< Marko 4 >

1 Bere a ogu so rekyerɛkyerɛ no, nnipadɔm san betwaa ne ho hyiaa wɔ mpoano hɔ. Eyi nti ɔkɔtenaa ɔkorow mu toaa ne kyerɛkyerɛ no so.
இயேசு மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். அநேக மக்கள் அவரிடம் கூடிவந்ததினால், அவர் கடலிலே நின்ற ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கடற்கரையில் நின்றார்கள்.
2 Na sɛnea ɔyɛ daa no, ɔnam mmebu so kyerɛɛ wɔn nneɛma bebree se:
அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்:
3 “Muntie! Okuafo bi kɔɔ nʼafum koguu aba. Ogu so regu aba no,
கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதை விதைக்கப் புறப்பட்டான்.
4 Ogu so regu aba no, aba no bi guu kwankyɛn maa nnomaa bɛsosɔw ne nyinaa dii.
அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; வானத்துப் பறவைகள் வந்து அந்த விதைகளைத் தின்றுபோட்டது.
5 Ebi nso koguu ɔbotan a dɔte a ɛwɔ so no nnɔɔso so.
சில விதைகள் அதிக மண் இல்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தன; அதற்கு ஆழமான மண் இல்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது;
6 Ankyɛ na efifii, nanso esiane sɛ dɔte a ɛwɔ ɔbotan no so no nnɔɔso no nti owia bɔɔ so, na ne nyinaa hyewee.
வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேர் இல்லாததினால் உலர்ந்துபோனது.
7 Aba no bi nso guu nsɔe mu maa nsɔe no kyekyeree no nti antumi ansow aba.
சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, விதை பலன் கொடுக்காதபடி, அதை நெருக்கிப்போட்டது.
8 Aba no bi nso guu asase pa mu maa bi nyin sow mmɔho aduasa, ebi aduosia, na afoforo nso mmɔho ɔha.”
சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, உயர்ந்து வளருகிற பயிராகி, ஒன்று முப்பதுமடங்காகவும், ஒன்று அறுபதுமடங்காகவும், ஒன்று நூறுமடங்காகவும் பலன் தந்தது.
9 Na Yesu kae se, “Nea ɔwɔ aso no ntie!”
கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கட்டும் என்று அவர்களுக்குச் சொன்னார்.
10 Akyiri no a ɛkaa ɔne dumien no ne asuafo afoforo bi no, wobisaa no se, “Asɛm a wokae no ase ne dɛn?”
௧0அவர் தனிமையாக இருக்கிறபோது, பன்னிரண்டுபேரும், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் இந்த உவமையைக்குறித்து அவரிடம் கேட்டார்கள்.
11 Obuaa wɔn se, “Mo de, wɔada Onyankopɔn Ahenni ho ahintasɛm adi akyerɛ mo. Nanso afoforo de, wɔka no abebu mu na ɛkyerɛ wɔn.
௧௧அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது; வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
12 Esiane saa nti, “‘Wohu na wɔte, nanso wɔrente nea wɔte no ase, na wɔrennan mma Onyankopɔn nkyɛn, na wɔremfa wɔn bɔne nso nkyɛ wɔn.’
௧௨“அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது” என்றார்.
13 “Na sɛ moante saa bɛ yi ase a, ɛbɛyɛ dɛn na moate mmɛ ahorow a merebebu no ase?
௧௩பின்பு அவர் அவர்களைப் பார்த்து: “இந்த உவமையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? புரியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வீர்கள்?
14 Okuafo no asɛm no.
௧௪விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.
15 Aba a eguu kwankyɛn no gyina hɔ ma wɔn a wɔte Onyankopɔn asɛm, nanso sɛ wɔte asɛm no a ntɛm ara na ɔbonsam ba wɔn nkyɛn ma wɔn werɛ fi nea wɔate no nyinaa.
௧௫வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வழியருகே விதைக்கப்பட்டவர்கள்.
16 Aba a eguu ɔbotan so no gyina hɔ ma nnipa a wɔde anigye tie asɛm no.
௧௬அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,
17 Nanso wɔte sɛ aba a afifi foforo a ne ntin nkɔ fam. Mfiase no wɔkɔ so fɛfɛɛfɛ, nanso sɛ ɛba sɛ asɛm no nti ɔtaa anaa amanehunu bi to wɔn pɛ a na wɔapa abaw.
௧௭தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.
18 Aba a eguu nsɔe mu no nso gyina hɔ ma nnipa a wɔte asɛmpa no,
௧௮வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். (aiōn g165)
19 nanso ɛnkyɛ koraa na wiase yi mu afɛfɛde ne ahonyade ne ɔbra yi mu dadwen, nnaadaa ne nneɛma bi ho akɔnnɔ abɛhyɛ wɔn koma mu. Eyi nti asɛm no ntumi nsow aba biara. (aiōn g165)
௧௯இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.
20 Nnipa no bi te sɛ aba a wogu wɔ asase pa mu, wɔte asɛm no, wogye, na wɔsow aba— bi mmɔho aduasa, bi nso sow aduosia, na afoforo nso sow ɔha.”
௨0வசனத்தைக்கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதுமடங்கும், ஒன்று அறுபதுமடங்கும், ஒன்று நூறுமடங்காகவும் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்” என்றார்.
21 Afei Yesu bisaa wɔn se, “Moahu obi a ɔsɔ kanea na ɔde hyɛ mpa ase, anaasɛ ɔde ahina butuw so? Mmom mommfa nsi ne dua so ana?
௨௧பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: விளக்கு விளக்குத்தண்டின்மேல் வைக்கிறதற்குத்தானேதவிர, பாத்திரத்தின் கீழோ, கட்டிலின் கீழோ, வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?
22 Wɔbɛda nea ahintaw biara no adi, na nea wɔakata so biara no wɔde bepue gua.
௨௨வெளியரங்கமாகாத அந்தரங்கமும் இல்லை, வெளிக்குவராத மறைபொருளும் இல்லை.
23 Nea ɔwɔ aso a obetie no, ma ontie!
௨௩கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார்.
24 “Momfa asɛm a mote no nyɛ adwuma. Wɔde mo susukuruwa besusuw ama mo, na ama aboro so mpo.
௨௪பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.
25 Nea ɔwɔ no, wɔbɛma no bi aka ho; nea onni no, kakraa bi a ɔwɔ no mpo, wobegye afi ne nsam.”
௨௫உள்ளவன் எவனோ, அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவன் எவனோ, அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
26 Ɔkaa bio se, “Sɛnea Onyankopɔn Ahenni no te ni: Okuafo bi gu aba wɔ asase bi so.
௨௬பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனிதன் நிலத்தில் விதையை விதைத்து;
27 Awia ne anadwo, sɛ ɔda o, sɛ onyan o, aba no fifi a onnim sɛnea ɛyɛɛ a enyinii.
௨௭இரவில் தூங்கி, பகலில் விழிக்க, அவனுக்குத் தெரியாமலேயே, விதை முளைத்துப் பயிராவதற்கு ஒப்பாக இருக்கிறது.
28 Asase no ankasa bɔ nʼaduan, dua no na edi kan, afei etu mɛpɛsɛe na abɔ ama aba no anyin.
௨௮எப்படியென்றால், நிலமானது முதலில் முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாகக் கொடுக்கும்.
29 Sɛ aba no nyin wie a, okuafo no fa ne dade kotwa, efisɛ otwa bere adu.”
௨௯பயிர் விளைந்து அறுவடைக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.
30 Ɔsan kae se, “Dɛn ho na yɛde Ɔsoro Ahenni no bɛto, anaa mmebusɛm bɛn na yɛde bɛkyerɛkyerɛ mu?
௩0பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதை விளக்கிச் சொல்லமுடியும்?
31 Ɛte sɛ onyaa aba, a ɛyɛ ketewaa wɔ aba a wodua nyinaa mu.
௩௧அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியில் உள்ள எல்லாவிதைகளையும்விட மிக சிறியதாக இருக்கிறது;
32 Na sɛ wodua a enyin yɛ kɛse sen nnua a aka no nyinaa, eyiyi mman akɛse ma wim nnomaa besisi ne nwini mu.”
௩௨விதைக்கப்பட்டப் பின்போ, அது வளர்ந்து, எல்லாப் பூண்டுகளையும்விட மிக பெரிதாக வளர்ந்து, ஆகாயத்துப் பறவைகள் அதின் நிழலின்கீழ் வந்து கூடுகளைக்கட்டத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.
33 Mmebu a ɛtete sɛ eyinom na Yesu de kaa asɛm no kyerɛɛ wɔn, sɛnea wobetumi ate ase.
௩௩அவர்கள் கேட்டுப் புரிந்துகொள்வதற்கு ஏற்றபடி, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.
34 Ɔnam mmebu so na ɔkasa kyerɛɛ wɔn a wobetiee no no nyinaa, na sɛ ɛka ɔne nʼasuafo no nko a, ɔkyerɛ wɔn ne nyinaa ase.
௩௪உவமைகள் இல்லாமல் அவர்களுக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீடர்களோடு தனிமையாக இருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கிச்சொன்னார்.
35 Eduu anwummere no, Yesu ka kyerɛɛ nʼasuafo no se, “Momma yentwa nkɔ asuogya nohɔ.”
௩௫அன்று மாலைநேரத்தில், அவர் அவர்களைப் பார்த்து: அக்கரைக்குப் போகலாம் வாருங்கள் என்றார்.
36 Ɔkaa saa no, wogyaw nnipadɔm no hɔ na ɔne wɔn kɔe a akorow afoforo di wɔn akyi.
௩௬அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, அவர் படகில் இருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறு படகுகளும் அவரோடு இருந்தது.
37 Prɛko pɛ, ahum kɛse bi tu maa asorɔkye bu bɛkataa ɔkorow no so ma ɛyɛɛ sɛ ɛremem.
௩௭அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படகு நிரம்பும் அளவிற்கு, அலைகள் படகின்மேல் மோதியது.
38 Saa bere no, na Yesu wɔ ɔkorow no to de ne ti ato sumii so ada. Asuafo no de ahopopo ne nteɛteɛ mu konyan no kae se, “Kyerɛkyerɛfo, yɛreyɛ amem yi ɛmfa wo ho?”
௩௮இயேசு, கப்பலின் பின்பக்கத்தில் தலையணையை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மரித்துப்போவதைப்பற்றி உமக்குக் கவலை இல்லையா? என்றார்கள்.
39 Ɔsɔre teɛteɛɛ mframa no ka kyerɛɛ po no se, “Yɛ komm!” Mframa no gyaee, na po no yɛɛ komm!
௩௯அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: சீராதே, அமைதியாக இரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதி உண்டானது.
40 Yesu bisaa wɔn se, “Adɛn na moyɛ ahufo sɛɛ? Moda so nni gyidi ara?”
௪0அவர் அவர்களைப் பார்த்து: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போனது என்றார்.
41 Na wɔn ho dwiriw wɔn yiye, bisabisaa wɔn ho wɔn ho se, “Onipa bɛn ni a mframa ne po mpo tie no yi?”
௪௧அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

< Marko 4 >