< Yoɛl 2 >

1 Hyɛn totorobɛnto no wɔ Sion; hyɛn abɛn no wɔ me bepɔ kronkron no so. Ma wɔn a wɔte asase no so nyinaa ho mpopo, ɛfiri sɛ Awurade ɛda no reba, na abɛn koraa.
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த மலையிலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிமக்கள் எல்லோரும் தத்தளிப்பார்களாக; ஏனெனில் யெகோவாவுடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.
2 Esum ne kusukuukuu ɛda. Omununkum ne esum kabii ɛda. Sɛdeɛ adekyeeɛ hann trɛtrɛ wɔ mmepɔ so no, saa ara na asraadɔm a wɔ dɔɔso na wɔyɛ den ba no teɛ. Wɔnhunuu wɔn sɛso bi da, na wɔrenhunu ne sɛso nso da.
அது இருளும் காரிருளுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு மலைகளின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு மக்கள்கூட்டம் தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்பு ஒரு காலத்திலும் உண்டாகவுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக இனிவரும் வருடங்களிலும் உண்டாவதுமில்லை.
3 Egya rehye wɔ wɔn anim, ogyaframa dɛre wɔ wɔn akyi, asase a ɛda wɔn anim no te sɛ Eden turo, deɛ ɛda wɔn akyi no te sɛ anweatam, biribiara nni hɔ a ɛpa wɔn ani so.
அவைகளுக்கு முன்னாக நெருப்பு எரிக்கும், அவைகளுக்குப் பின்னாக தழல் எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்திரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை.
4 Wɔte sɛ apɔnkɔ. Wɔhurihuri te sɛ apɔnkɔsotefoɔ asraadɔm.
அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலைப்போல இருக்கும்; அவைகள் குதிரை வீரர்களைப்போல ஓடும்.
5 Wɔyɛ gyegyeegye te sɛ nteaseɛnam na wɔtu fa mmepɔ atifi, wɔte sɛ ogyaframa a ɛrehyeɛ wira dwaneeɛ, wɔte sɛ asraadɔm akantinka a wɔrekɔ ɔsa.
அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சலைப்போலவும், வைக்கோலை எரிக்கிற நெருப்பு ஜூவாலையின் சத்தத்தைப்போலவும், போருக்கு ஆயத்தப்பட்ட பெரும் மக்கள்கூட்டத்தின் இரைச்சலைப்போலவும், மலைகளுடைய உச்சியின்மேல் குதிக்கும்.
6 Aman ani bɔ wɔn so a, ehu bɔ wɔn; na wɔn anim to hoa.
அவைகளுக்கு முன்பாக மக்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.
7 Wɔko kɔ wɔn anim te sɛ akofoɔ; wɔforo afasuo te sɛ asraafoɔ na wɔn nyinaa kɔ wɔn anim tee, na wɔmmane benkum anaa nifa.
அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; போர்வீரர்களைப்போல மதில் ஏறும்; வரிசைகள் கலையாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும்.
8 Obiara ntwintwane ɔfoforɔ anan mu; obiara nante kɔ nʼanim tee. Wɔbu fa banbɔeɛ so, na wɔpem kɔ wɔn anim ara.
ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம் ஏற்படாமற்போகும்.
9 Wɔto hyɛ kuropɔn no so wɔtu mmirika fa afasuo no so wɔforo kɔ afie mu, wɔfa mpoma mu te sɛ akorɔmfoɔ.
அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும்; வீடுகளின்மேல் ஏறும்; ஜன்னல் வழியாகத் திருடனைப்போல உள்ளே நுழையும்.
10 Asase woso wɔ wɔn anim, na ɔsoro hinhim. Owia ne ɔsrane duru sum, na nsoromma nnhyerɛn bio.
௧0அவைகளுக்கு முன்பாக பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மங்கும்.
11 Awurade bobom de di nʼasraadɔm no anim. Nʼakodɔm no dɔɔso bebree, ahoɔdenfoɔ ne wɔn a wɔdi nʼahyɛdeɛ so. Awurade ɛda no yɛ kɛseɛ na ɛyɛ hu; hwan na ɔbɛtumi agyina ano?
௧௧யெகோவா தமது படைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய முகாம் மகா பெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; யெகோவாவுடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாக இருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்?
12 “Na afei,” sɛdeɛ Awurade seɛ nie, “Sane fa wʼakoma nyinaa bra me nkyɛn, wɔ akɔnkyene, esu ne awerɛhoɔ mu.”
௧௨ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
13 Sunsuane wʼakoma na ɛnnyɛ wo ntadeɛ mu. Sane bra Awurade wo Onyankopɔn nkyɛn, ɛfiri sɛ, ɔyɛ ɔdomfoɔ, ne yam yɛ. Ne bo kyɛre fu na ne dɔ boro so, na ɛnnyɛ no anigye sɛ ɔtwe yɛn aso.
௧௩நீங்கள் உங்கள் உடைகளையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாக இருக்கிறார்.
14 Hwan na ɔnim? Ebia ɔbɛsesa nʼadwene na wahunu mmɔbɔ na wagya nhyira, a ɛyɛ aduane ne hwiesa afɔrebɔdeɛ a mode ma Awurade mo Onyankopɔn no.
௧௪ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு உணவுபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.
15 Hyɛn totorobɛnto wɔ Sion! Mommɔ akɔnkyene kronkron ho dawuro, momfrɛ nhyiamu kronkron.
௧௫சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள்.
16 Mommoaboa nnipa no ano monte nhyiamu no ho na ɛnyɛ kronkron; mommoaboa mpanimfoɔ, mmɔfra ne mmaa a wɔrema nufoɔ ano Ma ayeforɔ ne ayeforɔkunu mfiri wɔn pia mu mmra.
௧௬மக்களைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோர்களைச் சேருங்கள்; பிள்ளைகளையும் பால் குடிக்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மணவறையையும்விட்டுப் புறப்படுவார்களாக.
17 Asɔfoɔ a wɔsom wɔ Awurade anim no, nsu wɔ afɔrebukyia no ne abrannaa no ntam; na wɔn nka sɛ, “Awurade fa wo nkurɔfoɔ ho kyɛ wɔn. Mma wʼagyapadeɛ nnyɛ ahohoradeɛ anaa fɛdideɛ wɔ aman no mu. Adɛn enti na ɛsɛ sɛ wobisa wɔ nnipa no mu sɛ, ‘Wɔn Onyame no wɔ he?’”
௧௭யெகோவாவின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே அழுது: யெகோவாவே, நீர் உமது மக்களைத் தப்பவிட்டு அந்நிய மக்கள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது மக்களை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று அந்நியமக்களுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.
18 Na Awurade bɛtwe ninkunu wɔ nʼasase ho na ne nkurɔfoɔ ayɛ no mmɔbɔ.
௧௮அப்பொழுது யெகோவா தமது தேசத்திற்காக வைராக்கியங்கொண்டு, தமது மக்கள்மேல் இரக்கம் காட்டுவார்.
19 Awurade bɛbua sɛ, “Merebrɛ mo aduane, nsã foforɔ ne ngo, a ɛbɛso mo ama mo amee pintinn. Merenyɛ mo ahohoradeɛ mma aman no bio.
௧௯யெகோவா மறுமொழி கொடுத்து, தமது மக்களை நோக்கி: இதோ, நான் உங்களை இனி அந்நிய மக்களுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள்.
20 “Mɛpam atifi fam asraadɔm no afiri wo nkyɛn akɔ akyirikyiri, mɛpia wɔn akɔ asase a awoɔ na ɛyɛ bonini soɔ. Adonten dɔm no bɛmem wɔ apueeɛ ɛpo no mu, na kyidɔm no bɛmem wɔ Mfimfini Po no mu. Na afunu no bɛbɔn na nka no bɛtu.” Nokorɛm wayɛ nneɛma akɛseɛ.
௨0வடதிசைப் படையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்படையை கீழ்க்கடலுக்கும், அதின் பின்படையை மத்திய தரைக் கடலுக்கு, நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்நாற்றம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.
21 Monnsuro, me nkurɔfoɔ! Momma mo ani nnye, na monsɛpɛ mo ho. Nokorɛm Awurade ayɛ nneɛma akɛseɛ.
௨௧தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; யெகோவா பெரிய செயல்களைச் செய்வார்.
22 Monnsuro, mo wiram mmoa! Ɛfiri sɛ ɛserɛ so adidibea reyɛ frɔmm. Nnua no reso wɔn aba; borɔdɔma ne bobe nso reso wɔn aba.
௨௨வெளியின் மிருகங்களே பயப்படாதேயுங்கள்; வனாந்திரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; மரங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சைச்செடியும் பலனைத்தரும்.
23 Momma mo ani nnye, mo Sion mma, Mo nni ahurisi wɔ Awurade mo Onyankopɔn mu, ɛfiri sɛ watɔ nsuo ama mo, ne nokorɛdie enti. Watɔ nsuo bebree ama mo wɔ ne berɛ mu te sɛ kane no.
௨௩சீயோன் மக்களே, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; சரியான அளவுபடி அவர் உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே பெய்யச்செய்வார்.
24 Aduane bɛyɛ ayuporobea hɔ ma nsã foforɔ ne ngo bɛbu so wɔ kyi amena mu.
௨௪களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சைரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.
25 “Mɛhyɛ mo anan mu, deɛ mohwereeɛ mfeɛ dodoɔ a ntutummɛ bɛsɛee mo nneɛma, ntutummɛ akɛseɛ ne nkumaa, ne wɔn a aka no nyinaa, me dɔm a mesomaa wɔn baa mo so no.
௨௫நான் உங்களிடத்திற்கு அனுப்பின என் பெரிய படையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருடங்களின் விளைச்சலை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பார்.
26 Wobɛdidi amee, na wobɛyi Awurade wo Onyankopɔn din ayɛ. Ɔno na wayɛ anwanwadeɛ ama wo; me nkurɔfoɔ ani renwu bio.
௨௬நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாக நடத்திவந்த உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் மக்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
27 Afei, wobɛhunu sɛ, mewɔ Israel, wobɛhunu sɛ mene Awurade, wo Onyankopɔn, na obiara nni hɔ sɛ me; Me nkurɔfoɔ ani renwu bio da.”
௨௭நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய யெகோவா, வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் மக்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
28 “Na akyire yi, mɛhwie me honhom agu nnipa nyinaa so, mo mmammarima ne mo mmammaa bɛhyɛ nkɔm, mo nkɔkoraa bɛsoso adaeɛ, mo mmeranteɛ bɛnya anisoadehunu.
௨௮அதற்குப் பின்பு நான் மாம்சமான அனைவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர்கள் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர்கள் தரிசனங்களையும் காண்பார்கள்.
29 Saa mmerɛ no mu no, mɛhwie me Honhom agu mʼasomfoɔ so, mmarima ne mmaa.
௨௯ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.
30 Mɛyɛ anwanwadeɛ wɔ ɔsoro ne asase so, mede mogya, ogya ne wisie kumɔnn.
௩0வானத்திலும் பூமியிலும் இரத்தம் நெருப்புப் புகைத்தூண்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.
31 Ansa na Awurade ɛda kɛseɛ no bɛba no, owia bɛduru sum na ɔsrane nso ayɛ sɛ mogya.
௩௧யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்குமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
32 Na obiara a ɔbɔ Awurade din no, wɔbɛgye no nkwa. Ɛfiri sɛ nkwagyeɛ bɛba ama wɔn a wɔanya wɔn tiri adidi mu a Awurade afrɛ wɔn wɔ Sion bepɔ so ne Yerusalem nyinaa,” sɛdeɛ Awurade aka no.
௩௨அப்பொழுது யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; யெகோவா சொன்னபடி, சீயோன் மலையிலும் எருசலேமிலும், யெகோவா வரவழைக்கும் மீதியாக இருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.

< Yoɛl 2 >