< ரோமர் 6 >

1 ஆகவே, என்னசொல்லுவோம்? கிருபை பெருகுவதற்காகப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? சொல்லக்கூடாதே.
那么我们应该做出怎样的反应?难道是通过继续犯罪获得更多的恩典?
2 பாவத்திற்கு மரித்த நாம் இனி அதிலே எப்படி வாழ்வோம்?
当然不是!既然我们已经因罪而死,又怎能继续活在罪中?
3 கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமல் இருக்கிறீர்களா?
难道你们不知道吗?所有通过受洗而追随基督耶稣之人,都是受洗与他共同赴死?
4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாக நடந்துகொள்வதற்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டோம்.
通过受洗,我们与他一同埋葬在死亡中,就像基督通过天父的荣耀死而复活,我们也可以获得新生命。
5 ஆகவே, அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
如果我们像他一样死去,从而与他成为一体,我们也会像他一样死而复生。
6 நாம் இனிப் பாவத்திற்கு அடிமையாக இல்லாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோவதற்காக, நம்முடைய பழைய மனிதன் அவரோடு சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
我们知道,死亡之前的“旧我”已经与耶稣一起钉上十字架,通过抛弃罪恶的死亡之躯,我们便不再被罪所奴役。
7 மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
因为死去之人已经从罪中获得自由。
8 எனவே, கிறிஸ்துவோடு நாம் மரித்தோம் என்றால், அவரோடு பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
既然我们与基督共同赴死,我们就有信心必将与他同住,
9 மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து இனி இறப்பதில்லை என்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்ளுவதில்லை.
因为我们知道,由于基督已经死而复生,即不会再受死亡掌控,因此获得永生。
10 ௧0 அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேமுறை மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
通过死亡,他带走了所有的罪,现在他复活,便为上帝而活!
11 ௧௧ அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
同样,你应该认为自己已因罪而死亡,通过基督耶稣因上帝而复活。
12 ௧௨ ஆகவே, நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படிவதற்காக, மரணத்திற்குரிய உங்களுடைய சரீரத்தில் பாவம் ஆளுகை செய்யாமல் இருக்கட்டும்.
不要让罪掌控你凡人之躯,不要屈服于它的诱惑,
13 ௧௩ நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
不要将身体的某一部分成为罪的邪恶工具。而是要像那些因死而复生回归的一样,将自己奉献给上帝,将身体的全部作为工具,为上帝行善。
14 ௧௪ நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறதினால், பாவம் உங்களை மேற்கொள்ளமுடியாது.
罪无法掌控你,因你并非身处律法之下,而是置身恩典之中。
15 ௧௫ இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறதினால், பாவம் செய்யலாமா? செய்யக்கூடாதே.
那么,我们不在律法之下、而在恩典之中,是否就意味着我们应该做出有罪之事?当然不是!
16 ௧௬ மரணத்திற்குரிய பாவத்திற்கானாலும், நீதிக்குரிய கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படிவதற்காக உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று தெரியாமல் இருக்கிறீர்களா?
你难道没有意识到吗?如果你成为某人的奴隶,服从他们的命令,你就是向你发号施令之人的奴隶。如果你是罪的奴隶,结果就是死亡,如果你服从上帝,结果就是与他和解。
17 ௧௭ முன்பு நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
感谢上帝,因为尽管你曾是罪的奴隶,但你全心全意选择遵循所学到的上帝真理。
18 ௧௮ பாவத்திலிருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.
当你解脱了罪恶,就会成为只按道德正确行事的奴隶。
19 ௧௯ உங்களுடைய சரீர பலவீனத்தினால் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன். அக்கிரமத்தைச் செய்வதற்காக முன்பே நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதைச் செய்வதற்காக உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.
我使用这个日常例子,是因为人类的思维具有局限性。正如你们曾为不道德的努力,罪行累累。现在你们必须成为纯洁和正义的奴隶。
20 ௨0 பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாக இருந்தகாலத்தில் நீதிக்கு விலகினவர்களாக இருந்தீர்கள்.
当你是罪的奴隶时,就不需要正确行事。
21 ௨௧ இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தெரிகிற காரியங்களினாலே அந்தகாலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
但这样做的结果是什么?你难道不会为自己的所作所为感到羞耻吗?这样的行为会带你走向死亡!
22 ௨௨ இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (aiōnios g166)
但当你已从罪中解脱,就成为上帝的奴隶,这会让你获得纯洁的生命——最终得到永生。 (aiōnios g166)
23 ௨௩ பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (aiōnios g166)
死亡是罪的代价,但通过我们的主基督耶稣,上帝向我们馈赠了永生。 (aiōnios g166)

< ரோமர் 6 >