< Hiob 35 >

1 Afei, Elihu kae se:
தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
2 “Wugye di sɛ, eyi fata? Woka se, ‘Onyankopɔn betwitwa agye me.’
“‘என் நீதி இறைவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியது,’ என்று நீர் சொல்வது நியாயம் என்று நினைக்கிறீரோ?
3 Nanso wubisa no se, ‘Mfaso bɛn na menya, na sɛ manyɛ bɔne a, mfaso bɛn na menya?’
நீர், ‘நான் பாவம் செய்யாதிருப்பதால் எனக்கு என்ன பலன்? என்ன இலாபம்?’ என்று இறைவனிடம் கேட்கிறீர்.
4 “Mepɛ sɛ mibua wo ne wo nnamfonom nyinaa.
“இப்பொழுது நான் உமக்கும் உம்மோடிருக்கும் உமது சிநேகிதருக்கும் பதில்சொல்ல விரும்புகிறேன்.
5 Ma wʼani so kyerɛ soro na hwɛ; hwɛ omununkum a ɛwɔ wʼatifi sorosoro nohɔ.
வானங்களை மேலே நோக்கிப்பாரும்; உமக்கு மேலாக மிக உயரத்தில் இருக்கும் மேகங்களையும் உற்றுப் பாரும்.
6 Sɛ woyɛ bɔne a, ɔkwan bɛn so na ɛfa haw no? Mpo sɛ wo bɔne dɔɔso a, nsunsuanso bɛn na enya wɔ ne so?
நீர் பாவம்செய்தால் அது அவரை எப்படிப் பாதிக்கும்? உன் பாவங்கள் அதிகமானாலும் அவை அவரை என்ன செய்யும்?
7 Sɛ woteɛ a, dɛn na wode ma no anaasɛ dɛn na onya fi wo nsam?
நீ நேர்மையானவனாக இருந்தால் நீர் அவருக்கு எதைக் கொடுக்கிறீர்? அல்லது அவர் உம் கையில் இருந்து எதைப் பெற்றுக்கொள்கிறார்?
8 Wʼamumɔyɛ ka onipa a ɔte sɛ wo na wo trenee ka nnipa mma nko ara.
உம்முடைய கொடுமைகள் உம்மைப்போன்ற மனிதருக்குப் பாதிப்பையும், உம்முடைய நீதி மனுமக்களுக்கு நன்மையையும் அளிக்கும்.
9 “Nnipa su bere a wɔhyɛ wɔn so; na wɔsrɛ mmoa fi nea ɔwɔ tumi nsam.
“ஒடுக்குதலின் மிகுதியால் மனிதர் கதறுகிறார்கள்; பலவானின் கரத்திலிருந்து விடுதலைக்காக கதறுகிறார்கள்.
10 Nanso obi mmisa se, ‘Ɛhe na Onyankopɔn, me Yɛfo no wɔ, nea ɔma nnwom anadwo no,
ஆனால், ‘என்னைப் படைத்த இறைவன் எங்கே? இரவிலே பாடல்களைத் தருபவர் எங்கே?
11 nea ɔkyerɛ yɛn nimdeɛ bebree sen asase so mmoa na ɔma yehu nyansa sen wim nnomaa no?’
பூமியின் மிருகங்களைவிட நமக்கு அதிகமாகப் போதிப்பவர் எங்கே? ஆகாயத்துப் பறவைகளைவிட நம்மை ஞானிகள் ஆக்குகிறவர் எங்கே?’ என்று கேட்பவர் ஒருவருமில்லை.
12 Sɛ nnipa su teɛ mu a, ommua, amumɔyɛfo ahantan nti.
கொடியவர்களின் அகந்தையின் நிமித்தம், மனிதர் அழும்போது இறைவன் அவர்களுக்குப் பதில் கொடுப்பதில்லை.
13 Ampa ara Onyankopɔn rentie wɔn nkotosrɛ hunu no; na Otumfo remmu.
இறைவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார்; எல்லாம் வல்லவர் அதைக் கவனிக்கமாட்டார்.
14 Ɛno de adɛn na ɔrentie bere a woka se wunhu no, na woka se wʼasɛm wɔ nʼanim enti ɛsɛ sɛ wotwɛn no,
அப்படியிருக்கையில், நீர் அவரைக் காணவில்லை என்றும், உமது வழக்கு அவர் முன்னால் இருக்கிறது என்றும், நீர் அவருக்காகக் காத்திருக்கவேண்டும் என்றும் சொல்கிறபோது, அவர் உமக்குச் செவிகொடுப்பாரோ?
15 na bio, nʼabufuw mmfa asotwe mma na nʼani nni amumɔyɛsɛm akyi pii?
மேலும், அவருடைய கோபம் மனிதரைத் தண்டிப்பது இல்லை; என்றும் மனிதரின் கொடுமையை அவர் கொஞ்சமும் கவனிப்பதில்லை என்று எண்ணி,
16 Enti Hiob bue nʼano ka nsɛnhunu; nimdeɛ a onni nti, ɔkeka nsɛm bebree.”
யோபு தன் வாயைத் திறந்து வீணாய்ப் பேசி, அறிவில்லாமல் தன் வார்த்தைகளை வசனிக்கிறார்.”

< Hiob 35 >