< ரூத் 1 >

1 நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவந்த நாட்களில், தேசத்தில் பஞ்சம் உண்டானது; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச்சேர்ந்த ஒரு மனிதன் தன்னுடைய மனைவியோடும், இரண்டு மகன்களோடும் மோவாப் தேசத்திற்குப் போய் குடியிருந்தான்.
И бысть внегда судяху судии, бысть глад на земли. И иде муж от Вифлеема Иудина обитати в селе Моавли, сам и жена его, и два сыны его:
2 அந்த மனிதனுடைய பெயர் எலிமெலேக்கு, அவனுடைய மனைவியின் பெயர் நகோமி, அவனுடைய இரண்டு மகன்களில் ஒருவன் பெயர் மக்லோன், மற்றொருவன் பெயர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியர்களாகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்.
имя же мужеви Елимелех, имя же жене его Ноемминь и имя двема сынома его Маалон и Хелеон, Ефрафейстии от Вифлеема Иудина. И приидоша в село Моавле, и беша тамо.
3 நகோமியின் கணவனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு மகன்கள்மட்டும் இருந்தார்கள்.
И умре Елимелех муж Ноемминин, и остася она и оба сыны ея:
4 இவர்கள் மோவாபியப் பெண்களைத் திருமணம் செய்தார்கள்; அவர்களில் ஒருத்தியின் பெயர் ஒர்பாள், மற்றவளுடைய பெயர் ரூத்; அங்கே ஏறக்குறைய 10 வருடங்கள் வாழ்ந்தார்கள்.
и пояста себе жены Моавитския: имя единей Орфа и имя вторей Руфь: и жиша тамо до десяти лет.
5 பின்பு மக்லோன் கிலியோன் என்ற அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்தப் பெண் தன்னுடைய மகன்கள் இருவரையும் தன்னுடைய கணவனையும் இழந்து தனிமையானாள்.
И умроста оба сыны ея, Маалон и Хелеон, и остася жена от мужа своего и от обоих сынов ея.
6 யெகோவா தம்முடைய மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு; தன்னுடைய மருமகள்களோடு மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,
И воста она и обе снохи ея, и возвратишася с села Моавля: зане услыша на селе Моавли, яко присети Господь людий Своих дати им хлебы.
7 தன்னுடைய இரண்டு மருமகள்களோடு தான் இருந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டாள். யூதா தேசத்திற்குத் திரும்பிப்போக, அவர்கள் வழியிலே நடந்துபோகும்போது,
И отиде от места, идеже бе, она и обе снохи ея с нею, и идяху в путь возвратитися в землю Иудину.
8 நகோமி தன்னுடைய இரண்டு மருமகள்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டிற்குத் திரும்பிப்போங்கள்; இறந்துபோனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயவுசெய்ததுபோல, யெகோவா உங்களுக்கும் தயவுசெய்வாராக.
И рече Ноемминь обема снохама своима: идите убо, возвратитеся каяждо в дом отца своего: да сотворит Господь с вами милость, якоже сотвористе со умершими и со мною:
9 யெகோவா உங்கள் இருவருக்கும் கிடைக்கும் கணவனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாக வாழச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து:
да даст Господь Бог вам обрести покой коейждо в дому мужа своего. И целова я: они же воздвигоша гласы своя и плакашася,
10 ௧0 உம்முடைய மக்களிடத்திற்கு உம்மோடு நாங்களும் வருவோம் என்றார்கள்.
и рекоша ей: ни, но идем с тобою в люди твоя.
11 ௧௧ அதற்கு நகோமி: என் பிள்ளைகளே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடு ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குக் கணவனாவதற்கு, இனிமேல் என் கர்ப்பத்தில் எனக்கு மகன்கள் பிறப்பார்களோ?
И рече Ноемминь: обратитеся убо, дщери мои, вскую идете со мною? Или еще мне сынове во утробе моей, и будут вам мужи?
12 ௧௨ என் பிள்ளைகளே, திரும்பிப்போங்கள்; நான் வயதானவள்; ஒரு கணவனோடு வாழத் தகுதியுள்ளவள் அல்ல; அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாகி, நான் இன்று இரவில் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு, மகன்களைப் பெற்றெடுத்தாலும்,
Возвратитеся убо, дщери мои и отидите, яко состарехся, и не буду мужу: аще же бых и рекла, яко у мене есть надежда, да буду мужу и рожду сыны,
13 ௧௩ அவர்கள் பெரியவர்களாகும்வரை, கணவனுக்கு வாழ்க்கைப்படாமல் நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது முடியாது; என் பிள்ளைகளே, யெகோவாவுடைய கை எனக்கு விரோதமாக இருக்கிறதினால், உங்களைக் குறித்து எனக்கு மிகுந்த துக்கம் இருக்கிறது என்றாள்.
вы ли пождете их, дондеже возрастут? И вы ли удержитеся, да не будете иному мужу? Ни, дщери мои, яко горько бысть мне паче вас, яко изыде на мя рука Господня.
14 ௧௪ அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாக அழுதார்கள்; ஒர்பாள் தன்னுடைய மாமியாரை முத்தம் செய்துவிட்டுக் கடந்துபோனாள்; ரூத்தோ மாமியாரை விடாமல் பற்றிக்கொண்டாள்.
И воздвигоша гласы своя, и плакаша паки. И целова Орфа свекровь свою, и возвратися в люди своя, Руфь же последова ей.
15 ௧௫ அப்பொழுது அவள்: இதோ, உன்னுடைய சகோதரி தன்னுடைய மக்களிடத்திற்கும் தன்னுடைய தெய்வங்களிடத்திற்கும் திரும்பிப்போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பின்னே திரும்பிப்போ என்றாள்.
И рече Ноемминь к Руфе: се, возвратися ятровь твоя к людем своим и к богом своим, возвратися убо и ты вслед ятрове своея.
16 ௧௬ அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடு பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய மக்கள் என்னுடைய மக்கள்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
И рече Руфь: не срящи мене то, еже оставити тебе или обратитися мне от тебе, но идеже идеши ты, и аз пойду, и идеже водворишися ты, водворюся и аз: людие твои людие мои, и Бог твой Бог мой:
17 ௧௭ நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்செய்யப்படுவேன்; மரணத்தைத்தவிர வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், யெகோவா அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
и идеже аще умреши, умру и тамо погребуся: тако да сотворит мне Господь, и сия да приложит, яко смерть разлучит между мною и тобою.
18 ௧௮ அவள் தன்னோடு வர மனஉறுதியாக இருக்கிறதைக் கண்டு, அதன்பின்பு அதைக்குறித்து அவளோடு ஒன்றும் பேசவில்லை.
Видевши же Ноемминь, яко укрепися она ити с нею, умолче глаголати к ней ктому.
19 ௧௯ அப்படியே இருவரும் பெத்லெகேம்வரைக்கும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊர் மக்கள் எல்லோரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்.
Идосте же обе, дондеже приидосте в Вифлеем. И бысть егда приидосте они в Вифлеем, и возгласи весь град о них, и рекоша: еда сия есть Ноемминь?
20 ௨0 அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
И рече к ним: не зовите убо мене Ноемминь, но зовите мене Горька: яко исполни мя горести Вседержитель зело:
21 ௨௧ நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; யெகோவா என்னை வெறுமையாகத் திரும்பிவரச்செய்தார்; யெகோவா என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னை வருத்தப்படுத்தியிருக்கும்போது, நீங்கள் என்னை நகோமி என்று சொல்வது ஏன் என்றாள்.
аз исполнь отидох, и ныне тщу мя возврати Господь: и вскую мя нарицаете Ноемминь, Господь смири мя и Вседержитель озлоби мя?
22 ௨௨ இப்படி, நகோமி மோவாபியப் பெண்ணாகிய தன்னுடைய மருமகள் ரூத்தோடு மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமிற்கு வந்தார்கள்.
И возвратися Ноемминь и Руфь Моавитиня сноха ея с нею, обращающыяся с села Моавля: и приидосте в Вифлеем в начале жатвы ячменя.

< ரூத் 1 >