< உன்னதப்பாட்டு 7 >
1 ௧ இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள் மிகவும் அழகாக இருக்கிறது; உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது.
Како су лепе ноге твоје у обући, кћери кнежевска; саставци су бедара твојих као гривне, дело руку уметничких.
2 ௨ உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது; உன் வயிறு லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக் குவியல்போல் இருக்கிறது.
Пупак ти је као чаша округла, који није никад без пића; трбух ти је као стог пшенице ограђен љиљанима;
3 ௩ உன் இரண்டு மார்பகங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாக இருக்கிறது.
Две дојке твоје као два близанца срнчета;
4 ௪ உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலின் அருகிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.
Врат ти је као кула од слонове кости; очи су ти као језера у Есевону на вратима ватравимским; нос ти је као кула ливанска која гледа према Дамаску;
5 ௫ உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது; உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது; ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார்.
Глава је твоја на теби као Кармил, и коса на глави твојој као царска порфира у боре набрана.
6 ௬ மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு அழகுமிகுந்தவள், நீ எவ்வளவு இன்பமுள்ளவள்.
Како си лепа и како си љупка, о љубави у милинама!
7 ௭ உன் உயரம் பனைமரத்தைப்போலவும், உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும் இருக்கிறது.
Узраст ти је као палма, и дојке као гроздови.
8 ௮ நான் பனைமரத்தில் ஏறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும், உன் மூக்கின் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.
Рекох: Попећу се на палму, дохватићу гране њене; и биће дојке твоје као гроздови на виновој лози, и мирис носа твог као јабуке;
9 ௯ 13 உன் முத்தங்கள், என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசச்செய்கிறதுமான, நல்ல திராட்சைரசத்தைப்போல் இருக்கிறது. மணவாளி
И грло твоје као добро вино, које иде право драгом мом и чини да говоре усне оних који спавају.
10 ௧0 நான் என் நேசருடையவள், அவருடைய பிரியம் என்மேல் இருக்கிறது.
Ја сам драгог свог, и њега је жеља за мном.
11 ௧௧ வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய், கிராமங்களில் தங்குவோம்.
Ходи, драги мој, да идемо у поље, да ноћујемо у селима.
12 ௧௨ அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சைக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதுளம்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.
Ранићемо у винограде да видимо цвате ли винова лоза, замеће ли се грожђе, цвату ли шипци; онде ћу ти дати љубав своју.
13 ௧௩ தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களின் அருகில் புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான பழங்களும் உண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.
Мандрагоре пуштају мирис, и на вратима је нашим свакојако красно воће, ново и старо, које за те дохраних, драги мој.