< Yesaia 63 >
1 Hwan ni yei a ɔfiri Edom reba, deɛ ɔfiri Bosra a nkekaeɛ kɔkɔɔ wɔ nʼatadeɛ mu yi? Hwan ne yei a wɔahyehyɛ no gɔsɔɔ yi, a ɔde nʼahoɔden kɛseɛ retutu taataa yi? “Ɛyɛ me a mekasa wɔ tenenee mu deɛ ɔtumi gye nkwa.”
௧ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த ஆடைகளுடையவராகவும், மகத்துவமாக அணிந்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாகப் பேசி காப்பாற்ற வல்லவராகிய நான்தானே.
2 Adɛn enti na mo ntadeɛ bere kɔɔ, te sɛ obi a ɔretiatia nsakyiamena so deɛ yi?
௨உம்முடைய ஆடைகள் சிவப்பாகவும், ஆலையை மிதிக்கிறவனுடைய ஆடைகளைப்போலவும் இருக்கிறதென்ன?
3 “Me nko ara atiatia nsakyiamena so, na amanaman no mu obiara anka me ho. Metiatiaa wɔn so wɔ mʼabufuo mu na memiaa wɔn so wɔ mʼabufuhyeɛ mu; wɔn mogya bɔ petee me ntadeɛ mu, maa nkekaeɛ yɛɛ mʼaduradeɛ nyinaa mu.
௩நான் தனி ஒருவனாக ஆலையை மிதித்தேன்; மக்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் கடுங்கோபத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் ஆடைகளின்மேல் தெறித்தது, என் ஆடைகளையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.
4 Na aweretɔ da wɔ mʼakoma mu na me gyeɛ afe no aba.
௪நீதியைநிலைப்படுத்தும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை விடுவிக்கும் வருடம் வந்தது.
5 Mehwɛeɛ, nanso na ɔboafoɔ biara nni hɔ, ɛyɛɛ me ahodwirie sɛ obiara ammoa me; enti mʼankasa abasa yɛɛ nkwagyeɛ dwuma maa me, na mʼabufuo wowaa me.
௫நான் பார்த்தேன், துணை செய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு பாதுகாப்பாகி, என் கடுங்கோபமே என்னைத் தாங்கியது.
6 Metiatiaa amanaman no so wɔ mʼabufuo mu; memaa wɔboboroe wɔ mʼabufuhyeɛ mu na mehwiee wɔn mogya guu fam.”
௬நான் என் கோபத்திலே மக்களை மிதித்து, என் கடுங்கோபத்திலே அவர்களை வெறியாக்கி, அவர்கள் சாரத்தைத் தரையிலே இறங்கச்செய்தேன்.
7 Mɛka Awurade ayamyɛ ho asɛm, ne nneyɛɛ a enti ɔsɛ ayɛyie, wɔ deɛ Awurade ayɛ ama yɛn nyinaa ho aane, wɔ nneɛma pa bebree a wayɛ ama Israel fiefoɔ, wɔ nʼayamhyehyeɛ ne ne mmɔborɔhunu a ɛdɔɔso no enti.
௭யெகோவா எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் ஏற்றதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்திற்குச் செய்த மகா நன்மைக்கு ஏற்றதாகவும், யெகோவாவுடைய செயல்களையும், யெகோவாவுடைய துதிகளையும் பிரபலப்படுத்துவேன்.
8 Ɔkaa sɛ, “Ampa ara wɔyɛ me nkurɔfoɔ, mmammarima a wɔrenni me hwammɔ”; ɛno enti ɔbɛyɛɛ wɔn Agyenkwa.
௮அவர்கள் என் மக்கள்தானென்றும், அவர்கள் வஞ்சனை செய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார்.
9 Wɔn amanehunu nyinaa mu, ɔno nso hunuu amane, na ɔbɔfoɔ a ɔka no ho no nso gyee wɔn. Ne dɔ ne ne mmɔborɔhunu mu, ɔgyee wɔn; ɔpagyaa wɔn na ɔsoaa wɔn mfeɛ a atwam no nyinaa mu.
௯அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை காப்பாற்றினார் அவர் தமது அன்பின் காரணமாகவும், தமது பரிதாபத்தின் காரணமாகவும் அவர்களை விடுவித்தது, ஆரம்ப நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.
10 Nanso, wɔtee atua de hoo ne Honhom Kronkron werɛ. Enti ɔbɛyɛɛ wɔn ɔtamfoɔ na ɔno ankasa ko tiaa wɔn.
௧0அவர்களோ கலகம்செய்து, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்கு எதிரியாக மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாக போர்செய்தார்.
11 Afei ne nkurɔfoɔ kaee tete nna no, Mose ne ne nkurɔfoɔ nna no. Wɔbisaa sɛ, ɛhe na deɛ ɔde wɔn faa ɛpo mu no wɔ? Deɛ ɔmaa Mose yɛɛ ne nnwan no hwɛfoɔ no. Ɛhe na deɛ ɔmaa ne Honhom Kronkron no tenaa wɔn mu no wɔ?
௧௧ஆகிலும் அவர் ஆரம்பநாட்களையும், மோசேயையும், தம்முடைய மக்களையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும் தமது மந்தையின் மேய்ப்பனையும் கடலிலிருந்து ஏறச்செய்தவர் இப்பொழுது எங்கே?
12 Deɛ ɔsomaa nʼanimuonyam basa a ɛwɔ tumi sɛ ɔmmɛgyina Mose nsa nifa so, deɛ ɔpaee nsuo no mu wɔ wɔn anim, de gyee edin maa ne ho afebɔɔ,
௧௨அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக் கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்திய புகழ்ச்சியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து,
13 deɛ ɔdii wɔn anim faa ebunu mu sɛdeɛ ɔpɔnkɔ fa asase tamaa so a wɔasunti.
௧௩ஒரு குதிரை வனாந்திரவெளியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை ஆழங்களில் நடக்கச்செய்தவர் எங்கே?
14 Sɛdeɛ anantwie nante kɔ ɛserɛ so kɔhome no, saa ara na Awurade Honhom ma wɔhomeeɛ. Sɛdeɛ wokyerɛɛ wo nkurɔfoɔ kwan de gyee animuonyam abɔdin maa wo ho nie.
௧௪யெகோவாவுடைய ஆவியானவர் அவர்களைப் பள்ளத்தாக்கிலே போய் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இளைப்பாறச்செய்தார்; இப்படியே தேவரீர், உமக்கு மகிமையுள்ள புகழ்ச்சியை உண்டாக்கும்படி உம்முடைய மக்களை நடத்தினீர்.
15 Brɛ wʼani ase hwɛ fam firi wʼahennwa a ɛkorɔn na ɛyɛ kronkron na ɛho wɔ nyam no so. Mo mmɔdemmɔ ne mo ahoɔden wɔ he? Woayi wʼayamhyehyeɛ ne wʼahummɔborɔ afiri yɛn so.
௧௫தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மனஉருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ?
16 Nanso wo ara wo ne yɛn Agya ɛwom sɛ Abraham nnim yɛn na Israel nso nnye yɛn nto mu deɛ; nanso wo, Ao Awurade, wo ne yɛn Agya, ɛfiri tete wo din ne Yɛn Gyefoɔ.
௧௬தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; யெகோவாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது ஆரம்பகாலமுதல் உம்முடைய நாமம்.
17 Adɛn, Ao Awurade, na woma yɛn kwati wʼakwan na wopirim yɛn akoma enti ɛmma yɛn nni wo ni? Sane bra ɛsiane wʼasomfoɔ, mmusuakuo a wɔyɛ wʼagyapadeɛ no enti.
௧௭யெகோவாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகச்செய்து, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்கு ஏன் கடினப்படுத்தவேண்டும்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உமக்குச் சொந்தமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.
18 Ɛberɛ tiawa bi mu wo nkurɔfoɔ faa wo kronkronbea nanso seesei yɛn atamfoɔ atiatia so.
௧௮பரிசுத்தமுள்ள உமது மக்கள் கொஞ்சக் காலமாத்திரம் அதைச் சுதந்தரித்தார்கள்; எங்கள் எதிரிகள் உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மிதித்துப்போட்டார்கள்.
19 Enti yɛyɛ wo dea firi tete nanso wɔn deɛ wonnii wɔn so ɔhene na wɔmmɔɔ wo din mfrɛɛ wɔn da.
௧௯நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் சூட்டப்பட்டதுமில்லை.