< Galatyalilar 1 >
1 İnsanlarca ya da insan aracılığıyla değil, İsa Mesih ve O'nu ölümden dirilten Baba Tanrı aracılığıyla elçi atanan ben Pavlus'tan ve benimle birlikte olan bütün kardeşlerden Galatya'daki kiliselere selam!
௧மனிதர்களாலும் இல்லை, மனிதர்கள் மூலமாகவும் இல்லை, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின பிதாவாகிய தேவனாலும் அப்போஸ்தலனாக இருக்கிற பவுலாகிய நானும்,
௨என்னோடு இருக்கிற சகோதரர்கள் எல்லோரும், கலாத்தியா நாட்டில் உள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது:
3 Babamız Tanrı'dan ve Rab İsa Mesih'ten sizlere lütuf ve esenlik olsun.
௩பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக;
4 Mesih, Babamız Tanrı'nın isteğine uyarak bizi şimdiki kötü çağdan kurtarmak için günahlarımıza karşılık kendini feda etti. (aiōn )
௪அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (aiōn )
5 Tanrı'ya sonsuzlara dek yücelik olsun! Amin. (aiōn )
௫அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
6 Sizi Mesih'in lütfuyla çağıranı bırakıp değişik bir müjdeye böylesine çarçabuk dönmenize şaşıyorum.
௬உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாகவிட்டு, வேறொரு வித்தியாசமான நற்செய்திக்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;
7 Gerçekte başka bir müjde yoktur. Ancak aklınızı karıştırıp Mesih'in Müjdesi'ni çarpıtmak isteyenler vardır.
௭வேறொரு நற்செய்தி இல்லையே; சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற விரும்புகிறார்கள்.
8 İster biz, ister gökten bir melek size bildirdiğimize ters düşen bir müjde bildirirse, lanet olsun ona!
௮நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைத்தவிர, நாங்களோ அல்லது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனோ, வேறொரு நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.
9 Daha önce söylediğimizi şimdi yine söylüyorum: Bir kimse size kabul ettiğinize ters düşen bir müjde bildirirse, ona lanet olsun!
௯முன்பே சொன்னதுபோல மீண்டும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைத்தவிர வேறொரு நற்செய்தியை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.
10 Şimdi ben insanların onayını mı, Tanrı'nın onayını mı arıyorum? Yoksa insanları mı hoşnut etmeye çalışıyorum? Eğer hâlâ insanları hoşnut etmek isteseydim, Mesih'in kulu olmazdım.
௧0இப்பொழுது மனிதனுடையதா, தேவனுடையதா? யாருடைய அங்கீகாரத்தைத் தேடுகிறேன்? மனிதனைப் பிரியப்படுத்தப் பார்க்கிறேனா? நான் இன்னும் மனிதனைப் பிரியப்படுத்துகிறவனாக இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் இல்லையே.
11 Kardeşlerim, yaydığım Müjde'nin insandan kaynaklanmadığını bilmenizi istiyorum.
௧௧மேலும், சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி மனிதர்களுடைய யோசனையினால் உண்டானது இல்லையென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
12 Çünkü ben onu insandan almadım, kimseden de öğrenmedim. Bunu bana İsa Mesih vahiy yoluyla açıkladı.
௧௨நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, மனிதனிடமிருந்து கற்றதும் இல்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
13 Yahudi dinine bağlı olduğum zaman nasıl bir yaşam sürdüğümü duydunuz. Tanrı'nın kilisesine alabildiğine zulmediyor, onu kırıp geçiriyordum.
௧௩நான் யூதமதத்தில் இருந்தபோது என்னுடைய நடத்தையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் அதிகமாக துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி;
14 Yahudi dininde yaşıtım olan soydaşlarımın birçoğundan daha ilerideydim, atalarımın geleneklerini savunmakta çok daha gayretliydim.
௧௪என் மக்களில் என் வயதுள்ள அநேகரைவிட யூதமதத்தில் தேறினவனாக, என் முற்பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக அதிக பக்திவைராக்கியம் உள்ளவனாக இருந்தேன்.
15 Ama beni daha annemin rahmindeyken seçip lütfuyla çağıran Tanrı, uluslara müjdelemem için Oğlu'nu bana göstermeye razı olunca hemen insanlara danışmadım;
௧௫அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,
௧௬தம்முடைய குமாரனை நான் யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியாக அறிவிப்பதற்கு, அவரை எனக்குள் வெளிப்படுத்த விருப்பமாக இருந்தபோது, உடனே நான் சரீரத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும்;
17 Yeruşalim'e, benden önce elçi olanların yanına da gitmedim; Arabistan'a gittim, sonra yine Şam'a döndüm.
௧௭எனக்கு முன்பே எருசலேமில் அப்போஸ்தலர்களாக இருந்தவர்களிடம் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மீண்டும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.
18 Bundan üç yıl sonra Kefas'la tanışmak üzere Yeruşalim'e gittim, on beş gün onun yanında kaldım.
௧௮மூன்று வருடங்களுக்குப்பின்பு, பேதுருவைப் பார்ப்பதற்காக நான் எருசலேமுக்குப்போய், அவனோடுகூட பதினைந்து நாட்கள் தங்கியிருந்தேன்.
19 Öbür elçilerden hiçbirini görmedim, yalnız Rab İsa'nın kardeşi Yakup'u gördüm.
௧௯கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத்தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் பார்க்கவில்லை.
20 Bakın, size yazdıklarımın yalan olmadığını Tanrı'nın önünde belirtiyorum.
௨0நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய் இல்லை என்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாகச் சொல்லுகிறேன்.
21 Sonra Suriye ve Kilikya bölgelerine gittim.
௨௧பின்பு, சீரியா சிலிசியா நாடுகளுக்குச் சென்றேன்.
22 Yahudiye'nin Mesih'e ait kiliseleri beni şahsen tanımıyorlardı.
௨௨மேலும் யூதேயா நாட்டிலே கிறிஸ்துவிற்குள்ளான சபைமக்களுக்கு அறிமுகம் இல்லாதவனாக இருந்தேன்.
23 Yalnız, “Bir zamanlar bize zulmeden adam, önceleri yıkmaya çalıştığı imanı şimdi yayıyor” dendiğini duymuşlardı.
௨௩முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கப்பார்த்த விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமட்டும் அவர்கள் கேள்விப்பட்டு,
24 Böylece benden ötürü Tanrı'yı yüceltiyorlardı.
௨௪எனக்காக தேவனை மகிமைப்படுத்தினார்கள்.