< உன்னதப்பாட்டு 5 >
1 ௧ என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்திற்கு வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்; என் திராட்சைரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதர்களே! சாப்பிடுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், திருப்தியாகக் குடியுங்கள். மணவாளி
Eljöttem kertembe, én nővérem, én arám, leszedtem myrrhámat fűszeremmel együtt, ettem lépemet a mézemmel együtt, ittam boromat a tejemmel együtt; egyetek, társaim, igyatok és részegedjetek, barátaim!
2 ௨ நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
Alszom én, de szívem ébren van. Hallga, barátom kopog: nyiss ki, nővérem, kedvesem, galambom, jámborom, mert fejem harmattal van tele, fürteim az éjnek csepjeivel.
3 ௩ என் உடையைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் அணிவேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.
Levetettem köntösömet, hogyan ölteném föl, megmostam lábaimat, hogyan szennyezném be?
4 ௪ என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.
Barátom benyújtotta kezét a nyíláson, és beleim zúgtak miatta.
5 ௫ என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.
Fölkeltem én kinyitni barátomnak, s kezeim cseppegtek myrrhától és ujjaim myrrhától, mely folyt a závár ágaira.
6 ௬ என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு பதில் கொடுக்கவில்லை.
Kinyitottam én barátomnak, de barátom elfordult, eltűnt – lelkem elszállt beszéde alatt- kerestem őt, de nem találtam; szólítottam, de nem felelt nekem.
7 ௭ நகரத்தில் உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்; மதிலின் காவற்காரர்கள் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.
Találtak engem az őrök, kik körüljárnak a városban, vertek engem, megsebesítettek, levették fátyolomat rólam a falak őrei.
8 ௮ எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன். மணவாளியின் தோழிகள்
Megesketlek titeket, Jeruzsálem leányai: ha találjátok barátomat, mit mondjatok neki? Hogy betegje vagyok a szerelemnek.
9 ௯ பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே! மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? மணவாளி
Miben különb a barátod más barátnál, te legszebbike az asszonyoknak, miben különb a barátod más barátnál, hogy úgy megesketsz minket?
10 ௧0 என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பிரகாசமானவர், வல்லமையுள்ளவர், யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை.
Barátom fehér és piros, kiemelkedő tízezer közül;
11 ௧௧ அவருடைய தலை தங்கமயமாக இருக்கிறது; அவருடைய தலைமுடி சுருள் சுருளாகவும், காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது.
feje finom arany, fürtjei bodrosak, feketék mint a holló;
12 ௧௨ அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாகத் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாகப் பதிக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது.
szemei mint galambok a víz medreinél, tejben fürödnek, foglalatban ülnek;
13 ௧௩ அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது; அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
orczái mint fűszeres virágágyak, illatszereket termők; ajkai liliomok, cseppegve folyó myrrhától;
14 ௧௪ அவருடைய கைகள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போல் இருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்களால் மூடப்பட்ட பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.
kezei aranyhengerek tarsiskövekkel foglalva, teste remekmű elefántcsontból, borítva zafírkövekkel;
15 ௧௫ அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவருடைய தோற்றம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாக இருக்கிறது.
lábszárai márványoszlopok, ráillesztve arany talpakra; ábrázata olyan, mint a Libánon, válogatott, mint a czedrusok;
16 ௧௬ அவருடைய வாய் மிகவும் இனிப்பாக இருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் இளம்பெண்களே! இவரே என் சிநேகிதர்.
ínye édesség és mindenestől gyönyörűség. Ez az én barátom s ez az én társam, Jeruzsálem leányai!