< ரூத் 3 >
1 ௧ பின்பு அவள் மாமியாராகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாக வாழ்ந்திருக்கும்படி நான் உனக்கு சவுக்கியத்தைத் தேடாமல் இருப்பேனோ?
盧德的婆婆納敖米向她說:「我女,難道我不應為你找個安身之處,使你幸福嗎﹖
2 ௨ நீ போவாசின் வேலைக்காரிகளோடு இருந்தாயே, அவன் நம்முடைய உறவினன் அல்லவா? இதோ, அவன் இன்று இரவு களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.
如今你同他的使女常在一起的波阿次,不是我們的親人嗎﹖看,他今夜要在禾場上簸大麥,
3 ௩ நீ குளித்து, எண்ணெய் பூசி, உன்னுடைய ஆடைகளை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப்போ; அந்த மனிதன் சாப்பிட்டுக் குடித்து முடிக்கும்வரைக்கும் அவனுடைய கண்களுக்கு எதிர்ப்படாமல் இரு.
你去沐浴,抹油,披上你的外衣下,到禾場上去,但不要使那人認出你來,直等他吃喝完了,
4 ௪ அவன் படுத்துக்கொண்டபின்பு, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்து போய், அவனுடைய கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை விலக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது என்னவென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.
到他睡覺的時候,你要看清他睡覺的地方;然後就去掀開他腳上的外衣,,我必依照遵行。」
5 ௫ இதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.
盧德回答她說:「你所囑咐我的,我必依照遵行。」
6 ௬ அவள் களத்திற்குப்போய், தன் மாமியார் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்தாள்.
她便下到禾場上,作了她婆婆所吩咐她的事。盧德夜訪波阿次
7 ௭ போவாஸ் சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இருந்து, ஒரு அம்பாரத்தின் அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெதுவாகச்சென்று, அவனுடைய கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை விலக்கிப் படுத்துக்கொண்டாள்.
波阿次吃了喝了,心中暢快,就走到麥堆旁躺下了。盧德暗暗地去掀開了他腳上的外衣,躺臥自那裏。
8 ௮ நடுஇரவிலே, அந்த மனிதன் திடுக்கிட்டுத் திரும்பி, ஒரு பெண் தன்னுடைய பாதத்தின் அருகிலே படுத்திருக்கிறதைக் கண்டு,
到了半夜,那人驚起,往前屈身一看,見一個女人睡在他的腳旁,
9 ௯ நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாளின்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் உறவினன் என்றாள்.
便問說:「你是誰」她答說:「我是你的婢女盧德,請你伸開你的衣襟,覆在你婢女身上罷! 因為你是我的至親。」
10 ௧0 அதற்கு அவன்: மகளே, நீ யெகோவாவால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ ஏழைகளும் பணக்காரர்களுமான வாலிபர்களின் பின்னே போகாததினால், உன்னுடைய முந்தின நற்குணத்தைவிட உன்னுடைய பிந்தின நற்குணம் உத்தமமாக இருக்கிறது.
波阿次說:「我女,願你蒙上主的祝福! 你行的仁愛,後者實勝於前者,以致貧富的少年,你都沒有跟隨
11 ௧௧ இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் மக்களாகிய ஊரார் எல்லோரும் அறிவார்கள்.
我女,如今你不必害怕,凡你同我所說的,我都願為你做到,因為我本城的人,都知道你是一位賢德的婦女
12 ௧௨ நான் உறவினன் என்பது உண்மைதான்; ஆனாலும் என்னைவிட நெருங்கின உறவினன் ஒருவன் இருக்கிறான்.
的確,我是你的至親,不過還有一位至親,比我更近。
13 ௧௩ இன்று இரவு தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னை உறவின்முறைப்படித் திருமணம்செய்யச் சம்மதித்தால் நல்லது, அவன் திருமணம் செய்யட்டும்; அவன் உன்னைத் திருமணம்செய்ய விருப்பமில்லாதிருந்தால் நான் உன்னை உறவின்முறைப்படித் திருமணம்செய்வேன் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலம்வரை படுத்துக்கொண்டிரு என்றான்.
今夜你在這裏過夜,明早若他願意對你盡至親的義務,就由他盡好了! 如果他不願意,──上主永在! 我必對你盡至親的義務。你儘管睡到天明。盧德回報婆母
14 ௧௪ அவள் விடியற்காலம்வரைக்கும் அவனுடைய பாதத்தின் அருகே படுத்திருந்து, களத்திற்கு ஒரு பெண் வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரிவதற்கு முன்னே எழுந்திருந்தாள்.
她就在他的腳旁睡到天明。在人能彼此辨別以前,她就起來了;波阿次心想:「不要叫人知道有婦女來過場上。」
15 ௧௫ அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.
於是他說:「伸開你所披的外衣,雙手拿住! 」她就拿著,波阿次量了六斗大麥穗給她,放在她肩上;她就背著回城去了。
16 ௧௬ அவள் தன் மாமியாரிடம் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனிதன் தனக்குச் செய்தவைகளையெல்லாம் அவளுக்கு விவரித்துச் சொன்னாள்.
到了婆婆那裏,婆婆就問她說:「我女,事情怎樣﹖」盧德就向她述說了那人對她所作的一切;
17 ௧௭ மேலும் அவர், நீ உன் மாமியாரிடத்திற்கு வெறுமையாகப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.
並說:「他還給了我這六斗大麥,因為他向我說:你不要空手回去見你的婆婆。」
18 ௧௮ அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னவாக முடியும் என்று நீ அறியும்வரை பொறுமையாக இரு; அந்த மனிதன் இன்றைக்கு இந்தக் காரியத்தைச் செய்து முடிக்கும்முன் ஓயமாட்டான் என்றாள்.
納敖米就說:「我女,你等著罷! 看這事有什麼結果;因為這人除非今日把這事辦成,必不安心。」