< Mezmurlar 138 >

1 Davut'un mezmuru Bütün yüreğimle sana şükrederim, ya RAB, İlahlar önünde seni ilahilerle överim.
தாவீதின் பாடல். உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
2 Kutsal tapınağına doğru eğilir, Adına şükrederim, Sevgin, sadakatin için. Çünkü adını ve sözünü her şeyden üstün tuttun.
உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்; உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
3 Seslendiğim gün bana yanıt verdin, İçime güç koydun, beni yüreklendirdin.
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;
4 Şükretsin sana, ya RAB, yeryüzü krallarının tümü, Çünkü ağzından çıkan sözleri işittiler.
யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
5 Yaptığın işleri ezgilerle övsünler, ya RAB, Çünkü çok yücesin.
யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.
6 RAB yüksekse de, Alçakgönüllüleri gözetir, Küstahları uzaktan tanır.
யெகோவா உயர்ந்தவராக இருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
7 Sıkıntıya düşersem, canımı korur, Düşmanlarımın öfkesine karşı el kaldırırsın, Sağ elin beni kurtarır.
நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.
8 Ya RAB, her şeyi yaparsın benim için. Sevgin sonsuzdur, ya RAB, Elinin eserini bırakma!
யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும்.

< Mezmurlar 138 >