< சகரியா 3 >
1 ௧ அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் யெகோவாவுடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதம் செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்.
Then [Yahweh] showed me Joshua, the Supreme Priest, [who was] standing in front of the angel that Yahweh had sent. And Satan was standing at Joshua’s right side, [ready] to accuse him.
2 ௨ அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியிலிருந்து தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.
But Yahweh said to Satan, “Satan, I am rebuking you! I [am the one] who has chosen Jerusalem [to be my special city, and I] am rebuking you! This [man, Joshua], [has been brought back from Babylonia]; he is surely [like] [MET, RHQ] a burning stick that has been snatched from a fire.”
3 ௩ யோசுவாவோ என்றால் அழுக்கு உடை அணிந்தவனாகத் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.
Joshua was wearing filthy clothes while he was standing in front of the angel.
4 ௪ அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு உடைகளைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிடத்திலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த உடையை உடுத்தினேன் என்றார்.
The angel said to those [other angels] who were standing in front of him, “Take off his filthy clothes!” [After they did that, ] the angel said to Joshua, “Look! I have taken away [the guilt of] your sins, and I will put beautiful clothes on you.”
5 ௫ அவன் தலையின்மேல் சுத்தமான தலைப்பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான தலைப்பாகையை அவன் தலையின்மேல் வைத்து, அவனுக்கு ஆடைகளை உடுத்தினார்கள்; யெகோவாவுடைய தூதன் அங்கே நின்றார்.
Then I said to them, “Put a clean turban on his head!” So they put a clean turban on his head and put [new] on him, while the angel sent by Yahweh was standing there.
6 ௬ யெகோவாவுடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக:
Then the angel said [this] to Joshua:
7 ௭ சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் ஆலய வளாகங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.
“The Commander of the armies of angels says that if you do what I want you to do [IDM], and obey my instructions, you will (be in charge of/have authority over) [what is done in] my temple and its courtyard. And I will allow you to speak at any time to the angels who are standing near to me.
8 ௮ இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழர்களும் கேட்கட்டும்; இவர்கள் அடையாளமாயிருக்கிற மனிதர்கள்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரச்செய்வேன்.
Joshua, [you are] the Supreme Priest, and your (associates/fellow priests) are sitting in front of you. They symbolize/represent things that will happen in the future. [Some day] I am going to bring someone who will work for me, someone who will be called the Branch.
9 ௯ இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி, இந்த தேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Look at the stone that I have put in front of Joshua. There are seven sides on the stone. I will engrave a message on that stone, and in one day I will remove the guilt of [all the people of] this country.
10 ௧0 அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சைச்செடியின்கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார்.
At that time, each of you will invite his friends [to come and sit] under his grapevine and under his fig tree. [That is what] the Commander of the armies of angels declares.”