< சகரியா 4 >

1 என்னுடன் பேசின தூதன் திரும்பி வந்து தூங்குகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி:
И обратися Ангел глаголяй во мне и возведе мя, якоже егда востанет человек от сна своего,
2 நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.
и рече ко мне: что ты видиши? И рех: видех, и се, свещник злат весь, и светилце верху его, и седмь светилник верху его, и седмь чашиц светилником верхним его,
3 அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.
и две маслины верху его, едина одесную светилца его и едина ошуюю.
4 நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
И вопросих и рех ко Ангелу глаголющему во мне глаголя: что суть сия, господи?
5 என்னுடன் பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
И отвеща Ангел глаголяй во мне и рече ко мне глаголя: не разумееши ли, что суть сия? И рех: ни, господи.
6 அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற யெகோவாவுடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
И отвеща и рече ко мне глаголя: сие слово Господне к Зоровавелю глаголя: не в силе велицей, ни в крепости, но в Дусе Моем, глаголет Господь Вседержитель.
7 பெரிய மலையே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.
Что ты еси, горо великая, пред лицем Зоровавеля, еже исправити? И изнесу камень наследия, равенство благодати, благодать его.
8 பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
И бысть слово Господне ко мне глаголя:
9 செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் யெகோவா என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்.
руце Зоровавелевы основаша храм сей и руце его совершат его: и уразумееши, яко Господь Вседержитель посла Мя к вам:
10 ௧0 அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைசெய்யலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய யெகோவாவுடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலை சந்தோஷமாகப் பார்க்கிறது என்றார்.
зане кто укорил тя есть во дни малы? И возрадуются, и увидят камень, иже от чистаго олова, в руку Зоровавеля: седмь сия очеса Господня суть, призирающая на всю землю.
11 ௧௧ பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்கிற்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.
И отвещах и рех к нему: что суть две маслины сия, яже одесную свещника и ошуюю?
12 ௧௨ மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாகத் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கச்செய்கிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.
И вопросих вторицею и рех к нему: что суть две ветви масличны, яже в руку двух усекалниц златых возливающих и возношающих чашицы златыя?
13 ௧௩ அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
И рече ко мне глаголя: не веси ли, что суть сия? И рех: ни, господи.
14 ௧௪ அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்திற்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.
И рече: сии два сынове тучности, яже предстоят Господеви всея земли.

< சகரியா 4 >