< சகரியா 2 >

1 நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு மனிதனைக் கண்டேன்.
茲に我目を擧て觀しに一箇の人量繩を手に執居ければ
2 நீர் எவ்விடத்திற்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்: எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் தெரிந்துகொள்ளும்படி அதை அளப்பதற்குப் போகிறேன் என்றார்.
汝は何處へ往くやと問しにヱルサレムを量りてその廣と長の幾何なるを觀んとすと我に答ふ
3 இதோ, என்னுடன் பேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டு வந்தான்.
時に我に語ふ天の使出行たりしが又一箇の天の使出きたりて之に會ひ
4 இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால்: எருசலேம் தன் நடுவிலே கூடும் மனிதர்களின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதில் இல்லாத பட்டணங்கள்போல் குடியிருப்பாகும்.
之に言けるは走ゆきてこの少き人に告て言へヱルサレムはその中に人と畜と饒なるによりて野原のごとくに廣く亘るべし
5 நான் அதற்குச் சுற்றிலும் நெருப்பு மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ヱホバ言たまふ我その四周にて火の垣となりその中にて榮光とならん
6 ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறடித்தேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ヱホバいひたまふ來れ來れ北の地より逃きたれ我なんぢらを四方の天風のごとくに行わたらしむればなりヱホバこれを言ふ
7 பாபிலோன் மகளிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்.
來れバビロンの女子とともに居るシオンよ遁れ來れ
8 அதன்பிறகு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட தேசங்களிடத்திற்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் என்னுடைய கண்மணியைத் தொடுகிறான்.
萬軍のヱホバかく言たまふヱホバ汝等を擄へゆきし國々へ榮光のために我儕を遣したまふ汝らを打つ者は彼の目の珠を打なればなり
9 இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் யெகோவா என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள்.
即ち我手をかれらの上に搖ん彼らは己に事へし者の俘虜となるべし汝らは萬軍のヱホバの我を遣したまへるなるを知ん
10 ௧0 மகளாகிய சீயோனே கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ヱホバ言たまふシオンの女子よ喜び樂め我きたりて汝の中に住ばなり
11 ௧௧ அந்நாளிலே அநேக தேசங்கள் யெகோவாவைச் சேர்ந்து என் மக்களாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் யெகோவா என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய்.
その日には許多の民ヱホバに附て我民とならん我なんぢの中に住べし汝は萬軍のヱホバの我を遣したまへるなるを知ん
12 ௧௨ யெகோவா பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கை சொந்தமாக்கிக்கொள்ள திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார்.
ヱホバ聖地の中にてユダを取て己の分となし再びヱルサレムを簡びたまふべし
13 ௧௩ மாம்சமான அனைத்துமக்களே, யெகோவாவுக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.
ヱホバ起てその聖住所よりいでたまへば凡そ血肉ある者ヱホバの前に粛然たれ

< சகரியா 2 >