< ரோமர் 4 >

1 அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் சரீரத்தின்படி என்னத்தைக் கண்டுபிடித்தான் என்று சொல்லுவோம்?
ⲁ̅ⲞⲨ ϪⲈ ⲠⲈⲦⲈⲚⲚⲀϪⲞϤ ⲈⲐⲂⲈ ⲀⲂⲢⲀⲀⲘ ϪⲈ ⲀⲨϪⲈⲘϤ ⲠⲈⲚϢⲞⲢⲠ ⲚⲒⲰⲦ ⲔⲀⲦⲀ ⲤⲀⲢⲜ.
2 ஆபிரகாம் செயல்களினாலே நீதிமானாக்கப்பட்டான் என்றால் மேன்மைபாராட்ட அவனுக்குக் காரணம் உண்டு; ஆனால் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்டமுடியாது.
ⲃ̅ⲒⲤϪⲈ ⲄⲀⲢ ⲀⲂⲢⲀⲀⲘ ⲀϤⲘⲀⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚϨⲀⲚϨⲂⲎⲞⲨⲒ ⲒⲈ ⲞⲨⲞⲚⲦⲈϤ ϢⲞⲨϢⲞⲨ ⲘⲘⲀⲨ ⲀⲖⲖⲀ ⲞⲨⲂⲈ ⲪⲚⲞⲨϮ ⲀⲚ.
3 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறது.
ⲅ̅ⲞⲨ ⲄⲀⲢ ⲈⲦⲈ ϮⲄⲢⲀⲪⲎ ϪⲰ ⲘⲘⲞϤ ⲀⲂⲢⲀⲀⲘ ⲆⲈ ⲀϤⲚⲀϨϮ ⲈⲪⲚⲞⲨϮ ⲞⲨⲞϨ ⲀⲨⲞⲠⲤ ⲚⲀϤ ⲈⲨⲘⲈⲐⲘⲎⲒ.
4 வேலை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபை என்று எண்ணப்படாமல், கடன் என்று எண்ணப்படும்.
ⲇ̅ⲪⲎ ⲈⲦⲈⲢϨⲰⲂ ⲘⲠⲀⲨⲈⲠ ⲠⲈϤⲂⲈⲬⲈ ⲚⲀϤ ⲔⲀⲦⲀ ⲞⲨϨⲘⲞⲦ ⲀⲖⲖⲀ ϪⲈ ϤⲈⲢⲞϤ.
5 ஒருவன் செயல்களைச் செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடம் விசுவாசம் வைக்கிறவனாக இருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
ⲉ̅ⲪⲎ ⲆⲈ ⲈⲦⲈⲚϤⲈⲢϨⲰⲂ ⲀⲚ ⲈϤⲚⲀϨϮ ⲆⲈ ⲈⲪⲎ ⲈⲦⲐⲘⲀⲒⲞ ⲘⲠⲒⲀⲤⲈⲂⲎⲤ ϢⲀⲨⲈⲠ ⲠⲈϤⲚⲀϨϮ ⲚⲀϤ ⲈⲨⲘⲈⲐⲘⲎⲒ.
6 அந்தப்படி, செயல்கள் இல்லாமல் தேவனாலே நீதிமான் என்று எண்ணப்படுகிற மனிதனுடைய பாக்கியத்தைக் காண்பிப்பதற்காக:
ⲋ̅ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ϨⲰϤ ⲈⲦⲀ ⲆⲀⲨⲒⲆ ϪⲰ ⲘⲠⲒⲘⲀⲔⲀⲢⲒⲞⲤ ⲚⲦⲈⲠⲒⲢⲰⲘⲒ ⲪⲎ ⲈⲦⲈ ⲪⲚⲞⲨϮ ⲚⲀⲰⲠ ⲚϮⲘⲈⲐⲘⲎⲒ ⲚⲀϤ ⲀⲦϬⲚⲈ ϨⲰⲂ.
7 எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
ⲍ̅ⲰⲞⲨⲚⲒⲀⲦⲞⲨ ⲚⲚⲎ ⲈⲦⲀⲨⲬⲰ ⲚⲚⲞⲨⲀⲚⲞⲘⲒⲀ ⲚⲰⲞⲨ ⲈⲂⲞⲖ ⲚⲈⲘ ⲚⲎ ⲈⲦⲀⲨϨⲰⲂⲤ ⲈⲂⲞⲖ ⲈϪⲈⲚ ⲚⲞⲨⲚⲞⲂⲒ.
8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
ⲏ̅ⲰⲞⲨⲚⲒⲀⲦϤ ⲘⲠⲒⲢⲰⲘⲒ ⲈⲦⲈ ⲠϬⲞⲒⲤ ⲚⲀⲈⲠ ⲚⲞⲂⲒ ⲈⲢⲞϤ ⲀⲚ.
9 இந்தப் பாக்கியம் விருத்தசேதனம் உள்ளவனுக்குமட்டும் வருமோ அல்லது விருத்தசேதனம் இல்லாதவனுக்கும் வருமோ? “ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறோமே.
ⲑ̅ⲠⲀⲒⲘⲀⲔⲀⲢⲒⲤⲘⲞⲤ ⲞⲨⲚ ⲀϤⲬⲎ ⲈϪⲈⲚ ⲠⲤⲈⲂⲒ ϢⲀⲚ ⲈϪⲈⲚ ϮⲘⲈⲦⲀⲦⲤⲈⲂⲒ ⲦⲈⲚϪⲰ ⲄⲀⲢ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲀⲨⲈⲠ ⲪⲚⲀϨϮ ⲚⲀⲂⲢⲀⲀⲘ ⲚⲀϤ ⲈⲨⲘⲈⲐⲘⲎⲒ.
10 ௧0 அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோதா அல்லது விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதா? விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோது இல்லை, விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதே.
ⲓ̅ⲠⲰⲤ ⲞⲨⲚ ⲀⲨⲞⲠϤ ⲈϤⲬⲎ ϦⲈⲚⲠⲤⲈⲂⲒ ϢⲀⲚ ⲈϤⲬⲎ ϦⲈⲚϮⲘⲈⲦⲀⲦⲤⲈⲂⲒ ⲈϤⲬⲎ ϦⲈⲚⲠⲤⲈⲂⲒ ⲀⲚ ⲀⲖⲖⲀ ϦⲈⲚϮⲘⲈⲦⲀⲦⲤⲈⲂⲒ.
11 ௧௧ மேலும், விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனம் இல்லாதவர்களாக விசுவாசிக்கிற எல்லோருக்கும் நீதி எண்ணப்படுவதற்காக அவர்களுக்கு அவன் தகப்பனாக இருப்பதற்கும்,
ⲓ̅ⲁ̅ⲞⲨⲞϨ ⲀϤϬⲒ ⲚⲞⲨⲘⲎⲒⲚⲒ ⲚⲦⲈⲠⲤⲈⲂⲒ ⲞⲨⲤⲪⲢⲀⲄⲒⲤ ⲚⲦⲈϮⲘⲈⲐⲘⲎⲒ ⲚⲦⲈⲪⲚⲀϨϮ ⲐⲎ ⲈⲦϦⲈⲚ ϮⲘⲈⲦⲀⲦⲤⲈⲂⲒ ⲈⲐⲢⲈϤϢⲰⲠⲒ ⲚⲒⲰⲦ ⲚⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈⲐⲚⲀϨϮ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ϮⲘⲈⲦⲀⲦⲤⲈⲂⲒ ⲈⲠϪⲒⲚⲦⲞⲨⲰⲠ ⲚⲞⲨⲘⲈⲐⲘⲎⲒ ⲚⲰⲞⲨ.
12 ௧௨ விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாக மட்டுமில்லை, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களுக்குத் தகப்பனாக இருப்பதற்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.
ⲓ̅ⲃ̅ⲞⲨⲞϨ ⲚⲒⲰⲦ ⲚⲦⲈⲠⲤⲈⲂⲒ ⲚⲚⲒⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲤⲈⲂⲒ ⲘⲘⲀⲨⲀⲦⲞⲨ ⲀⲚ ⲀⲖⲖⲀ ⲚⲈⲘ ⲚⲎ ⲈⲐⲘⲞϢⲒ ϨⲒ ⲚⲒϢⲈⲚⲦⲀⲦⲤⲒ ⲚⲦⲈⲪⲚⲀϨϮ ⲈⲦϦⲈⲚ ϮⲘⲈⲦⲀⲦⲤⲈⲂⲒ ⲚⲦⲈⲠⲈⲚⲒⲰⲦ ⲀⲂⲢⲀⲀⲘ.
13 ௧௩ அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கோ அல்லது அவன் வம்சத்திற்கோ நியாயப்பிரமாணத்தினால் கிடைக்காமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.
ⲓ̅ⲅ̅ⲞⲨ ⲄⲀⲢ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲠⲒⲚⲞⲘⲞⲤ ⲀⲚ ⲀⲨϮ ⲘⲠⲒⲰϢ ⲚⲀⲂⲢⲀⲀⲘ ⲒⲈ ⲠⲈϤϪⲢⲞϪ ⲈⲐⲢⲈϤϢⲰⲠⲒ ⲈϤⲞⲒ ⲚⲔⲖⲎⲢⲞⲚⲞⲘⲞⲤ ⲚⲦⲈⲠⲒⲔⲞⲤⲘⲞⲤ ⲀⲖⲖⲀ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ϮⲘⲈⲐⲘⲎⲒ ⲚⲦⲈⲪⲚⲀϨϮ.
14 ௧௪ நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்தவர்கள் வாரிசுகளானால் விசுவாசம் வீணாகப்போகும், வாக்குத்தத்தமும் இல்லாமல்போகும்.
ⲓ̅ⲇ̅ⲒⲤϪⲈ ⲄⲀⲢ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲪⲚⲞⲘⲞⲤ ⲚⲈⲚⲒⲔⲖⲎⲢⲞⲚⲞⲘⲞⲤ ϨⲀⲢⲀ ⲀϤϢⲰⲠⲒ ⲈϤϢⲞⲨⲒⲦ ⲚϪⲈⲠⲒⲚⲀϨϮ ⲞⲨⲞϨ ⲀϤⲔⲰⲢϤ ⲚϪⲈⲠⲒⲰϢ.
15 ௧௫ மேலும் நியாயப்பிரமாணம் கோபத்தை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணம் இல்லை என்றால் கீழ்ப்படியாமையும் இல்லை.
ⲓ̅ⲉ̅ⲪⲚⲞⲘⲞⲤ ⲄⲀⲢ ⲀϤⲈⲢϨⲰⲂ ⲈⲨϪⲰⲚⲦ ⲪⲘⲀ ⲆⲈ ⲈⲦⲈ ⲘⲘⲞⲚ ⲚⲞⲘⲞⲤ ⲘⲘⲀⲨ ⲞⲨⲆⲈ ⲘⲘⲞⲚ ⲠⲀⲢⲀⲂⲀⲤⲒⲤ.
16 ௧௬ எனவே, சுதந்திரமானது கிருபையினால் உண்டாகிறதாக இருப்பதற்காக அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்த வம்சத்தினர்களுக்குமட்டும் இல்லை, நம் எல்லோருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வம்சத்தினர்களுக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாக இருப்பதற்காக அப்படி வருகிறது.
ⲓ̅ⲋ̅ⲈⲐⲂⲈ ⲪⲀⲒ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲞⲨⲚⲀϨϮ ϨⲒⲚⲀ ⲔⲀⲦⲀ ⲞⲨϨⲘⲞⲦ ⲈⲐⲢⲈϤϢⲰⲠⲒ ⲚϪⲈⲠⲒⲰϢ ⲈϤⲦⲀϪⲢⲎⲞⲨⲦ ⲘⲠⲒϪⲢⲞϪ ⲦⲎⲢϤ ⲘⲪⲎ ⲈⲦϢⲞⲠ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲒⲚⲞⲘⲞⲤ ⲘⲘⲀⲨⲀⲦϤ ⲀⲚ ⲀⲖⲖⲀ ⲚⲈⲘ ⲪⲎ ⲈⲦϢⲞⲠ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲪⲚⲀϨϮ ⲚⲀⲂⲢⲀⲀⲘ ⲈⲦⲈ ⲠⲈⲚⲒⲰⲦ ⲦⲎⲢⲈⲚ ⲠⲈ.
17 ௧௭ “அநேக தேசமக்களுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்” என்று எழுதியிருக்கிறபடி, அவன், தான் விசுவாசித்தவருமாக, மரித்தோரை உயிரோடு எழுப்பி, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாக இருக்கிற தேவனுக்குமுன்பாக நம்மெல்லோருக்கும் தகப்பன் ஆனான்.
ⲓ̅ⲍ̅ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲤϦⲎⲞⲨⲦ ϪⲈ ⲀⲒⲬⲀⲔ ⲚⲒⲰⲦ ⲚⲞⲨⲘⲎϢ ⲚⲈⲐⲚⲞⲤ ⲘⲠⲈⲘⲐⲞ ⲘⲪⲚⲞⲨϮ ⲪⲎ ⲈⲦⲀϤⲚⲀϨϮ ⲈⲢⲞϤ ⲪⲎ ⲈⲦⲦⲀⲚϦⲞ ⲚⲚⲒⲢⲈϤⲘⲰⲞⲨⲦ ⲞⲨⲞϨ ⲈⲦⲐⲰϨⲈⲘ ⲚⲚⲎ ⲈⲦⲈ ⲚⲤⲈϢⲞⲠ ⲀⲚ ⲘⲪⲢⲎϮ ⲚⲈⲈⲨϢⲞⲠ.
18 ௧௮ “உன் வம்சம் இவ்வளவாக இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே,” தான் அநேக தேசமக்களுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு வழியில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான்.
ⲓ̅ⲏ̅ⲪⲎ ⲈⲚⲀϤⲞⲒ ⲚⲀⲦϨⲈⲖⲠⲒⲤ ⲈⲨϨⲰⲂ ⲀϤⲚⲀϨϮ ⲈⲨϨⲈⲖⲠⲒⲤ ⲈⲐⲢⲈϤϢⲰⲠⲒ ⲚⲒⲰⲦ ⲚⲞⲨⲘⲎ ϢⲚⲈⲐⲚⲞⲤ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲀⲨϪⲞⲤ ⲚⲀϤ ϪⲈ ⲈⲢⲈ ⲠⲈⲔϪⲢⲞϪ ⲈϤⲈϢⲰⲠⲒ ⲘⲠⲀⲒⲢⲎϮ.
19 ௧௯ அவன் விசுவாசத்திலே பலவீனமாக இருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்காமல் இருந்தான்.
ⲓ̅ⲑ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲈ ⲘⲠⲈϤϢⲰⲚⲒ ϦⲈⲚⲠⲒⲚⲀϨϮ ⲈⲀϤϮⲚⲒⲀⲦϤ ⲘⲠⲈϤⲤⲰⲘⲀ ⲀϤϪⲈⲘϤ ϨⲎⲆⲎ ⲀϤⲘⲞⲨ ⲀϤⲚϨⲢⲎⲒ ϦⲈⲚⲚⲀⲨ ⲢⲚⲢⲞⲘⲠⲒ ⲚⲈⲘ ϮⲔⲈⲘⲈⲦⲢⲈϤⲘⲰⲞⲨⲦ ⲚⲦⲈⲐⲘⲈⲦⲢⲀ ⲚⲤⲀⲢⲢⲀ.
20 ௨0 தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாகச் சந்தேகப்படாமல்,
ⲕ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲈ ⲘⲠⲈϤⲈⲢϨⲎⲦ ⲂϦⲈⲚ ⲞⲨⲘⲈⲦⲀⲐⲚⲀϨϮ ⲈⲠⲒⲰϢ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲀⲖⲖⲀ ⲀϤϪⲈⲘϪⲞⲘ ϦⲈⲚⲠⲒⲚⲀϨϮ ⲈⲀϤϮⲰⲞⲨ ⲘⲪⲚⲞⲨϮ.
21 ௨௧ தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்று முழுநிச்சயமாக நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவன் ஆனான்.
ⲕ̅ⲁ̅ⲞⲨⲞϨ ⲀⲠⲈϤϨⲎⲦ ⲐⲎⲦ ϪⲈ ⲪⲎ ⲈⲦⲀϤⲰϢ ⲘⲘⲞϤ ⲚⲀϤⲞⲨⲞⲚ ϢϪⲞⲘ ⲘⲘⲞϤ ⲈⲀⲒϤ.
22 ௨௨ எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
ⲕ̅ⲃ̅ⲈⲐⲂⲈ ⲪⲀⲒ ⲀⲨⲞⲠⲤ ⲚⲀϤ ⲈⲨⲘⲈⲐⲘⲎⲒ.
23 ௨௩ “அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது,” என்பது, அவனுக்காகமட்டும் இல்லை, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
ⲕ̅ⲅ̅ⲚⲈⲦⲀⲨⲤϦⲎⲞⲨⲦ ⲆⲈ ⲀⲚ ⲈⲐⲂⲎⲦϤ ⲘⲘⲀⲨⲀⲦϤ ϪⲈ ⲀⲨⲞⲠⲤ ⲚⲀϤ.
24 ௨௪ நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
ⲕ̅ⲇ̅ⲀⲖⲖⲀ ⲚⲈⲘ ⲈⲐⲂⲎⲦⲈⲚ ϨⲰⲚ ϦⲀ ⲚⲎ ⲈⲦⲀⲨⲞⲠⲤ ⲚⲰⲞⲨ ⲚⲎ ⲈⲐⲚⲀϨϮ ⲈⲪⲎ ⲈⲦⲀϤⲦⲞⲨⲚⲞⲤ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲠⲈⲚϬⲞⲒⲤ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲎ ⲈⲐⲘⲰⲞⲨⲦ
25 ௨௫ அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
ⲕ̅ⲉ̅ⲪⲎ ⲈⲦⲀⲨⲦⲎⲒϤ ⲈⲐⲂⲈ ⲚⲈⲚⲚⲞⲂⲒ ⲞⲨⲞϨ ⲀϤⲦⲰⲚϤ ⲈⲐⲂⲈ ⲠⲈⲚⲐⲘⲀⲒⲞ.

< ரோமர் 4 >