< ரோமர் 7 >
1 ௧ நியாயப்பிரமாணத்தை தெரிந்திருக்கிறவர்களோடு பேசுகிறேன். சகோதரர்களே, ஒரு மனிதன் உயிரோடிருக்கும்வரைக்கும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறது என்று தெரியாமல் இருக்கிறீர்களா?
Koso ukia, owetena, nikech awuoyo gi joma ongʼeyo chik, ni chik otweyo ngʼato mana ka pod ongima?
2 ௨ அது எப்படியென்றால், கணவனையுடைய ஒரு பெண் தன் கணவன் உயிரோடிருக்கும்வரை நியாயப்பிரமாணத்தின்படி அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; கணவன் மரித்தபின்பு கணவனைப்பற்றிய பிரமாணத்திலிருந்து விடுதலையாகி இருக்கிறாள்.
Kuom ranyisi, dhako mokendi Chik otweyo gi chwore mana ka chwore pod ngima; to ka chwore otho, to ogonye e chik mar kend.
3 ௩ ஆகவே, கணவன் உயிரோடிருக்கும்போது அவள் வேறொரு மனிதனை திருமணம்செய்தால் அவள் விபசாரி என்று சொல்லப்படுவாள்; ஆனால், கணவன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்திலிருந்து விடுதலையானபடியால், வேறொரு மனிதனை திருமணம் செய்தாலும் அவள் விபசாரி இல்லை.
Kamano bende, ibiro luong dhakono ni jachode ka odak gi dichwo machielo ka chwore pod ngima. To ka chwore otho, to ogonye kuom chikno kendo ka dichwo machielo okende to ok kwane kaka jachode.
4 ௪ அதுபோல, என் சகோதரர்களே, நீங்கள் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று பலன் கொடுப்பதற்காக கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவர்களானீர்கள்.
Kamano owetena, un bende, usetho korka chik kuom ringre Kristo, mondo koro ubed jo-ngʼat machielo, ma en Jal mosechier oa kuom joma otho, mondo eka wanyag olemo ne Nyasaye.
5 ௫ நாம் சரீரத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்குரிய பலன்களைக் கொடுக்கக்கூடியதாக நம்முடைய சரீர உறுப்புகளிலே பெலன்செய்தது.
Nimar kane pod ringruok chikowa, chik ne chiewo gombowa maricho, kendo negitiyoe ringrewa, omiyo ne wanyago olemo makelo tho.
6 ௬ இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படி இல்லை, புதுமையான ஆவியின்படி ஊழியம் செய்வதற்காக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்திற்கு நாம் மரித்தவர்களாகி, அதில் இருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
To sani, nikech wasetho ne gima notweyowa chon, mondo wabed wasumbini, ok manie bwo chik machon mondiki, to manie ngima manyien kuom Roho.
7 ௭ எனவே, என்னசொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? இல்லையே, பாவம் என்னவென்று நியாயப்பிரமாணத்தினால்தான் நான் தெரிந்துகொண்டேனேதவிர மற்றப்படி இல்லை; “இச்சிக்காமல் இருப்பாயாக” என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் தெரியாமல் இருப்பேனே.
Kare koro wanyalo wacho angʼo? Chik en richo koso? Ok kamano ngangʼ! Adiera, dine ok angʼeyo gima richo en ka dine onge chik. Nimar bende dine ok angʼeyo gima chik en ka dine ok owacho niya, “Kik igombi gir wadu.”
8 ௮ பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று எல்லாவிதமான இச்சைகளையும் எனக்குள் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாக இருக்குமே.
To richo nokawo thuolo mane chik okelo mopidho kit gombo mayoreyore kuoma nimar ka chik onge to richo otho.
9 ௯ முன்பே நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இருந்தபோது நான் ஜீவனுள்ளவனாக இருந்தேன்; கட்டளை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்.
Mokwongo kane chik onge, to ne angima, to ka Chik nobiro, to richo nochier kuoma mi atho.
10 ௧0 இப்படியிருக்க, ஜீவனுக்குரிய கட்டளை எனக்கு மரணத்திற்குரியதாக இருப்பதைப் பார்த்தேன்.
Nanwangʼo ni chikno, mane onego okel ngima, nolokore mokelo tho.
11 ௧௧ பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று, என்னை ஏமாற்றியது, அதினாலே என்னைக் கொன்றது.
Nimar richo nokawo thuolo mane chik okelo, mowuonda, kendo okonyore gi chikno mondo onega.
12 ௧௨ எனவே, நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளது, கட்டளையும் பரிசுத்தமாகவும் நீதியாகவும் நன்மையாகவும் இருக்கிறது.
Omiyo Chik ler, kendo chike moketi bende ler, kendo nikare, to kendo ber.
13 ௧௩ இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமானதோ? அப்படி இல்லை; பாவமே எனக்கு மரணமானது; பாவம் கட்டளையினாலே அதிக பாவமுள்ளதாவதற்கும், அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே இருக்கும்படிக்கும் அப்படியானது.
Dibed ni gima ber ema nomiyo atho koso? Ok kamano kata matin! Richo notiyo gi gima ber, mi onega, mondo richo ongʼere malongʼo ni en angʼo. Kamano chik nyiso ni richo en gima rach moloyo.
14 ௧௪ மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாக இருக்கிறது, நானோ பாவத்திற்குக் கீழாக விற்கப்பட்டு, சரீரத்திற்குரியவனாக இருக்கிறேன்.
Wangʼeyo ni Chik en gir chuny; to an ngʼat ringruok, kendo richo osengʼiewa moloka misumbane.
15 ௧௫ எப்படியென்றால், நான் செய்கிறது எனக்கே புரியவில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.
Gik ma atimo odhiera ngʼeyo. Nimar ok atim gik ma adwaro, to atimo mana gik ma ok adwar.
16 ௧௬ இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாக இருக்க, நியாயப்பிரமாணம் நல்லது என்று ஏற்றுக்கொள்ளுகிறேனே.
Koro ka atimo gik ma ok adwar, to mano nyiso ni Chik ber.
17 ௧௭ எனவே, நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
Chutho, an ok ema atim gino, to richo manie iya ema time.
18 ௧௮ அது எப்படியென்றால், என்னிடம், அதாவது, என் சரீரத்தில், நன்மை வாழ்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டும் என்கிற விருப்பம் என்னிடம் இருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடம் இல்லை.
Angʼeyo ni onge gimoro kata achiel maber manie iya, tiende ni, kita mar richo. Nimar an-gi gombo mar timo gima ber to ok anyal time.
19 ௧௯ எனவே, நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
Nimar ok atim gima ber ma adwaro mondo atim to asiko atimo mana gima rach.
20 ௨0 அதன்படி, நான் விரும்பாததை நான் செய்தால், நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
Koro ka atimo gima ok adwar timo, to koro an ok ema atime, to richo modak e iya ema time.
21 ௨௧ ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடம் தீமை உண்டு என்கிற ஒரு பிரமாணத்தைப் பார்க்கிறேன்.
Omiyo ayudo chikni katiyo: Ni ka adwaro timo gima ber, to apo ka rach bende ni koda.
22 ௨௨ உள்ளான மனிதனுக்குத் தகுந்தபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாக இருக்கிறேன்.
Nimar ei chunya maiye amor gi chik Nyasaye;
23 ௨௩ ஆனாலும் என் மனதின் பிரமாணத்திற்கு எதிராகப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் உறுப்புகளில் இருக்கிறதைப் பார்க்கிறேன்; அது என் உறுப்புகளில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்திற்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.
to aneno chik machielo katiyo e fuonde mag ringra makedo gi chik manie chunya, mamiyo abedo misumba Chik mar richo manie fuondena.
24 ௨௪ நிர்பந்தமான மனிதன் நான்! இந்த மரணசரீரத்திலிருந்து யார் என்னை விடுதலையாக்குவார்?
Mano kaka an ngʼama chandore! En ngʼa mabiro resa kuom ringruokni mar tho?
25 ௨௫ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனவே, நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும், சரீரத்தினாலே பாவப்பிரமாணத்திற்கும் சேவை செய்கிறேன்.
Erokamano ne Nyasaye kuom Yesu Kristo Ruodhwa! Kuom mano, an awuon gi ei pacha an misumba mar chik Nyasaye, to kuom kita mar richo, an misumba mar chik mar richo.