< ரோமர் 4 >
1 ௧ அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் சரீரத்தின்படி என்னத்தைக் கண்டுபிடித்தான் என்று சொல்லுவோம்?
అస్మాకం పూర్వ్వపురుష ఇబ్రాహీమ్ కాయికక్రియయా కిం లబ్ధవాన్ ఏతదధి కిం వదిష్యామః?
2 ௨ ஆபிரகாம் செயல்களினாலே நீதிமானாக்கப்பட்டான் என்றால் மேன்மைபாராட்ட அவனுக்குக் காரணம் உண்டு; ஆனால் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்டமுடியாது.
స యది నిజక్రియాభ్యః సపుణ్యో భవేత్ తర్హి తస్యాత్మశ్లాఘాం కర్త్తుం పన్థా భవేదితి సత్యం, కిన్త్వీశ్వరస్య సమీపే నహి|
3 ௩ வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறது.
శాస్త్రే కిం లిఖతి? ఇబ్రాహీమ్ ఈశ్వరే విశ్వసనాత్ స విశ్వాసస్తస్మై పుణ్యార్థం గణితో బభూవ|
4 ௪ வேலை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபை என்று எண்ணப்படாமல், கடன் என்று எண்ணப்படும்.
కర్మ్మకారిణో యద్ వేతనం తద్ అనుగ్రహస్య ఫలం నహి కిన్తు తేనోపార్జితం మన్తవ్యమ్|
5 ௫ ஒருவன் செயல்களைச் செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடம் விசுவாசம் வைக்கிறவனாக இருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
కిన్తు యః పాపినం సపుణ్యీకరోతి తస్మిన్ విశ్వాసినః కర్మ్మహీనస్య జనస్య యో విశ్వాసః స పుణ్యార్థం గణ్యో భవతి|
6 ௬ அந்தப்படி, செயல்கள் இல்லாமல் தேவனாலே நீதிமான் என்று எண்ணப்படுகிற மனிதனுடைய பாக்கியத்தைக் காண்பிப்பதற்காக:
అపరం యం క్రియాహీనమ్ ఈశ్వరః సపుణ్యీకరోతి తస్య ధన్యవాదం దాయూద్ వర్ణయామాస, యథా,
7 ௭ எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
స ధన్యోఽఘాని మృష్టాని యస్యాగాంస్యావృతాని చ|
8 ௮ எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
స చ ధన్యః పరేశేన పాపం యస్య న గణ్యతే|
9 ௯ இந்தப் பாக்கியம் விருத்தசேதனம் உள்ளவனுக்குமட்டும் வருமோ அல்லது விருத்தசேதனம் இல்லாதவனுக்கும் வருமோ? “ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறோமே.
ఏష ధన్యవాదస్త్వక్ఛేదినమ్ అత్వక్ఛేదినం వా కం ప్రతి భవతి? ఇబ్రాహీమో విశ్వాసః పుణ్యార్థం గణిత ఇతి వయం వదామః|
10 ௧0 அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோதா அல்லது விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதா? விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோது இல்லை, விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதே.
స విశ్వాసస్తస్య త్వక్ఛేదిత్వావస్థాయాం కిమ్ అత్వక్ఛేదిత్వావస్థాయాం కస్మిన్ సమయే పుణ్యమివ గణితః? త్వక్ఛేదిత్వావస్థాయాం నహి కిన్త్వత్వక్ఛేదిత్వావస్థాయాం|
11 ௧௧ மேலும், விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனம் இல்லாதவர்களாக விசுவாசிக்கிற எல்லோருக்கும் நீதி எண்ணப்படுவதற்காக அவர்களுக்கு அவன் தகப்பனாக இருப்பதற்கும்,
అపరఞ్చ స యత్ సర్వ్వేషామ్ అత్వక్ఛేదినాం విశ్వాసినామ్ ఆదిపురుషో భవేత్, తే చ పుణ్యవత్త్వేన గణ్యేరన్;
12 ௧௨ விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாக மட்டுமில்லை, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களுக்குத் தகப்பனாக இருப்பதற்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.
యే చ లోకాః కేవలం ఛిన్నత్వచో న సన్తో ఽస్మత్పూర్వ్వపురుష ఇబ్రాహీమ్ అఛిన్నత్వక్ సన్ యేన విశ్వాసమార్గేణ గతవాన్ తేనైవ తస్య పాదచిహ్నేన గచ్ఛన్తి తేషాం త్వక్ఛేదినామప్యాదిపురుషో భవేత్ తదర్థమ్ అత్వక్ఛేదినో మానవస్య విశ్వాసాత్ పుణ్యమ్ ఉత్పద్యత ఇతి ప్రమాణస్వరూపం త్వక్ఛేదచిహ్నం స ప్రాప్నోత్|
13 ௧௩ அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கோ அல்லது அவன் வம்சத்திற்கோ நியாயப்பிரமாணத்தினால் கிடைக்காமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.
ఇబ్రాహీమ్ జగతోఽధికారీ భవిష్యతి యైషా ప్రతిజ్ఞా తం తస్య వంశఞ్చ ప్రతి పూర్వ్వమ్ అక్రియత సా వ్యవస్థామూలికా నహి కిన్తు విశ్వాసజన్యపుణ్యమూలికా|
14 ௧௪ நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்தவர்கள் வாரிசுகளானால் விசுவாசம் வீணாகப்போகும், வாக்குத்தத்தமும் இல்லாமல்போகும்.
యతో వ్యవస్థావలమ్బినో యద్యధికారిణో భవన్తి తర్హి విశ్వాసో విఫలో జాయతే సా ప్రతిజ్ఞాపి లుప్తైవ|
15 ௧௫ மேலும் நியாயப்பிரமாணம் கோபத்தை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணம் இல்லை என்றால் கீழ்ப்படியாமையும் இல்லை.
అధికన్తు వ్యవస్థా కోపం జనయతి యతో ఽవిద్యమానాయాం వ్యవస్థాయామ్ ఆజ్ఞాలఙ్ఘనం న సమ్భవతి|
16 ௧௬ எனவே, சுதந்திரமானது கிருபையினால் உண்டாகிறதாக இருப்பதற்காக அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்த வம்சத்தினர்களுக்குமட்டும் இல்லை, நம் எல்லோருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வம்சத்தினர்களுக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாக இருப்பதற்காக அப்படி வருகிறது.
అతఏవ సా ప్రతిజ్ఞా యద్ అనుగ్రహస్య ఫలం భవేత్ తదర్థం విశ్వాసమూలికా యతస్తథాత్వే తద్వంశసముదాయం ప్రతి అర్థతో యే వ్యవస్థయా తద్వంశసమ్భవాః కేవలం తాన్ ప్రతి నహి కిన్తు య ఇబ్రాహీమీయవిశ్వాసేన తత్సమ్భవాస్తానపి ప్రతి సా ప్రతిజ్ఞా స్థాస్నుర్భవతి|
17 ௧௭ “அநேக தேசமக்களுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்” என்று எழுதியிருக்கிறபடி, அவன், தான் விசுவாசித்தவருமாக, மரித்தோரை உயிரோடு எழுப்பி, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாக இருக்கிற தேவனுக்குமுன்பாக நம்மெல்லோருக்கும் தகப்பன் ஆனான்.
యో నిర్జీవాన్ సజీవాన్ అవిద్యమానాని వస్తూని చ విద్యమానాని కరోతి ఇబ్రాహీమో విశ్వాసభూమేస్తస్యేశ్వరస్య సాక్షాత్ సోఽస్మాకం సర్వ్వేషామ్ ఆదిపురుష ఆస్తే, యథా లిఖితం విద్యతే, అహం త్వాం బహుజాతీనామ్ ఆదిపురుషం కృత్వా నియుక్తవాన్|
18 ௧௮ “உன் வம்சம் இவ்வளவாக இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே,” தான் அநேக தேசமக்களுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு வழியில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான்.
త్వదీయస్తాదృశో వంశో జనిష్యతే యదిదం వాక్యం ప్రతిశ్రుతం తదనుసారాద్ ఇబ్రాహీమ్ బహుదేశీయలోకానామ్ ఆదిపురుషో యద్ భవతి తదర్థం సోఽనపేక్షితవ్యమప్యపేక్షమాణో విశ్వాసం కృతవాన్|
19 ௧௯ அவன் விசுவாசத்திலே பலவீனமாக இருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்காமல் இருந்தான்.
అపరఞ్చ క్షీణవిశ్వాసో న భూత్వా శతవత్సరవయస్కత్వాత్ స్వశరీరస్య జరాం సారానామ్నః స్వభార్య్యాయా రజోనివృత్తిఞ్చ తృణాయ న మేనే|
20 ௨0 தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாகச் சந்தேகப்படாமல்,
అపరమ్ అవిశ్వాసాద్ ఈశ్వరస్య ప్రతిజ్ఞావచనే కమపి సంశయం న చకార;
21 ௨௧ தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்று முழுநிச்சயமாக நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவன் ஆனான்.
కిన్త్వీశ్వరేణ యత్ ప్రతిశ్రుతం తత్ సాధయితుం శక్యత ఇతి నిశ్చితం విజ్ఞాయ దృఢవిశ్వాసః సన్ ఈశ్వరస్య మహిమానం ప్రకాశయాఞ్చకార|
22 ௨௨ எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
ఇతి హేతోస్తస్య స విశ్వాసస్తదీయపుణ్యమివ గణయాఞ్చక్రే|
23 ௨௩ “அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது,” என்பது, அவனுக்காகமட்டும் இல்லை, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
పుణ్యమివాగణ్యత తత్ కేవలస్య తస్య నిమిత్తం లిఖితం నహి, అస్మాకం నిమిత్తమపి,
24 ௨௪ நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
యతోఽస్మాకం పాపనాశార్థం సమర్పితోఽస్మాకం పుణ్యప్రాప్త్యర్థఞ్చోత్థాపితోఽభవత్ యోఽస్మాకం ప్రభు ర్యీశుస్తస్యోత్థాపయితరీశ్వరే
25 ௨௫ அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
యది వయం విశ్వసామస్తర్హ్యస్మాకమపి సఏవ విశ్వాసః పుణ్యమివ గణయిష్యతే|