< 5 Mose 5 >

1 Mose frɛɛ Israelfo no nyinaa ka kyerɛɛ wɔn se: Israel, muntie, mmara ne ahyɛde a mede rema mo nnɛ no. Munsua na munni so.
“மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலர்களே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்வதற்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
2 Bere a yɛwɔ Horeb no, Awurade yɛn Nyankopɔn ne yɛn yɛɛ apam bi.
நம்முடைய தேவனாகிய யெகோவா ஓரேபிலே நம்முடன் உடன்படிக்கை செய்தார்.
3 Ɛnyɛ yɛn agyanom na Awurade ne wɔn yɛɛ apam no, na mmom, ɔne yɛn a yɛte ase nnɛ yi nyinaa na ɛyɛe.
அந்த உடன்படிக்கையைக் யெகோவா நம்முடைய முற்பிதாக்களுடன் செய்யாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம் அனைவரோடும் செய்தார்.
4 Awurade fi bepɔw so ogya mu ne mo kasaa anikann.
யெகோவா மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாக உங்களோடு பேசினார்.
5 Migyinaa mo ne Awurade ntam, na mekaa Awurade asɛm kyerɛɛ mo efisɛ na musuro ogya no nti, moamforo bepɔw no. Nsɛm a ɔkae no ni:
யெகோவாவுடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிப்பதற்கு, அக்காலத்திலே நான் யெகோவாவுக்கும், உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்:
6 “Mene Awurade, mo Nyankopɔn, a miyii mo fii nkoasom mu wɔ Misraim no.
நீங்கள் அடிமைகளாய் வாழ்ந்த எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன் தேவனாகிய யெகோவா நானே.
7 “Monnsom onyame foforo biara nka me ho.
என்னைத்தவிர உனக்கு வேறு தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
8 Monnyɛ ohoni anaa biribiara a ɛsɛ ade a ɛwɔ wim, anaa nea ɛwɔ asase so, anaa nea ɛwɔ nsu mu, anaa nea ɛwɔ asase ase.
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு உருவத்தையாகிலும் யாதொரு சிலையையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.
9 Monnkotow ohoni biara nsom no wɔ ɔkwan biara so, na me, Awurade, mo Nyankopɔn, meyɛ ninkufo a metwe mma a wɔtan me no aso wɔ awofonom bɔne a wɔyɛ no ho kɔ awo ntoatoaso abiɛsa ne anan mu,
நீ அவைகளை வணங்கவும் பூஜை செய்யவும் வேண்டாம்; உன் தேவனாகிய யெகோவாவாயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து முற்பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைவரை விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
10 nanso meda ɔdɔ adi kyerɛ awo ntoatoaso mpem a wɔdɔ me na wodi mʼahyɛde so no.
௧0என்னிடத்தில் அன்புசெலுத்தி, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரைக்கும் இரக்கம்செய்கிறவராயிருக்கிறேன்.
11 Mommmɔ Awurade, mo Nyankopɔn no, din basabasa. Sɛ moyɛ saa a, obebu mo fɔ.
௧௧உன் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்தாதிருப்பாயாக; யெகோவா தம்முடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்துகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார்.
12 Monkae homeda na munni no sɛ da kronkron.
௧௨உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிப்பாயாக.
13 Nnansia na momfa nyɛ mo nnwuma nyinaa,
௧௩ஆறு நாளும் நீ வேலைசெய்து, உன் செயல்களையெல்லாம் நடப்பிப்பாயாக.
14 na da a ɛto so ason no yɛ Homeda ma Awurade, mo Nyankopɔn. Saa da no, ɛnsɛ sɛ moyɛ adwuma biara; ɛnsɛ sɛ mo mmabarima, mo mmabea anaa mo asomfo anaa mo anantwi ne mo mfurum anaa mo ahɔho yɛ adwuma biara.
௧௪ஏழாம் நாளோ உன் தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், மகளானாலும், வேலைக்காரனானாலும், வேலைக்காரியானாலும், எருதானாலும், கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் எந்தவொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும், வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;
15 Monkae sɛ bere bi a atwa mu no na moyɛ nkoa wɔ Misraim na Awurade, mo Nyankopɔn, nam anwonwatumi ne tumi nnwuma so na oyii mo fii hɔ. Ɛno nti na Awurade mo Nyankopɔn hyɛ mo sɛ munni Homeda no.
௧௫நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய யெகோவா உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படச்செய்தார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை அனுசரிக்க உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டார்.
16 Di wʼagya ne wo na ni sɛnea Awurade, mo Nyankopɔn, ahyɛ mo no, na ama wo nkwanna aware, na asi wo yiye wɔ asase a Awurade wo Nyankopɔn de rema wo no so.
௧௬உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும், தாயையும் மதிப்புடன் நடத்துவாயாக.
17 Nni awu.
௧௭கொலை செய்யாதிருப்பாயாக.
18 Nsɛe aware.
௧௮விபசாரம் செய்யாதிருப்பாயாக.
19 Mmɔ korɔn
௧௯திருடாதிருப்பாயாக.
20 Nni wo yɔnko ho adansekurum
௨0மற்றவனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
21 Mma wʼani mmere wo yɔnko yere. Mma wʼani mmere wo yɔnko fi anaa nʼasase anaa nʼakoa anaa nʼafenaa, ne nʼanantwi, nʼafurum anaa biribiara a ɛyɛ wo yɔnko dea.”
௨௧மற்றவனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; அவனுடைய வீட்டையும், நிலத்தையும், வேலைக்காரனையும், வேலைக்காரியையும், எருதையும், கழுதையையும், மேலும் அவனுக்குச் சொந்தமான எதையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
22 Eyinom ne mmaransɛm a Awurade de nne kɛse a efi ogyaframa no mu pae mu ka kyerɛɛ mo fii omununkum a esum kabii atwa ho ahyia mu wɔ bepɔw no so a wamfa hwee anka ho. Na ɔkyerɛw guu abo pon abien so de maa me.
௨௨“இந்த வார்த்தைகளைக் யெகோவா மலையிலே அக்கினி, மேகம், காரிருள் ஆகியவற்றிலிருந்து உங்கள் சபையார் அனைவரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி என்னிடத்தில் கொடுத்தார்.
23 Motee nne no fii esum mu bere a bepɔw no so redɛw ogya framfram no, mmusuakuw mu ntuanofo no nyinaa baa me nkyɛn.
௨௩மலை அக்கினியாக எரியும்போது இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவர்களும் மூப்பர்களுமாகிய நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து:
24 Wɔkae se, “Awurade, yɛn Nyankopɔn, akyerɛ yɛn nʼanuonyam ne ne tumi na yɛate ne nne afi ogya no mu. Nnɛ, yɛahu sɛ, sɛ Onyankopɔn ne onipa kasa koraa a, onipa tumi tena ase.
௨௪“இதோ, நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து பேசின அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனிதனுடன் பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளில் கண்டோம்.
25 Na afei, adɛn nti na ɛsɛ sɛ yewuwu? Sɛ Awurade, yɛn Nyankopɔn, kasa kyerɛ yɛn bio a, akyinnye biara nni ho sɛ yebewu na ogya no ahyew yɛn pasaa.
௨௫இப்பொழுது நாங்கள் ஏன் சாகவேண்டும்? இந்தப் பெரிய அக்கினி எங்களை சுட்டெரிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கேட்போமானால் சாவோம்.
26 Efisɛ ɔkra teasefo bɛn na wate Onyankopɔn teasefo no nne sɛ ɛrekasa fi ogyaframa no mu na watena ase ana?
௨௬நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டா?
27 Kɔ na kotie nea Awurade, yɛn Nyankopɔn no, ka no. Na afei, bra na bɛka biribiara a ɔka kyerɛɛ wo no kyerɛ yɛn, na yebetie na yɛadi so.”
௨௭நீரோ அருகில் சென்று, நம்முடைய தேவனாகிய யெகோவா சொல்வதையெல்லாம் கேட்டு, அவைகளை நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள்.
28 Awurade tee mo nne bere a mokasa kyerɛɛ me no, Awurade ka kyerɛɛ me se, “Mate nsɛm a saa nnipa yi ka kyerɛɛ wo no. Nsɛm a wɔkaa no nyinaa ye.
௨௮நீங்கள் என்னுடன் பேசும்போது, யெகோவா உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, யெகோவா என்னை நோக்கி; “இந்த மக்கள் உன்னிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாக இருந்தது.
29 Ao, sɛ daa wobenya koma sɛnea ɛbɛma wɔasuro me na wɔadi mʼahyɛde nyinaa so a, anka ebeye ama wɔn ne wɔn asefo nyinaa afebɔɔ.
௨௯அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருப்பதற்கு, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.
30 “Kɔ na kɔka kyerɛ wɔn se, wɔnsan mmra wɔn ntamadan mu.
௩0நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள் என்று அவர்களுக்குச் சொல்.
31 Nanso wo de, wo ne me ntena ha sɛnea ɛbɛyɛ a metumi de mʼahyɛde ne me mmara ama wo. Wobɛkyerɛkyerɛ nnipa no sɛnea wobetie wɔ asase a mede rema wɔn no so sɛ wɔn agyapade no.”
௩௧நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய சகல கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார்.
32 Enti mohwɛ yiye na n monyɛ nea Awurade mo Nyankopɔn ahyɛ mo no; momman mfa nifa anaa benkum.
௩௨உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய கவனமாக இருங்கள்; வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்பீர்களாக.
33 Munni nea Awurade, mo Nyankopɔn, ahyɛ mo no nyinaa so na ama moanya nkwa, na asi mo yiye, na no nna aware wɔ asase a morekɔfa no so.
௩௩நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்திலே பிழைத்து சுகமாக நீண்டநாட்கள் வாழ, உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு ஏற்படுத்தின வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.

< 5 Mose 5 >