< 3 Mose 19 >

1 Awurade ka kyerɛɛ Mose se,
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
2 “Ka kyerɛ Israelfo no se, ‘Monyɛ kronkron, efisɛ me Awurade a meyɛ mo Nyankopɔn no, meyɛ kronkron.
“நீ இஸ்ரவேல் மக்களின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் யெகோவாவாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராக இருங்கள்.
3 “‘Ɛsɛ sɛ mode nidi ma mo nanom ne mo agyanom na mudi me homeda mmara no so, efisɛ meyɛ Awurade mo Nyankopɔn.
உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை அனுசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
4 “‘Monnsom ohoni, anaa monnyɛ nnade anyame bi mma mo ho. Mene Awurade mo Nyankopɔn.
சிலைகளை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
5 “‘Sɛ mobɔ asomdwoe afɔre ma Awurade a momfa ɔkwan pa so mmɔ na asɔ Awurade ani.
“நீங்கள் சமாதானபலியைக் யெகோவாவுக்குச் செலுத்தினால், அதை மன உற்சாகமாகச் செலுத்துங்கள்.
6 Da a mobɛbɔ saa afɔre no, munni no da no ara, na aboro so koraa na ɛsɛ sɛ mudi no adekyee. Monhyew nea ebedi nnansa no.
நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைச் சாப்பிடவேண்டும்; மூன்றாம் நாள்வரை மீதியானது நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
7 Na nea mubedi no nnansa so no yɛ akyiwade ma me, enti mɛpo.
மூன்றாம் நாளில் அதில் எதையாகிலும் சாப்பிட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கீகரிக்கப்படமாட்டாது.
8 Sɛ mudi no nnansa so a, mudi ho fɔ na moagu Awurade kronkronyɛ nso ho fi, na wobetwa mo asu afi Awurade nkurɔfo mu.
அதைச் சாப்பிடுகிறவன் யெகோவாவுக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினதினால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான்.
9 “‘Sɛ mutwa mo nnɔbae a, munntwa nnɔbae a ɛwɔ mo mfuw nhanoa no. Sɛ moretwa a, aba a ebegu fam no nso, monntase.
“நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும்,
10 Saa ara na mo bobe so aba no nso, ɛnsɛ sɛ motew ne nyinaa. Na nea ɛbɛtew agu ase no nso, monntase. Munnyaw mma ahiafo ne akwantufo a wɔbɛfa hɔ no na mene Awurade mo Nyankopɔn.
௧0உன் திராட்சைத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை ஏழைகளுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
11 “‘Mommmɔ korɔn. “‘Munntwa atoro. “‘Na munnsisi obiara.
௧௧“நீங்கள் திருடாமலும், வஞ்சனைசெய்யாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.
12 “‘Monnka ntamhunu mfa ngu mo Nyankopɔn din ho fi, efisɛ mene Awurade.
௧௨என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் யெகோவா.
13 “‘Nwia wo yɔnko na munnsisi obi. “‘Na mo apaafo nso, muntua wɔn ka ntɛm. Na sɛ ɛka bi bɛtɔ mo ne wɔn ntam a, mommma ade nkye so.
௧௩“பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்வரை உன்னிடத்தில் இருக்கக்கூடாது.
14 “‘Monnnome ɔsotifo na munntwintwan onifuraefo akwan mu. Munsuro mo Nyankopɔn; Mene Awurade.
௧௪செவிடனை நிந்திக்காமலும், குருடனுக்கு முன்னே தடைகளை வைக்காமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் யெகோவா.
15 “‘Ɛsɛ sɛ bere biara atemmufo bu atɛntrenee a wɔnhwɛ sɛ nea worebu no atɛn no yɛ ohiani anaa ɔdefo. Ɛsɛ sɛ daa wɔn atemmu yɛ pɛpɛɛpɛ.
௧௫“நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்திற்கு பயப்படாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.
16 “‘Munnni nseku. “‘Mfa bɔne bi ho asɛm nto wo yɔnko so, na mene Awurade.
௧௬உன் மக்களுக்குள்ளே அங்கும் இங்கும் கோள்சொல்லித் திரியாதே; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் யெகோவா.
17 “‘Ntan wo nua. Ka obiara a ɔyɛ bɔne anim; mma ɔbɔnefo mfa ne ho nni. Sɛ woyɛ saa a, wo nso wudi ho fɔ saa ara.
௧௭“உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே; பிறன்மேல் பாவம் சுமராதபடி அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.
18 “‘Ntɔ were. Nnya obi ho menasepɔw; na mmom, dɔ wo yɔnko sɛ wo ho, na mene Awurade.
௧௮பழிக்குப்பழி வாங்காமலும் உன் மக்கள்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் யெகோவா.
19 “‘Munni me mmara so. “‘Mma wo nantwi mforo aboa foforo bi. “‘Nnua afifide a egu ahorow abien wɔ wʼafuw mu. “‘Nhyɛ atade a wɔde atam ahorow abien na anwen.
௧௯“என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகங்களை வேறு இனத்தோடே பெருகச்செய்யாதே; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதைக்காதே; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த உடையை அணியாதே
20 “‘Sɛ obi ne afenaa bi a obi asi no asiwa da a, ɛsɛ sɛ wodi wɔn asɛm wɔ asennii nanso ɛnsɛ sɛ wokum wɔn, efisɛ afenaa no nne ho.
௨0“ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு ஆணுக்கு நியமிக்கப்பட்டவளாக இருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாக விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் காம உணர்வுடன் உடலுறவுகொண்டால், அவர்கள் கொலை செய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுதந்திரமுள்ளவள் அல்ல.
21 Ɔbarima no na ɔde nʼafɔdi afɔrebɔde bɛbrɛ Awurade wɔ Ahyiae Ntamadan no kwan ano. Ɛsɛ sɛ afɔrebɔde no yɛ odwennini.
௨௧அவன் தன் குற்றநிவாரணபலியாக ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்.
22 Ɔsɔfo no de odwennini no bɛyɛ mpata ama ɔbarima no bɔne a ɔyɛe no na ama wɔde ne bɔne no akyɛ no.
௨௨அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
23 “‘Sɛ mokɔ asase bi so kodua nnuaba ahorow pii a, nnɔbaetwa abiɛsa a edi kan no, munnni, efisɛ wobu no sɛ ɛho agu fi.
௨௩“நீங்கள் அந்த தேசத்தில் வந்து, சாப்பிடத்தக்க பழங்களைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு அவைகளின் பழங்களை விருத்தசேதனம் இல்லாதவைகளென்று கருதுவீர்களாக; மூன்று வருடங்கள் அது சாப்பிடப்படாமல், விருத்தசேதனம் இல்லாததாக உங்களுக்கு கருதப்படவேண்டும்.
24 Na ne mfe anan so no, momfa aba no nyinaa mma Awurade mfa nkamfo no.
௨௪பின்பு நான்காம் வருடத்திலே அவைகளின் பழங்களெல்லாம் யெகோவாவுக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாக இருக்கும்.
25 Na ne mfe anum so no, aba no yɛ mo dea. Eyi bɛma mo nnɔbae so ato. Mene Awurade mo Nyankopɔn.
௨௫ஐந்தாம் வருடத்திலே அவைகளின் பழங்களைச் சாப்பிடலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
26 “‘Monnwe aboa biara a wɔnsɔnee ne mu mogya no nam. “‘Mommfa mo ho nkɔ asumansɛm anaa abayisɛm mu.
௨௬“யாதொன்றையும் இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். குறிகேட்காமலும், நாள்பார்க்காமலும் இருப்பீர்களாக.
27 “‘Ɛnsɛ sɛ mutwitwa mo moma so nwi twitwa mo abɔgyesɛ so.
௨௭உங்கள் தலைமுடியைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
28 “‘Munntwitwa mo honam mma awufo anaa monnyɛ agyiraehyɛde ahorow wɔ mo ho. Mene Awurade.
௨௮செத்தவனுக்காக உங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் யெகோவா.
29 “‘Mma wo babea nkɔbɔ aguaman mfa ngu ne ho fi na asase no annan abɔnefo ne nguamanfo asase.
௨௯“தேசத்தார் வேசித்தனம்செய்து தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடி உன் மகளை வேசித்தனம்செய்ய விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காதே.
30 “‘Munni me homeda mmara no so na munni me kronkronbea no ni, efisɛ mene Awurade.
௩0என் ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாக இருப்பீர்களாக; நான் யெகோவா.
31 “‘Monnkɔ asuman anaa ahonhom nkyɛn abisa mmfa ngu mo ho fi, na mene Awurade mo Nyankopɔn.
௩௧“மாந்திரீகம் செய்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
32 “‘Momfa obu ne nidi mma mpanyimfo wɔ Onyamesuro mu. Mene Awurade.
௩௨“நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனப்படுத்தி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் யெகோவா.
33 “‘Sɛ ɔhɔho bɛtena mo mu a munnsisi no.
௩௩“யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.
34 Mummu wɔn sɛnea mubu onipa biara. Monnodɔ wɔn sɛ mo ho na monkae sɛ, na mo nso moyɛ ahɔho wɔ Misraim asase so. Mene Awurade mo Nyankopɔn.
௩௪உங்களிடத்தில் குடியிருக்கிற அந்நியனை இஸ்ரவேலனைப்போல கருதி, நீங்கள் உங்களில் அன்புசெலுத்துவதுபோல அவனிலும் அன்புசெலுத்துவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
35 “‘Mommfa atoro nsusuwde nsusuw, nkari anaa nkan mo biribiara.
௩௫“நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.
36 Momfa nokware nsania, nkaribo ne asusuwde a eye. Mene Awurade mo Nyankopɔn a mede mo fi Misraim bae no.
௩௬நியாயமான தராசும், நியாயமான நிறைகல்லும், நியாயமான மரக்காலும், நியாயமான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா.
37 “‘Munni me mmaransɛm ne mʼahyɛde no nyinaa so, na mene Awurade.’”
௩௭ஆகையால் என்னுடைய கட்டளைகள், நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் யெகோவா என்று சொல்” என்றார்.

< 3 Mose 19 >