< ரோமர் 9 >
1 ௧ எனக்கு அதிக துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;
我在基督內說實話,並不說謊,有我的良心在聖神內與我一同作證:
2 ௨ நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவியானவருக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாக இருக்கிறது.
我的憂愁極,大我心中不斷的痛苦;
3 ௩ சரீரத்தின்படி என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.
為救我的弟兄,我血統的同胞,就是被詛咒,與基督隔絕,我也甘心情願。
4 ௪ அவர்கள் இஸ்ரவேலர்களே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவ ஆராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
他們是以色列人:義子的名份、光榮、盟約、法律、禮儀以及恩許,都是他們的;
5 ௫ முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். (aiōn )
聖祖也是他們的,並且基督按血統說,也是從他們來的,祂是在萬有之上,世世代代應受讚美的天主! 阿們。 (aiōn )
6 ௬ தேவவசனம் நிறைவேறாமல்போனது என்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் இஸ்ரவேலர் இல்லையே.
這並不是說天主的話落了空,因為不是凡從以色列生的,都是真以色列人;
7 ௭ அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தினராக இருந்தாலும் அனைவரும் பிள்ளைகள் அல்லவே; “ஈசாக்கினிடம் உன் வம்சம் விளங்கும்” என்று சொல்லியிருக்கிறதே.
也不是凡是亞巴郎的後裔,就都是他的真子女,而是『由依撒格所生的,才稱為你的後裔,』
8 ௮ அது எப்படியென்றால், சரீரத்தின்படி பிள்ளைகள் ஆனவர்கள் தேவனுடைய பிள்ளைகள் அல்லவே, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகள் ஆனவர்களே அந்த வம்சம் என்று எண்ணப்படுகிறார்கள்.
即是說:不是血統上的子女,算是天主的子女,而是藉恩許所生的子女,才算為真後裔。
9 ௯ அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்பதே.
原來恩許是這樣說的:『到明年這時候我要來,撒辣必有一個兒子。』
10 ௧0 இதுமட்டுமல்லாமல், நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,
並且關於黎貝加也有相似的事。她從我們的先祖依撒格一人懷了孕;
11 ௧௧ குழந்தைகள் இன்னும் பிறக்காமலும், நன்மை தீமை ஒன்றும் செய்யாமல் இருக்கும்போது, தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படி இருக்கிற அவருடைய தீர்மானம், செயல்களினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படி,
當時雙胎還沒有出生,也沒有行善或作惡;但為使天主預簡的計畫堅定不移,
12 ௧௨ மூத்தவன், இளையவனுக்கு ஊழியம் செய்வான் என்று அவளுக்கு சொல்லப்பட்டது.
且為顥示這計畫並不憑人的行為,而只憑天主的召選,遂有話給她說:『年長的要服事年幼的。』
13 ௧௩ அப்படியே, யாக்கோபை நேசித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
正如經上記載:『我愛了雅各伯而恨了厄撒烏。』
14 ௧௪ ஆகவே, நாம் என்னசொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
那麼,我們可說什麼呢?難道天主不公道嗎?絕對不是!
15 ௧௫ அவர் மோசேயைப் பார்த்து: எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் இரக்கமாக இருப்பேன், எவன்மேல் உருக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் உருக்கமாக இருப்பேன் என்றார்.
因為祂對梅瑟說過:『我要恩待的,就恩待;我要憐憫的,就憐憫。』
16 ௧௬ ஆகவே, விரும்புகிறவனாலும் இல்லை, ஓடுகிறவனாலும் இல்லை, இரங்குகிற தேவனாலே ஆகும்.
這樣看來,蒙召並不在乎人願意,也不在乎人努力,而是由於天主的仁慈,
17 ௧௭ மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிப்பதற்காகவும், என்னுடைய பெயர் பூமியில் எங்கும் பிரசித்தமடைவதற்காகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனோடு சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.
因為經上有話對法郎說:『我特興起了你,是為在你身上彰顯我的大能,並為使我的名傳遍全世界。』
18 ௧௮ எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.
這樣看來,祂願意恩待誰,就恩待誰;祂願意使誰心硬,就使誰心硬。
19 ௧௯ அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய்.
或者,你要問我說:既是這樣,為什麼祂要責怪人呢?有誰能抗拒祂的意志呢?
20 ௨0 அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா?
人呀! 你是誰,竟敢向天主抗辯?製造品豈能對製造者說:你為什麼這樣製造了我?
21 ௨௧ மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
難道陶工不能隨意用一團泥,把這一個作成貴重的器皿,把那一個作成卑賤的器皿嗎?
22 ௨௨ தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
如果天主願意顯示自己的義怒,並彰顯自己的威能,曾以寬宏大量,容忍了那些惹祂發怒而應毀滅的器皿;
23 ௨௩ தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?
祂如此作,是為把祂那豐富的光榮,在那些祂早已準備好,為進入光榮而蒙憐憫的器冊上彰顯出來,又有什麼不可能呢?
24 ௨௪ அவர் யூதர்களிலிருந்து மட்டுமல்ல, யூதரல்லாத மக்களிடமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.
這些器皿就是我們這些不但從猶太人中,而且也從外邦人中被天主所寵召的人。
25 ௨௫ அந்தப்படி: “எனக்கு மக்களாக இல்லாதவர்களை என்னுடைய மக்கள் என்றும், நேசிக்கப்படாமல் இருந்தவளை நேசிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.
這正如天主在歐瑟亞書中所說的:『我要叫「非我人民」為「我的人民」,又叫「不蒙愛憐者」為「蒙愛憐者」;
26 ௨௬ நீங்கள் என்னுடைய மக்கள் இல்லை என்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்” என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
人在那裡對他們說:你們不是我的人民,在同樣的地方,他們要被稱為永生天主的子女。』
27 ௨௭ அல்லாமலும் இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருந்தாலும், மீதியாக இருப்பவர்கள்மட்டும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்;
論到以色列,依撒意亞卻呼喊說:『以色列子民的數目雖煞多如海沙,唯有殘存者要蒙受救恩,
28 ௨௮ அவர் நீதியோடு சீக்கிரமாகத் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார்” என்றும், ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.
因為上主在大地上,要徹底迅速完成祂的判決。』
29 ௨௯ அல்லாமலும் ஏசாயா முன்பே சொன்னபடி: “சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு வம்சத்தைக்கூட மீதியாக வைக்காமல் இருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவைப்போல இருந்திருப்போம்.”
依撒意亞又預言過:『若非萬軍的上主給我們留下苖裔,我們早已如同索多瑪,相似哈摩辣了。』
30 ௩0 இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத யூதரல்லாத மக்கள் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினால் உண்டாகும் நீதியே.
那麼,我們可說什麼呢?外邦人沒有追求正義,卻獲得了正義,即由信仰而得的正義;
31 ௩௧ நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
以色列人追求使人成義的法律,卻沒有得到這種法律,
32 ௩௨ ஏனென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேடினதினால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
這是為什麼呢?是因為他們不憑信仰,只憑著行為追求。他們正碰在那塊絆腳石上,
33 ௩௩ “இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுகிறதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிறபடி நடந்தது.
正如經上所載:『看,我在熙雍按放了一塊絆腳石,一塊使人絆跌的盤石;相信他的人,不致蒙羞。』