< Hiob 16 >
2 “Mate nsɛm bebree a ɛte sɛ yeinom; na mo nyinaa moyɛ gyamserefoɔ!
௨“இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லோரும் வேதனையுண்டாக்குகிற தேற்றரவாளர்.
3 Mo kasa tentene no mma awieeɛ anaa? Ɛdeɛn na ɛha mo enti a mogu so redi anobaabaeɛ yi?
௩காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ பதில்சொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?
4 Sɛ mo na mowɔ me tebea yi mu a, anka me nso mɛtumi akasa sɛ mo; anka mɛtumi akeka nsɛm a ɛyɛ dɛ atia mo na mabu mo animtiaa.
௪உங்களைப்போல நானும் பேசமுடியும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும்.
5 Nanso, anka mɛhyɛ mo den; anka awerɛkyekyerɛ nsɛm a ɛbɛfiri mʼanomu no bɛma mo ahotɔ.
௫ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன், என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.
6 “Nanso sɛ mekasa a, ɔyea a mete no remmoto; na sɛ mankasa nso a, ɛrennyae.
௬நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்?
7 Ao Onyankopɔn, ampa ara woama mabrɛ; woasɛe me fie pasaa.
௭இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்; என் குடும்பத்தையெல்லாம் அழித்தீர்.
8 Woakyekyere me, ma abɛyɛ adansedie; me so teɛ ara na ɛreteɛ, na ɛdi adanseɛ tia me.
௮நீர் என்னைச் குறுகிப்போகச் செய்தது அதற்குச் சாட்சி; என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, என் முகத்திற்கு முன்பாக பதில் சொல்லும்.
9 Onyankopɔn to hyɛ me so tete me wɔ nʼabufuo mu na ɔtwɛre ne se gu me so; deɛ ɔne me anya no pɔkyere nʼani hwɛ me.
௯என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது, என் மேல் கோபப்படுகிறான்; என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான்.
10 Nnipa bue wɔn ano di me ho fɛw; wɔbɔ me sotorɔ de bu me animtiaa na wɔka wɔn ho bɔ mu de tia me.
௧0எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்தார்கள்; இழிவாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; என்னைச் சுற்றிலும் கூட்டங்கூடினார்கள்.
11 Onyankopɔn de me ama abɔnefoɔ. Wato me atwene amumuyɛfoɔ nsam.
௧௧தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து, துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார்.
12 Na biribiara kɔ yie ma me, nanso ɔdwerɛɛ me; ɔsɔɔ me kɔn mu, too me hwee hɔ. Ɔde me asi nʼani so;
௧௨நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார்.
13 nʼagyantofoɔ atwa me ho ahyia, ɔhwiree me sawa mu a wanhunu me mmɔbɔ maa me bɔnwoma pete guu fam.
௧௩அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்; என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார்.
14 Ɔba me so ɛberɛ biara; na ɔto hyɛ me so sɛ ɔkofoɔ.
௧௪நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார்.
15 “Mapam ayitoma akata me wedeɛ so na masie mʼanintɔn wɔ mfuturo mu.
௧௫நான் சணல்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.
16 Agyaadwotwa ama mʼani ayɛ kɔɔ; sunsum kabii atwa mʼani ho ahyia.
௧௬அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண் இமைகளின்மேல் உண்டாயிருக்கிறது.
17 Nanso, me nsa nyɛɛ basabasayɛ biara na me mpaeɛbɔ yɛ kronn.
௧௭என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும், என் ஜெபம் சுத்தமாயிருக்கும்போதும், அப்படியானது.
18 “Ao asase, nkata me mogya so; na mma wɔnsie me sufrɛ!
௧௮பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.
19 Seesei mpo, me danseni wɔ soro; Me ɔkamafoɔ wɔ soro hɔ.
௧௯இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது. எனக்குச் சாட்சி சொல்லுகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.
20 Me ɔdimafoɔ yɛ mʼadamfo ɛberɛ a mesu gu Onyankopɔn soɔ yi;
௨0என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
21 ɔgyina onipa anan mu di ma no wɔ Onyankopɔn anim sɛdeɛ obi di ma nʼadamfo no.
௨௧ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனுடன் மனிதனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் இருந்தால் நலமாயிருக்கும்.
22 “Mfeɛ kakra bi akyi mɛtu kwan akɔ koransane.
௨௨குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பிவராதவழியே போவேன்.