< சகரியா 6 >
1 ௧ நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு மலைகளின் நடுவாகப் புறப்பட்டு வருகிற நான்கு இரதங்களைக் கண்டேன்; அந்த மலைகள் வெண்கல மலைகளாயிருந்தன.
Потом опет подигох очи своје, и видех, а то четвора кола излажаху између две горе, а те горе беху од бронзе.
2 ௨ முதலாம் இரதத்தில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக்குதிரைகளும்,
У првим колима беху коњи риђи, а у другим колима коњи врани,
3 ௩ மூன்றாம் இரதத்தில் வெள்ளைக்குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக்குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன.
А у трећим колима коњи бели, а у четвртим колима коњи шарени, јаки.
4 ௪ நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
И проговоривши рекох анђелу који говораше са мном: Шта је то, господару мој?
5 ௫ அந்தத் தூதன் எனக்கு மறுமொழியாக: இவைகள் சர்வலோகத்திற்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நான்கு ஆவிகள் என்றார்.
А анђео одговори и рече ми: То су четири ветра небеска, који излазе испред Господа све земље, где стајаше.
6 ௬ ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்திற்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னே புறப்பட்டுப்போனது; புள்ளிபுள்ளியான குதிரைகள் தென்தேசத்திற்குப் புறப்பட்டுப்போனது.
Коњи врани што су у једним, они иду у северну земљу; а бели иду за њима, а шарени иду у земљу јужну.
7 ௭ சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரிய கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன.
И јаки изашавши хтеше да иду и пролазе земљу; и рече: Идите пролазите земљу. И стадоше пролазити земљу.
8 ௮ பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்திற்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்தப்படுத்தியது என்று என்னுடன் சொன்னார்.
Тада ме зовну, и рече ми: Види, који отидоше у земљу северну, умирише дух мој у земљи северној.
9 ௯ பின்பு யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
Потом ми дође реч Господња говорећи:
10 ௧0 சிறையிருப்பின் மனிதர்களாகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் மகனாகிய யோசியாவின் வீட்டிற்குள் நுழைந்து,
Узми од робља, од Хелдаја и од Товије и од Једаје, који дођоше из вавилонске, па дођи истог дана и уђи у дом Јосије, сина Софонијиног.
11 ௧௧ அங்கே அவர்களுடைய கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து, யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய தலையிலே வைத்து,
Узми сребра и злата, и начини венце, и метни на главу Исусу, сину Јоседековом, поглавару свештеничком.
12 ௧௨ அவனுடன் சொல்லவேண்டியது: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஒரு மனிதன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவார்.
И реци му говорећи: Овако вели Господ над војскама: Ево човека, коме је име Клица, која ће клијати с места свог и саградиће цркву Господњу.
13 ௧௩ அவரே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராகவும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.
Јер ће Он саградити цркву Господњу, и носиће славу, и седеће и владати на свом престолу, и биће свештеник на престолу свом, и савет мирни биће међу обема.
14 ௧௪ இந்தக் கிரீடங்களோவென்றால், யெகோவாவுடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் மகனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக.
И венци нека буду Елему и Товији и Једаји и Хену, сину Софонијином за спомен у цркви Господњој.
15 ௧௫ தூரத்திலுள்ளவர்கள் வந்து யெகோவாவுடைய ஆலயத்தைக் கூட இருந்து கட்டுவார்கள்; அப்பொழுது சேனைகளின் யெகோவா என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிந்துகொள்வீர்கள்; நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கேட்டு நடந்தீர்களென்றால் இது நிறைவேறும் என்று சொல் என்றார்.
И који су далеко доћи, ће и градиће цркву Господњу, и познаћете да ме је Господ над војскама послао к вама. И то ће бити ако узаслушате глас Господа Бога свог.