< Hiob 23 >
2 “Nnɛ mpo, mʼanwiinwii mu da so yɛ den; ne nsa ayɛ den, mʼapinisi nyinaa akyi.
௨“இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரட்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைவிட என் வாதை கடினமானது.
3 Sɛ minim baabi a mehu no; anaasɛ metumi akɔ ne tenabea a
௩நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் இருக்கைக்கு முன்பாக வந்து சேர்ந்து,
4 anka mɛka mʼasɛm wɔ nʼanim na magye akyinnye bebree.
௪என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து, காரியத்தை நிரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.
5 Anka mɛte mmuae a ɔde bɛma me, na madwen nea ɔbɛka ho.
௫அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.
6 Ɔbɛsɔre atia me dennen ana? Dabi, ɔremmɔ me kwaadu.
௬அவர் தம்முடைய மகா வல்லமையினால் என்னுடன் வழக்காடுவாரோ? அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார்.
7 Ɛhɔ de, nnipa trenee betumi aka nʼasɛm wɔ nʼanim, na wobegye me afi me temmufo nsam afebɔɔ.
௭அங்கே சன்மார்க்கன் அவருடன் வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் விலக்கிக் காப்பாற்றிக்கொள்வேன்.
8 “Nanso sɛ mekɔ apuei fam a onni hɔ; sɛ mekɔ atɔe fam nso a minhu no.
௮இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை; பின்னேபோனாலும் அவரைக் காணவில்லை.
9 Sɛ ɔreyɛ adwuma wɔ atifi fam a minhu no; sɛ ɔdan ne ho kɔ anafo fam a, mʼani nhye ne ho.
௯இடதுபுறத்தில் அவர் செயல்பட்டும் அவரைப் பார்க்கவில்லை; வலது புறத்திலும் நான் அவரைக் பார்க்காமலிருக்க மறைந்திருக்கிறார்.
10 Nanso onim ɔkwan a menam so; na sɛ ɔsɔ me hwɛ a mepue sɛ sikakɔkɔɔ.
௧0ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
11 Madi nʼanammɔn akyi pɛɛ; na manantew nʼakwan so a mamman.
௧௧என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய கட்டளையை விட்டு நான் விலகாமல் அதைக் கைக்கொண்டேன்.
12 Mentwee me ho mfii mmara nsɛm a efi nʼanom no ho, mama asɛm a efi nʼanom ho ahia me asen me daa aduan.
௧௨அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாகக் காத்துக்கொண்டேன்.
13 “Nanso obiara nni hɔ ka ne ho, na hena na obetumi atia no? Ɔyɛ biribiara a ɔpɛ.
௧௩அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய விருப்பத்தின்படியெல்லாம் செய்வார்.
14 Ɔde ne mmaransɛm di dwuma tia me; ɔda so kora nhyehyɛe a ɛte sɛɛ bebree.
௧௪எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
15 Ɛno nti na mebɔ hu wɔ nʼanim; na sɛ midwen eyinom nyinaa ho a, misuro no.
௧௫ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
16 Onyankopɔn ama me koma abotow; Otumfo ama mabɔ huboa.
௧௬தேவன் என் இருதயத்தை சோர்வடையச் செய்தார்; சர்வவல்லமையுள்ள தேவன் என்னைக் கலங்கச் செய்தார்.
17 Nanso sum no mma menka mʼano nto mu, sum kabii a ɛkata mʼanim no.
௧௭இருள் வராததற்கு முன்னே நான் அழிக்கப்படாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன்.