< 2 Tuʻi 15 >
1 ʻI he taʻu ʻe uofulu ma fitu ʻo Selopoami ko e tuʻi ʻo ʻIsileli, naʻe kamata pule ki Siuta ʻa ʻAsalia ko e foha ʻo ʻAmasia.
இஸ்ரயேலின் அரசன் யெரொபெயாம் அரசனாகப் பதவி ஏற்ற இருபத்தேழாம் வருடம் அமத்சியாவின் மகன் அசரியா யூதாவில் அரசாளத் தொடங்கினான்.
2 Naʻe hongofulu ma ono taʻu ʻene motuʻa ʻi heʻene hoko ki he pule, pea naʻe pule ia ʻi he taʻu ʻe nimangofulu ma ua ʻi Selūsalema. Pea ko e hingoa ʻo ʻene faʻē ko Sekolia ʻo Selūsalema.
அவன் அவனுடைய பதினாறு வயதில் அரசனானான். அவன் எருசலேமில் ஐம்பத்திரண்டு வருடங்கள் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் எக்கோலியாள்; அவள் எருசலேமைச் சேர்ந்தவள்.
3 Pea naʻe fai lelei ia ʻi he ʻao ʻo Sihova; ʻo fakatatau ki he meʻa kotoa pē naʻe fai ʻe heʻene tamai ko ʻAmasia;
அவன் தனது தகப்பன் அமத்சியா செய்ததுபோலவே யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்தான்.
4 Ka ko e ngaahi potu māʻolunga naʻe ʻikai liʻaki: naʻe feilaulau mo tutu ʻae meʻa namu kakala ʻe he kakai ʻi he ngaahi potu māʻolunga.
ஆனால் உயர்ந்த மேடைகளோ அகற்றப்படவில்லை. மக்கள் தொடர்ந்து அந்த மேடைகளில் பலிகளைச் செலுத்தியும், தூபங்காட்டியும் வந்தனர்.
5 Pea naʻe taaʻi ʻe Sihova ʻae tuʻi, pea naʻa ne kilia ai ʻo aʻu ki he ʻaho ʻo ʻene mate; pea naʻa ne nofo ʻi he fale mavahe. Pea naʻe pule ʻa Sotami ko e foha ʻoe tuʻi ki he fale pea naʻe fakamaau ʻe ia ʻae kakai ʻoe fonua.
யெகோவா அரசனை அவன் இறக்கும்வரையும் குஷ்டவியாதியினால் வாதித்தார். குஷ்டவியாதிக்காரனான இவன் ஒரு புறம்பான வீட்டில் இருந்தான். அரசனின் மகன் யோதாம் அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்து நாட்டின் மக்களை ஆட்சிசெய்தான்.
6 Pea ko hono toe ʻoe ngaahi ngāue ʻa ʻAsalia mo ia kotoa pē naʻa ne fai, ʻikai ʻoku tohi ia ʻi he tohi fakamatala ki he ngaahi tuʻi ʻo Siuta?
அசரியாவின் மற்ற ஆட்சிக்கால நிகழ்வுகளும், அவனுடைய எல்லாச் செயல்களும் யூதா அரசரின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
7 Ko ia, naʻe mohe ʻa ʻAsalia mo ʻene ngaahi tamai; pea naʻa nau tanu ia mo ʻene ngaahi tamai ʻi he Kolo ʻo Tevita: pea naʻe fetongi ia ʻi he pule ʻe Sotami ko hono foha.
இதன்பின் அசரியா தன் முற்பிதாக்களைப்போல இறந்தபின்பு, தாவீதின் நகரத்தில் அவர்களுடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் யோதாம் அவனுக்குப்பின் அரசனானான்.
8 ʻI hono tolungofulu ma valu ʻoe taʻu ʻo ʻAsalia ko e tuʻi ʻo Siuta, naʻe pule ʻa Sakalia ko e foha ʻo Selopoami ki ʻIsileli ʻi Samēlia ʻi he māhina ʻe ono.
யூதாவின் அரசன் அசரியா அரசாட்சி செய்த முப்பத்தி எட்டாம் வருடத்தில் யெரொபெயாமின் மகன் சகரியா சமாரியாவில் இஸ்ரயேலுக்கு அரசனானான். அவன் ஆறு மாதங்கள் அங்கே அரசாண்டான்.
9 Pea naʻe fai ʻe ia ʻaia naʻe kovi ʻi he ʻao ʻo Sihova, ʻo hangē ko ia naʻe fai ʻe heʻene ngaahi tamai: naʻe ʻikai mahuʻi ia mei he ngaahi angahala ʻa Selopoami ko e foha ʻo Nipati, ʻaia naʻa ne fakaangahalaʻi ʻa ʻIsileli.
இவன் தன் தந்தையர் செய்ததுபோல யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்துக்குள் வழிநடத்திய நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு இவன் விலகவேயில்லை.
10 Pea naʻe lapasi ia ʻe Salumi ko e foha ʻo Sepesi, ʻo ne taaʻi ia ʻi he ʻao ʻoe kakai, pea ne tāmateʻi ia, pea naʻa ne fetongi ia ʻi he pule.
யாபேசின் மகன் சல்லூம், சகரியாவுக்கு எதிராகச் சதி செய்தான். மக்களுக்கு முன்பாக அவனைத் தாக்கிக் கொலைசெய்து, அவனுடைய இடத்தில் அரசனானான்.
11 Pea ko hono toe ʻoe ngaahi ngāue ʻa Sakalia, vakai, kuo tohi ia ʻi he tohi fakamatala ki he ngaahi tuʻi ʻo ʻIsileli.
சகரியாவின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகள் யாவும் இஸ்ரயேல் அரசரின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
12 Ko e folofola eni ʻa Sihova ʻaia naʻe folofolaʻaki kia Sehu ʻo pehē, “ʻE nofo ho ngaahi foha ki he nofoʻa fakatuʻi ʻo ʻIsileli ʻo aʻu ki hono fā ʻoe toʻutangata. Pea naʻe hoko ia ʻo pehē pe.”
“உன் சந்ததிகள் நான்கு தலைமுறைகளுக்கு இஸ்ரயேலின் அரியணையில் ஆளுவார்கள்” என்று யெகூவுக்கு யெகோவா கூறிய வார்த்தை இவ்வாறு நிறைவேறிற்று.
13 ʻI hono tolungofulu ma hiva ʻoe taʻu ʻo ʻUsaia ko e tuʻi ʻo Siuta, naʻe kamata pule ʻa Salumi ko e foha ʻo Sepesi; pea naʻe pule ia ʻi he māhina kātoa ʻe taha ʻi Samēlia.
யூதாவின் அரசன் உசியா ஆட்சி செய்த முப்பத்தொன்பதாம் வருடத்தில் யாபேசின் மகன் சல்லூம் சமாரியாவில் அரசனாகி ஒரு மாதம் அரசாண்டான்.
14 He naʻe ʻalu hake ʻa Minehemi ko e foha ʻo Kati, mei Tilisa, pea haʻu ia ki Samēlia, ʻo ne taaʻi ʻa Salumi ko e foha ʻo Sepesi ʻi Samēlia, ʻo ne tāmateʻi ia, pea naʻa ne fetongi ia ʻi he pule.
இதன்பின் காதியின் மகன் மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்குப் போனான். அங்கே யாபேசின் மகன் சல்லூமை தாக்கிக் கொன்றுவிட்டு, அவனுடைய இடத்தில் அரசனானான்.
15 Ka ko hono toe ʻoe ngaahi ngāue ʻa Salumi, mo ʻene fai ʻae lapa, vakai, kuo tohi ia ʻi he tohi fakamatala ki he ngaahi tuʻi ʻo ʻIsileli.
சல்லூமின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் திட்டமிட்ட சதியும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
16 Pea naʻe toki taaʻi ʻe Minehemi ʻa Tifisa, mo ia kotoa pē naʻe ʻi ai, mo hono ngaahi potu ngataʻanga, ʻo aʻu ki Tilisa: koe meʻa ʻi he ʻikai te nau fakaava ia kiate ia, ko ia naʻa ne taaʻi ai ia; pea ko e kau fefine feitama kotoa pē naʻe ʻi ai naʻa ne hae hake.
அதே நேரத்தில் மெனாகேம் திர்சாவிலிருந்து புறப்பட்டு, திப்சா பட்டணத்தார் தங்கள் கதவுகளை இவனுக்குத் திறக்க மறுத்தபடியால், திப்சா பட்டணத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலுள்ள எல்லோரையும் தாக்கினான். அவன் திப்சாவைக் கொள்ளையிட்டு, அங்குள்ள கர்ப்பிணிப் பெண்களைக் கீறிக்கொன்றான்.
17 ʻI hono tolungofulu ma hiva ʻoe taʻu ʻo ʻAsalia ko e tuʻi ʻo Siuta naʻe kamata pule ki ʻIsileli ʻa Minehemi ko e foha ʻo Kati, pea naʻe pule ia ʻi he taʻu ʻe hongofulu ʻi Samēlia.
யூதாவின் அரசன் அசரியா ஆட்சி செய்த முப்பத்தொன்பதாம் வருடம், காதியின் மகனான மெனாகேம் இஸ்ரயேலின் அரசனாக வந்தான். இவன் சமாரியாவில் பத்து வருடங்கள் ஆட்சிசெய்தான்.
18 Pea naʻe fai ʻe ia ʻae kovi ʻi he ʻao ʻo Sihova; ʻi hono ngaahi ʻaho kotoa pē naʻe ʻikai te ne liʻaki ʻae ngaahi angahala ʻa Selopoami ko e foha ʻo Nipati, ʻaia naʻa ne fakaangahalaʻi ʻa ʻIsileli.
இவன் யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு இவன் தனது ஆட்சிக்காலம் முழுவதிலும் விலகவில்லை.
19 Pea naʻe haʻu ʻa Puli ko e tuʻi ʻo ʻAsilia ke tauʻi ʻae fonua: pea naʻe ʻatu ʻe Minehemi kia Puli ʻae taleniti siliva ʻe taha afe, koeʻuhi ke na kau taha ke fakatuʻumaʻu ʻae puleʻanga ʻi hono nima.
இவனுடைய காலத்தில் அசீரிய நாட்டின் அரசனான பூல் இஸ்ரயேல் நாட்டுக்குப் படையெடுத்து வந்தான். மெனாகேம் அவனுடைய ஆதரவை பெறுவதற்காகவும், ஆட்சியில் தனது அதிகாரத்தைப் பெலப்படுத்துவதற்காகவும் அவனுக்கு ஆயிரம் தாலந்து நிறையுள்ள வெள்ளியைக் கொடுத்தான்.
20 Pea naʻe pule ʻe Minehemi ke ʻomi ʻae ngaahi paʻanga mei ʻIsileli, ʻio, mei he kau tangata ongoongo mo koloaʻia, ʻi he tangata taki taha kotoa pē ko e sikeli siliva ʻe nimangofulu, ke foaki ki he tuʻi ʻo ʻAsilia. Ko ia, naʻe toe ʻalu ai ʻae tuʻi ʻo ʻAsilia, pea naʻe ʻikai nofomaʻu ia ʻi he fonua.
மெனாகேம் இப்பணத்தை இஸ்ரயேலிலிருந்தே வசூலித்தான். அசீரியா அரசனுக்குக் கொடுக்கும்படி ஒவ்வொரு செல்வந்தனும் ஐம்பது சேக்கல் வெள்ளியைக் கொடுக்க வேண்டியிருந்தது. எனவே அசீரிய அரசன் அங்கு தங்காமல் தன் படைகளுடன் திரும்பிவிட்டான்.
21 Pea ko hono toe ʻoe ngaahi ngāue ʻa Minehemi, mo ia kotoa pē naʻa ne fai, ʻikai ʻoku tohi ia ʻi he tohi fakamatala ki he ngaahi tuʻi ʻo ʻIsileli?
மெனாகேமின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய மற்ற செயல்களும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
22 Pea naʻe mohe ʻa Minehemi mo ʻene ngaahi tamai; pea naʻe fetongi ia ʻi he pule ʻe Pikaia ko hono foha.
இதன்பின் மெனாகேம் தன் முற்பிதாக்களைப்போல இறந்தான். அவனுடைய மகன் பெக்காகியா அவனுக்குப்பின் அரசனானான்.
23 ʻI hono nimangofulu taʻu ʻo ʻAsalia ko e tuʻi ʻo Siuta naʻe kamata pule ki ʻIsileli ʻi Samēlia ʻa Pikaia ko e foha ʻo Minehemi pea naʻe pule ia ʻi he taʻu ʻe ua.
யூதாவின் அரசன் அசரியா அரசாண்ட ஐம்பதாம் வருடத்தில் மெனாகேமின் மகன் பெக்காகியா சமாரியாவில் இஸ்ரயேலுக்கு அரசனானான். இவன் இரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான்.
24 Pea naʻe fai ʻe ia ʻae kovi ʻi he ʻao ʻo Sihova: naʻe ʻikai te ne liʻaki ʻae ngaahi angahala ʻa Selopoami ko e foha ʻo Nipati, ʻaia naʻa ne fakaangahalaʻi ʻa ʻIsileli.
இவனும் யெகோவாவின் பார்வையில் தீமையையே செய்தான். இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு இவன் விலகவில்லை.
25 Ka naʻe te u lapa kiate ia ʻa Peka ko e foha ʻo Limalia ko ʻene ʻeikitau ʻe taha ʻaʻana, ʻo ne taaʻi ia ʻi Samēlia, ʻi he potu tapu ʻoe fale ʻoe tuʻi, fakataha mo ʻAakopi mo ʻEliia, pea mo e kau tangata Kiliati ʻe toko nimangofulu: pea naʻa ne tāmateʻi ia, pea ne fetongi ia ʻi he pule.
அவனுடைய பிரதான அதிகாரிகளில் ஒருவனான ரெமலியாவின் மகன் பெக்கா இவனுக்கு விரோதமாகச் சதி செய்தான். இவன் கீலேயாத்தைச் சேர்ந்த ஐம்பது பேரைத் தன்னுடன் கூட்டிக்கொண்டுபோய், அர்கோபு, அரியே என்பவர்களோடு பெக்காகியாவை சமாரியாவிலிருந்த அரசனுடைய அரண்மனையில் கொலைசெய்தான். இவ்விதமாக பெக்காகியாவைக் கொன்று அவனுடைய இடத்தில் பெக்கா அரசனானான்.
26 Pea ko hono toe ʻoe ngaahi ngāue ʻa Pikaia, mo ia kotoa pē naʻa ne fai, vakai, kuo tohi ia ʻi he tohi fakamatala ki he ngaahi tuʻi ʻo ʻIsileli.
பெக்காகியாவின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய மற்ற செயல்களும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
27 ʻI hono nimangofulu ma ua ʻoe taʻu ʻo ʻAsalia ko e tuʻi ʻo Siuta, naʻe kamata pule ʻa Peka ko e foha ʻo Limalia ki ʻIsileli ʻi Samēlia, pea naʻe pule ia ʻi he taʻu ʻe uofulu,
யூதாவின் அரசனான அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருடத்தில் ரெமலியாவின் மகன் பெக்கா சமாரியாவில் இஸ்ரயேலுக்கு அரசனானான். இவன் இருபது வருடங்கள் அங்கே அரசாண்டான்.
28 Pea naʻe fai ʻe ia ʻae kovi ʻi he ʻao ʻo Sihova: naʻe ʻikai liʻaki ʻe ia ʻae ngaahi angahala ʻa Selopoami ko e foha ʻo Nipati, ʻaia naʻa ne fakaangahalaʻi ʻa ʻIsileli.
இவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை.
29 Naʻe haʻu ʻa Tekilati-Pilesa ko e tuʻi ʻo ʻAsilia, ʻi he ngaahi ʻaho ʻo Peka ko e tuʻi ʻo ʻIsileli, ʻo ne kapasia ʻa Isoni mo ʻEpeli-Petemeaka, mo Sanoa, mo Ketesi, mo Hasoa, mo Kiliati, mo Kāleli, ʻae fonua kotoa pē ʻo Nafitali, pea naʻe fetuku pōpula ʻakinautolu ki ʻAsilia.
இஸ்ரயேலின் அரசன் பெக்காவின் நாட்களில், அசீரிய அரசன் திக்லாத்பிலேசர் என்பவன் படையெடுத்து வந்து தாக்கினான். அவன் ஈயோன், ஆபேல் பெத்மாக்கா, யனோவாக், கேதேசு, ஆத்சோர் ஆகிய பட்டணங்களையும், கீலேயாத், கலிலேயா ஆகிய நாடுகளையும், நப்தலி நாடு முழுவதையும் கைப்பற்றினான். பின்பு அவன் அங்கிருந்த மக்கள் யாவரையும் அசீரியாவுக்கு நாடுகடத்தினான்.
30 Pea naʻe fai ʻae lapa ʻe Hosea ko e foha ʻo Ela kia Peka ko e foha ʻo Limalia, ʻo ne taaʻi ia, pea ne tāmateʻi ia, pea ne fetongi ia ʻi he pule, ʻi hono uofulu ʻoe taʻu ʻo Sotami ko e foha ʻo ʻUsaia.
இதன்பின் ஏலாவின் மகன் ஓசெயா ரெமலியாவின் மகன் பெக்காவுக்கு விரோதமாகச் சதி செய்தான். அவன் அவனைத் தாக்கிக் கொன்றான். பின்பு உசியாவின் மகன் யோதாம் யூதாவில் அரசாண்ட இருபதாம் வருடத்தில் ஓசெயா இஸ்ரயேலின் அரசனாக வந்தான்.
31 Pea ko hono toe ʻoe ngaahi ngāue ʻa Peka mo ia kotoa pē naʻa ne fai, vakai, kuo tohi ia ʻi he tohi fakamatala ki he ngaahi tuʻi ʻo ʻIsileli.
பெக்காவின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் சாதித்த செயல்களும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
32 ʻI hono ua ʻoe taʻu ʻo Peka ko e foha ʻo Limalia ko e tuʻi ʻo ʻIsileli, naʻe kamata pule ki Siuta ʻa Sotami ko e foha ʻo ʻUsaia.
ரெமலியாவின் மகனான இஸ்ரயேலின் அரசன் பெக்காவின் ஆட்சியின் இரண்டாம் வருடத்தில், யூதாவில், உசியாவின் மகன் யோதாம் ஆட்சி செய்யத் தொடங்கினான்.
33 Naʻe uofulu ma nima ʻae taʻu ʻo ʻene motuʻa ʻi heʻene kamata pule, pea naʻe pule ia ʻi he taʻu ʻe hongofulu ma ono ʻi Selūsalema. Pea ko e hingoa ʻo ʻene faʻē ko Silusa, ko e ʻofefine ʻo Satoki.
அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான். இவனுடைய தாய் சாதோக்கின் மகளான எருசாள் என்பவள்.
34 Pea naʻe fai ʻe ia ʻae lelei ʻi he ʻao ʻo Sihova: naʻe fai ia ʻo hangē ko ia kotoa pē naʻe fai ʻe heʻene tamai ko ʻUsaia.
அவன் தன் தகப்பன் உசியா செய்ததுபோலவே யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான்.
35 Ka naʻe ʻikai siʻaki ʻae ngaahi potu māʻolunga: naʻe kei feilaulau mo tutu meʻa namu kakala ʻe he kakai ʻi he ngaahi potu māʻolunga. Naʻe langa ʻe ia ʻae matapā māʻolunga ʻoe fale ʻo Sihova.
ஆனால் உயர்ந்த மேடைகளோ அகற்றப்படவில்லை. மக்கள் தொடர்ந்து அந்த மேடைகளில் பலிகளைச் செலுத்தியும், தூபங்காட்டியும் வந்தனர். யோதாம் யெகோவாவின் ஆலயத்தின் மேல்வாசலைத் திரும்பக் கட்டினான்.
36 Pea ko hono toe ʻoe ngaahi ngāue ʻa Sotami, mo ia kotoa pē naʻa ne fai, ʻikai kuo tohi ia ʻi he tohi fakamatala ki he ngaahi tuʻi ʻo Siuta?
யோதாமின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகள், அவன் செய்தவைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
37 ʻI he ngaahi ʻaho ko ia naʻe kamata ueʻi ʻe Sihova ʻa Lisini ko e tuʻi ʻo Silia, mo Peka ko e foha ʻo Limalia ke na tauʻi ʻa Siuta.
அந்நாட்களில் யெகோவா சீரிய அரசன் ரேத்சீனையும், ரெமலியாவின் மகன் பெக்கா வையும் யூதாவுக்கு எதிராக அனுப்பத் தொடங்கினார்.
38 Pea naʻe mohe ʻa Sotami mo ʻene ngaahi tamai, pea naʻe tanu ia mo ʻene ngaahi tamai ʻi he Kolo ʻo Tevita, ko ʻene tamai: pea naʻe fetongi ia ʻi he pule ʻe hono foha ko ʻAhasi.
யோதாம் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் தகப்பன் தாவீதின் நகரத்தில் அவர்களோடு அடக்கம் செய்யப்பட்டான். இவனுடைய மகன் ஆகாஸ் இவனுக்குபின் அவனுடைய இடத்தில் அரசனானான்.