< Mezmurlar 125 >
1 Hac ilahisi RAB'be güvenenler Siyon Dağı'na benzer, Sarsılmaz, sonsuza dek durur.
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல் என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள்.
2 Dağlar Yeruşalim'i nasıl kuşatmışsa, RAB de halkını öyle kuşatmıştır, Şimdiden sonsuza dek.
மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல், யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும் தமது மக்களைச் சுற்றியிருக்கிறார்.
3 Kalmayacak kötülerin asası, Doğruların payına düşen toprakta, Yoksa doğrular haksızlığa el uzatabilir.
நீதிமான்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்டின்மேல், கொடியவர்களின் ஆட்சி நீடிக்காது; இல்லையெனில், நீதியற்றவர்களும் தீமைசெய்யத் தங்கள் கைகளை நீட்டலாம்.
4 İyilik et, ya RAB, İyilere, yüreği temiz olanlara.
யெகோவாவே, நல்லவர்களுக்கு, இருதயத்தில் நேர்மையாய் இருப்போருக்கு நன்மை செய்யும்.
5 Ama kendi halkından eğri yollara sapanları, RAB kötü uluslarla birlikte kovacak. İsrail'e esenlik olsun!
குறுக்கு வழிகளுக்குத் திரும்புகிறவர்களையோ, யெகோவா தீயவரோடேகூட தண்டிப்பார். இஸ்ரயேலின்மீது சமாதானம் உண்டாவதாக.