< Mezmurlar 5 >
1 Müzik şefi için - Ney için - Davut'un mezmuru Sözlerime kulak ver, ya RAB, İniltilerimi işit.
புல்லாங்குழல்களுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் பெருமூச்சைக் கவனியும்.
2 Feryadımı dinle, ey Kralım ve Tanrım! Duam sanadır.
உதவிக்காய் கதறும் என் சத்தத்தைக் கேளும், என் அரசனே, என் இறைவனே, உம்மிடமே நான் வேண்டுகிறேன்.
3 Sabah sesimi duyarsın, ya RAB, Her sabah sana duamı sunar, umutla beklerim.
யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்; நான் என் வேண்டுதல்களைக் காலையில் உம்முன் வைத்து, எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன்.
4 Çünkü sen kötülükten hoşlanan Tanrı değilsin, Kötülük senin yanında barınmaz.
நீர் கொடுமையானதில் மகிழ்ச்சியடையும் இறைவன் அல்ல; தீயவர் உம்முடன் குடியிருக்க முடியாது.
5 Böbürlenenler önünde duramaz, Bütün suç işleyenlerden nefret duyar,
திமிர் பிடித்தவர்கள் உமது சமுகத்தில் நிற்கமுடியாது; அநியாயம் செய்யும் எல்லோரையும் நீர் வெறுக்கிறீர்.
6 Yalan söyleyenleri yok edersin; Ya RAB, sen eli kanlılardan, Aldatıcılardan tiksinirsin.
பொய் சொல்கிறவர்களை நீர் அழிக்கிறீர்; இரத்த வெறியரையும் வஞ்சகமுள்ள மனிதரையும் யெகோவா அருவருக்கிறார்.
7 Bense bol sevgin sayesinde Kutsal tapınağına gireceğim; Oraya doğru saygıyla eğileceğim.
ஆனால் நானோ, உமது மிகுந்த உடன்படிக்கையின் அன்பினாலே உமது வீட்டிற்கு வந்து, உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்கி பயபக்தியுடன் வணங்குவேன்.
8 Yol göster bana doğruluğunla, ya RAB, Düşmanlarıma karşı! Yolunu önümde düzle.
யெகோவாவே, என் எதிராளிகளின் நிமித்தம் உம்முடைய நீதியில் என்னை வழிநடத்தும்; உமது வழியை எனக்கு முன்பாக நேராக்கும்.
9 Çünkü onların sözüne güvenilmez, Yürekleri yıkım dolu. Ağızları açık birer mezardır, Yaltaklanır dururlar.
அவர்களுடைய வாயின் வார்த்தை ஒன்றைகூட நம்பமுடியாது; அவர்களுடைய இருதயம் அழிவினால் நிரம்பியிருக்கிறது; அவர்களின் தொண்டையோ திறந்திருக்கும் சவக்குழி; அவர்கள் தங்கள் நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள்.
10 Ey Tanrı, onları suçlu çıkar! Kurdukları düzen yıkımlarına yol açsın. Kov onları sayısız isyanları yüzünden. Çünkü sana karşı ayaklandılar.
இறைவனே, அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளியும்; அவர்களுடைய சதித்திட்டங்களினாலேயே அவர்கள் விழுந்துபோகட்டும். அவர்களுடைய அநேக பாவங்களின் நிமித்தம், அவர்களைத் துரத்திவிடும்; ஏனெனில், அவர்கள் உமக்கு விரோதமாகக் கலகம் செய்திருக்கிறார்கள்.
11 Sevinsin sana sığınan herkes, Sevinç çığlıkları atsın sürekli, Kanat ger üzerlerine; Sevinçle coşsun adını sevenler sende.
ஆனால் உம்மிடத்தில் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்ச்சியடையட்டும்; அவர்கள் சந்தோஷத்தினால் என்றென்றும் பாடட்டும்; உமது பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் களிப்படையும்படி, அவர்களை உமது பாதுகாப்பினால் மூடிக்கொள்ளும்.
12 Çünkü sen doğru kişiyi kutsarsın, ya RAB, Çevresini kalkan gibi lütfunla sararsın.
யெகோவாவே, நீர் நிச்சயமாகவே நீதிமான்களை ஆசீர்வதிக்கிறவர்; ஒரு கேடயத்தைப் போல, உமது தயவினால் நீர் அவர்களைச் சூழ்ந்துகொள்ளுவீர்.