௮யூதா, காசாவையும் அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.
19 Na Awurade ka Yuda nkurɔfoɔ ho enti, ɛmaa wɔfaa bepɔ nsase no. Nanso, wɔantumi ampam nnipa a wɔte tata so no amfiri hɔ, ɛfiri sɛ, na wɔwɔ nnadeɛ nteaseɛnam.
௧௯யெகோவா யூதாவோடு இருந்ததினால், மலைத்தேசத்தார்களைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கில் குடியிருப்பவர்களுக்கு இரும்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தமுடியாமல்போனது.
20 Wɔde Hebron kuropɔn maa Kaleb sɛdeɛ na Mose ahyɛ ho bɔ no. Na Kaleb pamoo nnipa a na wɔyɛ Anak mmammarima baasa no asefoɔ no firii hɔ.
௨0மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று மகன்களையும் துரத்திவிட்டான்.
21 Benyamin abusuakuo no antumi ampam Yebusifoɔ a na wɔte Yerusalem no. Enti, ɛbɛsi ɛnnɛ yi, Yebusifoɔ ne Benyamin nkurɔfoɔ da so te Yerusalem.
௨௧பென்யமீனின் மகன்கள் எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களையும் துரத்திவிடவில்லை; எனவே, எபூசியர்கள் இந்த நாள்வரை பென்யமீன் மக்களோடு எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
22 Yosef asefoɔ kɔto hyɛɛ Bet-El kuro no so, na Awurade kaa wɔn ho.
௨௨யோசேப்பின் குடும்பத்தினரும் பெத்தேலுக்கு எதிராகப் போனார்கள்; யெகோவா அவர்களோடு இருந்தார்.
23 Wɔsomaa akwansrafoɔ kɔɔ Bet-El (a kane no na wɔfrɛ no Lus) hɔ.
௨௩யோசேப்பின் குடும்பத்தினர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பெயர்.
24 Wɔde nsɛmmisa puapuaa ɔbarima bi a na ɔfiri kuropɔn no mu reba. Wɔka kyerɛɛ no sɛ, “Kyerɛ yɛn ɛkwan a wɔde kɔ kuropɔn no mu na yɛn nso, yɛbɛhunu wo mmɔbɔ.”
௨௪அந்த வேவுகாரர்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனிதனைக் கண்டு: பட்டணத்திற்குள் நுழையும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.
25 Enti, ɔkyerɛɛ wɔn kuropɔn no kwan ma wɔkɔkunkumm kuropɔn no mu nnipa nyinaa, na wɔgyaa ɔbarima no ne nʼabusuafoɔ.
௨௫அப்படியே பட்டணத்திற்குள் நுழையும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்தில் உள்ளவர்களைக் கூர்மையான பட்டயத்தினால் வெட்டி, அந்த மனிதனையும் அவனுடைய குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.
26 Akyire no, ɔbarima no tutu kɔɔ Hetifoɔ asase so. Ɔkyekyeree kuropɔn wɔ hɔ. Ɔtoo kuropɔn no edin Lus. Na saa edin no da kuropɔn no so de bɛsi ɛnnɛ.
௨௬அப்பொழுது அந்த மனிதன் ஏத்தியர்களின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பெயரிட்டான்; அதுதான் இந்த நாள்வரை அதினுடைய பெயர்.
27 Manase abusuakuo no nso antumi ampam nnipa a na wɔte Bet-Sean, Taanak, Dor, Yibleam, Megido ne wɔn nkuraaseɛ no, ɛfiri sɛ, na Kanaanfoɔ no aka sɛ, sɛdeɛ ɛteɛ biara, ɛhɔ ara na wɔpɛ sɛ wɔtena.
௨௭மனாசே கோத்திரத்தார்கள் பெத்செயான் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தானாக் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தோரில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், இப்லேயாம் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், மெகிதோவில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும் துரத்திவிடவில்லை; கானானியர்கள் அந்த தேசத்தில்தான் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்.
28 Israelfoɔ no nyaa ahoɔden kakra no, wɔhyɛɛ Kanaanfoɔ no ma wɔyɛɛ nnwuma sɛ nkoa maa wɔn a wɔampamo wɔn amfiri asase no so.
௨௮இஸ்ரவேலர்கள் பலத்தபோது, கானானியர்களை முழுவதும் துரத்திவிடாமல் அவர்களை கட்டாயப்படுத்தி கடினமாக வேலை செய்யவைத்தார்கள்.
29 Efraim abusuakuo no nso antumi antu Kanaanfoɔ a na wɔte Geser no enti Kanaanfoɔ no kɔɔ so ne wɔn tenaeɛ.
௨௯எப்பிராயீம் கோத்திரத்தார்கள், கேசேரிலே குடியிருந்த கானானியர்களையும் துரத்திவிடவில்லை; ஆகவே, கானானியர்கள் அவர்களோடு குடியிருந்தார்கள்.
30 Sebulon abusuakuo no antumi antu Kanaanfoɔ a na wɔte Kitron ne Nahalol, enti wɔkɔɔ so ne wɔn tenaeɛ. Nanso, wɔhyɛɛ wɔn ma wɔyɛɛ adwuma sɛ nkoa.
௩0செபுலோன் கோத்திரத்தார்கள், கித்ரோனில் குடியிருக்கிறவர்களையும், நாகலோலில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடவில்லை. ஆகவே, கானானியர்கள், அவர்களோடு குடியிருந்து, கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
31 Aser abusuakuo no nso antumi antu wɔn a na wɔte Ako, Sidon, Ahlab, Aksib, Helba, Afik ne Rehob.
௩௧ஆசேர் கோத்திரத்தார்கள், அக்கோவில் குடியிருக்கிறவர்களையும், சீதோனில் குடியிருக்கிறவர்களையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடவில்லை.
32 Nokorɛm, ɛsiane sɛ wɔantumi antu wɔn no enti, Kanaanfoɔ no dɔɔso wɔ asase a Aserfoɔ no te soɔ no so.
௩௨ஆசேரியர்கள், தேசத்தில் குடியிருக்கிறவர்களாகிய கானானியர்களோடு குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.
33 Naftali abusuakuo no nso antumi antu wɔn a na wɔte Bet-Semes ne Bet-Anat. Mmom, Kanaanfoɔ no dɔɔso wɔ asase a wɔte soɔ no so. Nanso wɔhyɛɛ nnipa a wɔte Bet-Semes ne Bet-Anat ma wɔyɛɛ adwuma sɛ nkoa maa Naftali nkurɔfoɔ.
௩௩நப்தலி கோத்திரத்தார்கள், பெத்ஷிமேசில் குடியிருக்கிறவர்களையும், பெத்தானாத்தில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடாமல், தேசத்தில் குடியிருக்கிறவர்களாகிய கானானியர்களோடு குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களில் குடியிருக்கிறவர்களும் அவர்களுக்கு கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
34 Dan abusuakuo no deɛ, Amorifoɔ hyɛɛ wɔn maa wɔtu kɔɔ bepɔ nsase no so na wɔamma wɔn amma tata so hɔ.
௩௪எமோரியர்கள் தாண் கோத்திரத்தார்களைப் பள்ளத்தாக்கில் இறங்கவிடாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படிக் கட்டாயப்படுத்தினார்கள்.
35 Amorifoɔ no sii wɔn adwene pi sɛ, wɔbɛtena Heres bepɔ so wɔ Ayalon ne Saalbim, nanso Yosef asefoɔ no yɛɛ den mmorosoɔ no, wɔhyɛɛ Amorifoɔ no ma wɔyɛɛ adwuma sɛ nkoa.
௩௫எமோரியர்கள் ஏரேஸ் மலைகளிலும், ஆயலோனிலும், சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தார்களின் பலம் பெருகினபடியால், அவர்களுக்கு கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
36 Na Amorifoɔ hyeɛ firi Akrabbim aforoeɛ kɔ Sela na ɛtoa so kɔ atifi fam.
௩௬எமோரியர்களின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடு துவங்கி அதற்கு அப்புறமும் போனது.