< Mezmurlar 143 >
1 Davut'un mezmuru Duamı işit, ya RAB, Yalvarışlarıma kulak ver! Sadakatinle, doğruluğunla yanıtla beni!
தாவீதின் சங்கீதம். யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும், இரக்கத்திற்கான என் கதறுதலுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் நீதியின்படியும் எனக்கு பதில் தாரும்.
2 Kulunla yargıya girme, Çünkü hiçbir canlı senin karşında aklanmaz.
உமது அடியானை நியாயந்தீர்க்காதேயும். வாழ்கின்ற ஒருவருமே உமக்கு முன்பாக நீதிமான்கள் இல்லையே.
3 Düşman beni kovalıyor, Ezip yere seriyor. Çoktan ölmüş olanlar gibi, Beni karanlıklarda oturtuyor.
பகைவன் என்னைப் பின்தொடர்கிறான், அவன் என்னை தரையில் போட்டு தாக்குகிறான்; வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்களைப்போல், அவன் என்னை இருளில் குடியிருக்கப்பண்ணுகிறான்.
4 Bu yüzden bunalıma düştüm, Yüreğim perişan.
ஆகவே எல்லா நம்பிக்கையையும் இழந்து என் ஆவி எனக்குள் சோர்ந்துபோகிறது; பயத்தால் என் இருதயம் கலங்குகிறது.
5 Geçmiş günleri anıyor, Bütün yaptıklarını derin derin düşünüyor, Ellerinin işine bakıp dalıyorum.
நான் முந்தின நாட்களை நினைக்கிறேன்; உமது செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.
6 Ellerimi sana açıyorum, Canım kurak toprak gibi sana susamış. (Sela)
நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகம் கொண்டிருக்கிறது.
7 Çabuk yanıtla beni, ya RAB, Tükeniyorum. Çevirme benden yüzünü, Yoksa ölüm çukuruna inen ölülere dönerim.
யெகோவாவே, சீக்கிரமாய் எனக்குப் பதில் தாரும்; என் உள்ளம் சோர்ந்துபோகிறது; உமது முகத்தை என்னிடமிருந்து மறையாதேயும்; இல்லாவிட்டால், நான் மரணக் குழியில் இறங்குகிறவர்களைப் போலாகிவிடுவேன்.
8 Sabahları duyur bana sevgini, Çünkü sana güveniyorum; Bana gideceğim yolu bildir, Çünkü duam sanadır.
காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும், ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்; நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும், ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன்.
9 Düşmanlarımdan kurtar beni, ya RAB; Sana sığınıyorum.
யெகோவாவே, என் பகைவரிடமிருந்து என்னைத் தப்புவியும்; ஏனெனில் நான் உமக்குள் என்னை மறைத்துக்கொள்கிறேன்.
10 Bana istemini yapmayı öğret, Çünkü Tanrım'sın benim. Senin iyi Ruhun Düz yolda bana öncülük etsin!
நீரே என் இறைவன்; ஆதலால் உமது சித்தத்தைச் செய்ய எனக்குப் போதியும்; உமது நல்ல ஆவியானவர் என்னை நல்வழியில் நடத்துவாராக.
11 Ya RAB, adın uğruna yaşam ver bana, Doğruluğunla kurtar beni sıkıntıdan.
யெகோவாவே, உமது பெயரின் மகிமைக்காக என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; உமது நியாயத்தினிமித்தம் வேதனையிலிருந்து என்னை விடுவியும்.
12 Sevginden ötürü, Öldür düşmanlarımı, Yok et bütün hasımlarımı, Çünkü senin kulunum ben.
உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என் பகைவரை அழித்துவிடும்; என் எதிரிகள் அனைவரையும் ஒழித்துவிடும்; ஏனெனில் நான் உமது அடியவன்.