< 2 Mose 27 >
1 “Fa ɔkanto yɛ afɔremuka ma enyi ahinanan a nʼafanan no mu biara yɛ anammɔn ason ne fa na ne sorokɔ nso yɛ anammɔn anan ne fa.
௧“ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டாக்கவேண்டும்; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாக இருப்பதாக.
2 Yɛ mmɛn anan tuatua afɔremuka no ntwea anan no nyinaa so, na fa kɔbere dura ne nyinaa ho. Ɔkanto a wode bɛyɛ afɔremuka no, ɛno ara bi na wode bɛyɛ mmɛn no.
௨அதின் நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகளை உண்டாக்கவேண்டும்; அதின் கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும்.
3 Bokiti a nsõ begu mu, sofi, hweaseammɔ, adinam ne nsramma nkankye nyinaa, kɔbere na fa yɛ.
௩அதின் சாம்பலை எடுக்கத்தகுந்த சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணங்களையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்கவேண்டும்; அதின் பணிப்பொருட்களையெல்லாம் வெண்கலத்தால் செய்வாயாக.
4 Fa kɔbere yɛ ntwitae na fa dade nkaa hyehyɛ ne ntwea anan no so.
௪வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைச் செய்து, அந்தச் சல்லடையின் நான்கு மூலைகளிலும் நான்கு வெண்கல வளையங்களை உண்டாக்கி,
5 Fa ntwitae no hyɛ nsramma kuruwa no mu na fa si afɔremuka no basa a wɔayɛ no so.
௫அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதிஉயரத்தில் இருக்கும்படி அதை பலிபீடத்தின் அடியில் சுற்றடைப்புக்குக் கீழே வைக்கவேண்டும்.
6 Fa ɔkanto sen nnua a wɔde kɔbere adura ho a wɔde bɛsoa afɔremuka no.
௬பலிபீடத்திற்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடவேண்டும்.
7 Sɛ moresoa a, momfa nnua no nhyehyɛ nkaa a mode atuatua afɔremuka no ho no mu.
௭பலிபீடத்தைச் சுமக்கும்படி அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே மாட்டப்பட்டிருக்கவேண்டும்.
8 Ntaaboo na momfa nyɛ afɔremuka no. Momma emu nna kwan sɛnea mede kyerɛɛ mo wɔ bepɔw no so no.
௮அதை உள்ளே மற்றும் வெளியேவிட்டுப் பலகைகளினாலே செய்யவேண்டும்; மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அதைச் செய்யவேண்டும்.
9 “Twa adiwo ma Ahyiae Ntamadan no na fa ntama a wɔde asaawa a ɛyɛ fɛ ayɛ sensɛn ho. Nkataano a ɛsɛn anafo no tenten no nyɛ anammɔn ɔha aduonum
௯“ஆசரிப்பு கூடாரத்திற்கு பிராகாரத்தையும் உண்டாக்கவேண்டும்; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்திற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்.
10 a kɔbere nnua aduonu a esisi kɔbere nnyinaso aduonu mu no suso mu. Dwetɛ nkɔtɔkoro ne dwetɛ ntwea a ɛtetare dwetɛ afadum no ho no na ebesuso nsɛnanim no mu.
௧0அவைகளுக்கு வெண்கலத்தினால் இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும்.
11 Adiwo a ɛkyerɛ atifi fam no nso, saa ara na wɔnyɛ no. Nsɛnanim a ne tenten yɛ anammɔn ɔha aduonum, na nnua aduonu sisi kɔbere nnyinaso mu a dwetɛ nkɔtɔkoro ne ne ntwea tetare ho na ebegyina no.
௧௧அப்படியே வடக்கு பக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாக இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும்.
12 “Adiwo no fa a ɛkyerɛ atɔe fam no trɛw bɛyɛ anammɔn aduɔson anum a ekura nnua du a ntokuru du deda mu.
௧௨பிராகாரத்தின் மேற்கு பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும்.
13 Apuei fam nso bɛyɛ anammɔn aduɔson anum saa ara.
௧௩சூரியன் உதிக்கிற திசையாகிய கிழக்குப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பது முழ அகலமாக இருக்கவேண்டும்.
14 Baabi a ne kwan da nʼapuei fam no, wɔmfa nsɛnanotam a ne tenten yɛ anammɔn aduonu abien ne fa a nnua abiɛsa a esisi ntokuru abiɛsa mu suso mu no nsɛn ano.
௧௪அங்கே ஒரு பக்கத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
15 Baabi a ne kwan da wɔ nʼatɔe fam no nso, wɔmfa nsɛnanotam a ne tenten yɛ anammɔn aduonu abien ne fa nsɛn ano. Nnua abiɛsa a esisi ntokuru abiɛsa mu na ebesuso nsɛnanotam no mu.
௧௫மறுபக்கத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
16 “Adiwo hɔ no ano kwan nyɛ ntama nsɛnanim a ne trɛw yɛ anammɔn aduasa. Wɔde asaawa tuntum, bibiri ne koogyan bedi mu adwinni fɛfɛɛfɛ. Wɔde nnua anan a esisi ne nnyinaso mu no nso besuso nsɛnanotam no mu.
௧௬பிராகாரத்தின் வாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலையாகச் செய்யப்பட்ட இருபதுமுழ நீளமான ஒரு தொங்கு திரையும் அதற்கு நான்கு தூண்களும், அவைகளுக்கு நான்கு பாதங்களும் இருக்கவேண்டும்.
17 Ɛsɛ sɛ nnua a ɛwɔ adiwo hɔ no nyinaa wɔde dwetɛ ntwea a dwetɛ suso mu, na nʼase no nso wɔde hyehyɛ kɔbere nnyinaso apipiripi mu.
௧௭சுற்று பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் வளையம் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
18 Enti adiwo hɔ tenten mu bɛyɛ anammɔn ɔha ne aduonum, na ne trɛw nso ayɛ anammɔn aduɔson anum. Wɔde nkataano a wɔde asaawatam bɛyɛ ne fasu, a ne sorokɔ nso bɛyɛ anammɔn ason ne fa. Ɛsɛ sɛ wɔde nnua a atwa adiwo hɔ no ho ahyia no sisi kɔbere nnyinaso no mu.
௧௮பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபக்கத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாக இருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாக இருக்கவேண்டும்.
19 Kɔbere na ɛsɛ sɛ wɔde yɛ Ahyiae Ntamadan mu hɔ nkankye a wɔde nneɛma gu mu, ne nnyinaso a wɔde nkankyee bɛsensɛn so wɔ ɔfasu ho no wɔ hɔ.
௧௯ஆசரிப்பு கூடாரத்தின் எல்லா பணிகளுக்குத் தேவையான எல்லா பணிப்பொருட்களும், அதின் எல்லா ஆப்புகளும், பிராகாரத்தின் எல்லா ஆப்புகளும் வெண்கலமாக இருக்கவேண்டும்.
20 “Ka kyerɛ Israelfo no na wɔmfa ngo kronkron a wɔde begu akanea a daa nyinaa ebesi so no mmrɛ wo.
௨0குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேலர்களுக்குக் கட்டளையிடு.
21 Aaron ne ne mmabarima na wɔde akanea a ennum da no besi Ahyiae Ntamadan no mu. Wɔbɛhwɛ so daa ama Awurade, sɛnea ɛbɛyɛ a ɛrennum. Eyi yɛ mmara a ɛsɛ sɛ Israelfo di so daa.
௨௧கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைக்கு வெளியே ஆரோனும் அவனுடைய மகன்களும் மாலை துவங்கி அதிகாலைவரை யெகோவாவுடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கவேண்டும்; இது இஸ்ரவேலர்களின் தேசத்திற்கு தலைமுறை தலைமுறையாக நிரந்தர கட்டளையாக இருக்கட்டும்.