< சகரியா 5 >
1 ௧ நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து பார்க்கும்போது, இதோ, பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் கண்டேன்.
Тогава пак като подигнах очите си видях, и ето летящ свитък.
2 ௨ தூதன் என்னிடம், நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்து முழமுமாயிருக்கிறது என்றேன்.
И рече ми: Що виждаш? И отговорих: Виждам летящ свитък, дълъг двадесет лакти, и широк десет лакти.
3 ௩ அப்பொழுது அவர்: இது பூமியின் மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அந்த புத்தகச்சுருளின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அந்த புத்தகச்சுருளின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.
И рече ми: Това е проклетията, която се простира по лицето на цялата страна; защото всеки, който краде, ще се изтреби, както се пише в него от едната страна, и веки, който се кълне лъжливо ще се изтреби, както се пише в него от другата страна.
4 ௪ அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாக சத்தியம் செய்கிறவன் வீட்டிலும் வந்து, அவனவன் வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கற்களோடும்கூட நிர்மூலமாக்குவதற்காக அதைப் புறப்பட்டுப்போகச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார்.
Аз ще я направя да излезе, и тя ще влезе в къщата на крадеца и в къщата на кълнещия се лъжливо в Моето име; и като пребъдва всред къщата му ще я разори, както дърветата й, така и камъните й.
5 ௫ பின்பு என்னுடன் பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து, புறப்பட்டு வருகிறதை என்னவென்று பார் என்றார்.
Тогава ангелът, който говореше с мене, излезе та ми рече: Подигни очите си та виж що е това, което излиза.
6 ௬ அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதான ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர்: பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.
И рекох: Що е това? А той каза: Това, което излиза, е ефа. Каза още: Това ги представлява, каквито са, по цялата земя;
7 ௭ இதோ, ஒரு தாலந்து எடையுள்ள ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.
(и, ето, един талант олово си вдигаше); и ето една жена седеше всред ефата.
8 ௮ அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.
Рече още: Това е нечестието. И хвърли я всред ефата; после хвърли оловената теглилка в устата на ефата.
9 ௯ அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டு வருகிற இரண்டு பெண்களைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் இறக்கைகளைப்போன்ற இறக்கைகள் இருந்தது; அவர்கள் இறக்கைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்திற்கும் நடுவாகத் தூக்கிக்கொண்டு போனார்கள்.
Тогава, като подигнах очите си видях, и, ето, излизаха две жени, които летяха като вятър; защото имаха крила като крила на щъркел; и дигаха ефата между земята и небето.
10 ௧0 நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.
Тогава рекох на ангела, който говореше с мене: Къде занасят тая ефа?
11 ௧௧ அதற்கு அவர்: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.
И рече ми: За да построят за нея къща в земята Сенаар; и когато се приготви, тя ще бъде поставена там на своето място.