< ரோமர் 8 >
1 ௧ ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை.
Mansh Iyesus Krstosn beeyruwots and boats angshetuwo deshatsno.
2 ௨ ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே.
Iyesus Krstosn datsetuwo kash imetu S'ayn shayri nemo, morronat k'ir dowet nemotse nas'o taan kishre.
3 ௩ அது எப்படியென்றால், சரீரத்தினாலே பலவீனமாக்கப்பட்ட நியாயப்பிரமாணம் செய்யமுடியாததை தேவனே செய்வதற்காக, தம்முடைய குமாரனைப் பாவசரீரத்தின் சாயலாகவும், பாவத்தை நீக்கும் பலியாகவும் அனுப்பி, சரீரத்திலே பாவத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்த்தார்.
Ash doyo maawk b́ wottsatse tuutson nemo s'eentsosh b́ falawo Ik'o k'alre, b́took na'onowere morrets meets aron morri jangosh woshat b́ meetson morro angshon ok b́ bazi.
4 ௪ சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார்.
Man b́k'aluwere meets shunon b́ woterawo no'atsitsi Shayiri shuntsok'on ananiruwotsats noats nemi tzaziy ariko bí b́s'eentsitwok'owe.
5 ௫ அன்றியும் சரீரத்தின்படி நடக்கிறவர்கள் சரீரத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்கள் ஆவியானவருக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
Meets shunon beyiruwotsi meets keewo, Shayiri shunok'on beyiruwotsmó Shayiri keewe bogawiri.
6 ௬ சரீரசிந்தை மரணம்; ஆவியானவரின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாகும்.
Meets keewu gawo k'ire b́ doweti, Shayiri gawirúwok'on wotoonmó kashonat jeenone b́imeeti.
7 ௭ எப்படியென்றால், சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது.
Meets keew gawo Ik'oke shit'eek b́wottstse Ik'i nemosh bíalerawotse, kewewono maawre,
8 ௮ சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள்.
Meets keewosh kéweyirwots Ik'o geneúsho falatsne.
9 ௯ தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல் ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை.
Itmó Ik' S'ayn shayiro ititse beyiruwe wotiyal Shayiri shúnona bako meets shunon beeratste, Krstos Shayiro deshaw ashonúwere Krstos jiraliye.
10 ௧0 மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும்.
Krstos itits b́ wotiyal it meetso morri jangon k'irk b́ wotiyaloru Ik'o itn b́ káátstsotse it shayiro beyar beetke.
11 ௧௧ அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவருடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவர் உங்களுக்குள் வாழ்கிற தம்முடைய ஆவியானவராலே மரணத்திற்குரிய உங்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
Iyesusi k'irotse tizts Ik' Shayiro ititse b́beyal, Iyesus Krstosi k'irotse tiztso Izar Izewer it gitsitse beyiru shayiri weeron k'iritk wotts it meetsosh kasho imetuwe.
12 ௧௨ எனவே, சகோதரர்களே, சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை.
Eshe t eshuwotso! no kashosh kup'o noosh geyife, ernmó noo beyon meets shunok'on beyo noosh geyiratse.
13 ௧௩ சரீரத்தின்படி பிழைத்தால் இறப்பீர்கள்; ஆவியானவராலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள்.
Meets shunok'on it beyal k'iritute, ernmó S'ayn Shayiri angon it meets fino it úd'iyal kashon beetute.
14 ௧௪ மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள்.
Ik' Shayiron jisheyru jamwots Ik' nanaúwotsiye.
15 ௧௫ அப்படியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ஆவியானவரால், அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள்.
Mansh «Niho! no nihono!» etaat it s'eegirwo na'ok'o woti Shayiro it dek'i bako shatoon beyosh aani guuts woti Shayiro de'atste.
16 ௧௬ நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார்.
Ik' Shayiro no Shayironton wotar Ik' nanaúwotsi nowottsok'o noosh gawituwe.
17 ௧௭ நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும்.
Eshe Ik' nanaúwotsi nowotiyakon bín naatetuwots noone, Krstosntonuwere naatetuwone, andowere Krstos gond bek'o kaytsuwotsi nowotiyal maniyere okoon b́ mango kayituwotsi wotituwone.
18 ௧௮ ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
And gond bek'an shinomaants noosh be'et mangonton b́ taatseyal eegonoru talosh b́ falawok'o woshde tawituwe.
19 ௧௯ மேலும் தேவனுடைய குமாரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக தேவனுடைய படைப்புகள் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.
Azets jamo Ik' nanaúwots be'ewo een tewunone b́kotiri.
20 ௨0 அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு,
Azets jamo k'awunts deshawosh kewewtsere, manwere b́ took shunon b́ woterawo jangde'er b́ kotetwok'o woshts Ik' shunone.
21 ௨௧ அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
Jangiyetsonwere azeetso b́tookon t'afi guuts wototse nas'o kesht Ik'i nana'úwotsnton s'ayinonat mang kayituwo b́wotituwok'oyiye.
22 ௨௨ எனவே, நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் படைப்புகள் எல்லாம் ஒன்றாகத் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
Azets jamó ik wotat hambetsish b́borfetso na'a it'i kic'on detseyat kash k'as'oke b́beyiruwok'o danfone.
23 ௨௩ அதுவும் இல்லாமல், ஆவியானவரின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் நம்முடைய சரீர மீட்பாகிய பிள்ளை என்கிற உரிமை வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
Ernmó gúútoke fa'o azeetso s'uziyaliye, S'ayin shayir shintso imets dek'tsuwots noworu no atsi shegr wottso Ik'o nana'ok'o woto kotfetsat nogitsitsi atson gúútoke nofa'oni,
24 ௨௪ அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். பார்க்கப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கை இல்லை; ஒருவன் தான் பார்க்கிறதை நம்பவேண்டியது என்ன?
No noworiye jangiyetsanne. Ernmó no no jangiru keewo be'etka wotiyal jangeet keewo b́woto oorituwe, be'eyiruwonere kone jangiti?
25 ௨௫ நாம் பார்க்காததை நம்பினோமானால், அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.
Nobe'aawu keewo nojangiyalmó k'amoon kotetuwone.
26 ௨௬ அப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரியாமல் இருக்கிறதினால், ஆவியானவர்தாமே சொல்லிமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
Mank'owere awuk'o Ik'o k'ono noon b́geiyitsok'o nodanaawotse S'ayin shayiro nomaawóko noon tep'etuwe, noonon kish keewo falerawo gúúton noosh Ik'o b́k'oniri.
27 ௨௭ ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறதினால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார்.
Ash nibo shuu'at s'iliruwo Izar Izewer S'ayin shayiri asaabiyo eeg b́wottsok'o danfee, S'ayin shayiro amantsuwots jangosh Ik'o b́ k'onir Ik'i shuntsok'one.
28 ௨௮ அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம்.
Ik'o shuntswotsnat b́shuntsok'onowere s'eegets ashuwots Ik'o jam keewo sheengosh boosh b́k'alituwok'o danfone.
29 ௨௯ தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
Shin b́dantsuwots b́ naayi araar b́ na'onúwere eshu ayuwotsitse k'aab b́wotituwok'o Ik'o shino wotituwe bíettsotsne.
30 ௩0 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.
Shino wotitune bíettsuwotsi b́s'eegi, b́s'eegtswotsnowere kááwu b́woshi, kááwu b́ woshtsuwotsnowere b́ mangiyi.
31 ௩௧ இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்?
Eshe keewan jangosh eege noeteti? Ik'o noonton b́wotitka wotiyal kone noon k'efo faliti?
32 ௩௨ தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி?
Ik'o b́ naay ik s'uzosh maac'o b́k'ewerawo noosha ett bíimiyakon b́ naaynton jamkeewo beenon aawuk'oneya noosh ímo b́k'azeti?
33 ௩௩ தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
Ik'o galb'dek'tsuwotsi kone s'aamituwoni? Boon kááwwotsi woshituwo bíne.
34 ௩௪ தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே உயிரோடு எழுந்தும் இருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபக்கத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
Kone angshituwoni? Bí noshegro k'irre, k'irotse tuut Ik'o niho k'ani aaromants beedek'tso, nooshowere Ik'o k'onirwo Krstos Iyesusiye.
35 ௩௫ “உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும்,
Krstos shunatse noon k'álo falituwo kone? Kic'eemó, gondbek'e? Gishee himó k'ak'e? Himó araats wote, t'up'ertawemó? Shike?
36 ௩௬ கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?
Hanwere «N jangosh aaw jamó noone úd'eyiri, Shukeyiru mereerwotskok'o taa weerone» Ett guut'etsok'one.
37 ௩௭ இவைகள் எல்லாவற்றிலேயும் நாம் நம்மேல் அன்பு வைத்திருக்கிறவராலே முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாக இருக்கிறோமே.
Eshe noon shuntson bín keew jamanotsida'adek'on da'atswotsiyere bogfone.
38 ௩௮ மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும்,
Mansh k'iro b́wotiyalor, kasho b́wotiyalor, melakiwotsi bowotiyalor, naashuwotsnor bowotiyal, andfa'o b́wotiyalor, shutsi weetuwo b́wotiyalor, kup'uwotsi bowotiyalor
39 ௩௯ உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.
Danbaan tuuka wotiyalor, dashaanowere gop'awotiyalor, kon naaro wotowa azeetso wotiyal no doonz Iyesus Krstosn nodaatsts Ik'i shunotse noon k'álosh falituwo eegonwor biaalok'owo arikon dandek'roone.