< Mezmurlar 128 >
1 Hac ilahisi Ne mutlu RAB'den korkana, O'nun yolunda yürüyene!
௧ஆரோகண பாடல். யெகோவாவுக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
2 Emeğinin ürününü yiyeceksin, Mutlu ve başarılı olacaksın.
௨உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
3 Eşin evinde verimli bir asma gibi olacak; Çocukların zeytin filizleri gibi sofranın çevresinde.
௩உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
4 İşte RAB'den korkan kişi Böyle kutsanacak.
௪இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான்.
5 RAB seni Siyon'dan kutsasın! Yeruşalim'in gönencini göresin, Bütün yaşamın boyunca!
௫யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
6 Çocuklarının çocuklarını göresin! İsrail'e esenlik olsun!
௬நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.