< Mezmurlar 129 >
1 Hac ilahisi Gençliğimden beri bana sık sık saldırdılar; Şimdi söylesin İsrail:
௧ஆரோகண பாடல். என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.
2 “Gençliğimden beri bana sık sık saldırdılar, Ama yenemediler beni.
௨என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.
3 Çiftçiler saban sürdüler sırtımda, Upuzun iz bıraktılar.”
௩உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
4 Ama RAB adildir, Kesti kötülerin bağlarını.
௪யெகோவாவோ நீதியுள்ளவர்; துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
5 Siyon'dan nefret eden herkes Utanç içinde geri çekilsin.
௫சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள்.
6 Damlardaki ota, Büyümeden kuruyan ota dönsünler.
௬வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; அது வளரும்முன்பு உலர்ந்துபோகும்.
7 Orakçı avucunu, Demetçi kucağını dolduramaz onunla.
௭அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை.
8 Yoldan geçenler de, “RAB sizi kutsasın, RAB'bin adıyla sizi kutsarız” demezler.
௮யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.