< உன்னதப்பாட்டு 7 >

1 இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள் மிகவும் அழகாக இருக்கிறது; உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது.
что украсишася стопы твоя во обутиих твоих, дщи Надавля? Чины бедру твоею подобни усеряземь, делу рук художника:
2 உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது; உன் வயிறு லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக் குவியல்போல் இருக்கிறது.
пуп твой чаша источена, не лишаемая мста: чрево твое яко стог пшеницы, огражден в кринах:
3 உன் இரண்டு மார்பகங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாக இருக்கிறது.
два сосца твоя, яко два млада близнецы серны:
4 உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலின் அருகிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.
выя твоя яко столп слоновый: очи твои яко езера во Есевоне, во вратах дщерей многих: нос твой яко столп Ливанский, сматряяй лице Дамаска:
5 உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது; உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது; ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார்.
глава твоя на тебе яко Кармил (гора), и заплетение главы твоея яко багряница, царь увязан в преристаниих.
6 மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு அழகுமிகுந்தவள், நீ எவ்வளவு இன்பமுள்ளவள்.
Что украсилася еси, и что усладилася еси, любы, во сладостех твоих?
7 உன் உயரம் பனைமரத்தைப்போலவும், உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும் இருக்கிறது.
Сие величество твое: уподобилася еси финику, и сосца твоя грезном.
8 நான் பனைமரத்தில் ஏறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும், உன் மூக்கின் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.
Рекох: взыду на финик, удержу высоту его: и будут сосцы твои яко грезнове винограда, и воня ноздрей твоих яко яблока:
9 13 உன் முத்தங்கள், என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசச்செய்கிறதுமான, நல்ல திராட்சைரசத்தைப்போல் இருக்கிறது. மணவாளி
и гортань твой яко вино благо, ходящее брату моему в правость, доволно устнам моим и зубом.
10 ௧0 நான் என் நேசருடையவள், அவருடைய பிரியம் என்மேல் இருக்கிறது.
Аз брату моему, и ко мне обращение его.
11 ௧௧ வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய், கிராமங்களில் தங்குவோம்.
Прииди, брате мой, и взыдем на село, водворимся в селех:
12 ௧௨ அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சைக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதுளம்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.
ураним в винограды, увидим аще процвете виноград, процветоша ли овощие, процветоша ли яблока? Тамо дам тебе сосца моя.
13 ௧௩ தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களின் அருகில் புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான பழங்களும் உண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.
Мандрагоры даша воню, и при дверех наших вси плоды новии: до ветхих, брате мой, соблюдох ти.

< உன்னதப்பாட்டு 7 >