< ரோமர் 14 >
1 ௧ விசுவாசத்தில் பலவீனமாக உள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன சந்தேகங்களைக் குற்றமாக தீர்மானிக்காமல் இருங்கள்.
ਯੋ ਜਨੋ(ਅ)ਦ੍ਰੁʼਢਵਿਸ਼੍ਵਾਸਸ੍ਤੰ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸਙ੍ਗਿਨੰ ਕੁਰੁਤ ਕਿਨ੍ਤੁ ਸਨ੍ਦੇਹਵਿਚਾਰਾਰ੍ਥੰ ਨਹਿ|
2 ௨ ஒருவன் எந்த உணவுப்பொருளையும் சாப்பிடலாம் என்று நம்புகிறான்; பலவீனமாக உள்ளவனோ காய்கறிகளைமட்டும் சாப்பிடுகிறான்.
ਯਤੋ ਨਿਸ਼਼ਿੱਧੰ ਕਿਮਪਿ ਖਾਦ੍ਯਦ੍ਰਵ੍ਯੰ ਨਾਸ੍ਤਿ, ਕਸ੍ਯਚਿੱਜਨਸ੍ਯ ਪ੍ਰਤ੍ਯਯ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ੋ ਵਿਦ੍ਯਤੇ ਕਿਨ੍ਤ੍ਵਦ੍ਰੁʼਢਵਿਸ਼੍ਵਾਸਃ ਕਸ਼੍ਚਿਦਪਰੋ ਜਨਃ ਕੇਵਲੰ ਸ਼ਾਕੰ ਭੁਙ੍ਕ੍ਤੰ|
3 ௩ சாப்பிடுகிறவன் சாப்பிடாமல் இருக்கிறவனை அற்பமாக நினைக்காமல் இருக்கவேண்டும்; சாப்பிடாமல் இருக்கிறவனும் சாப்பிடுகிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காமல் இருக்கவேண்டும்; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.
ਤਰ੍ਹਿ ਯੋ ਜਨਃ ਸਾਧਾਰਣੰ ਦ੍ਰਵ੍ਯੰ ਭੁਙ੍ਕ੍ਤੇ ਸ ਵਿਸ਼ੇਸ਼਼ਦ੍ਰਵ੍ਯਭੋਕ੍ਤਾਰੰ ਨਾਵਜਾਨੀਯਾਤ੍ ਤਥਾ ਵਿਸ਼ੇਸ਼਼ਦ੍ਰਵ੍ਯਭੋਕ੍ਤਾਪਿ ਸਾਧਾਰਣਦ੍ਰਵ੍ਯਭੋਕ੍ਤਾਰੰ ਦੋਸ਼਼ਿਣੰ ਨ ਕੁਰ੍ੱਯਾਤ੍, ਯਸ੍ਮਾਦ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਤਮ੍ ਅਗ੍ਰੁʼਹ੍ਲਾਤ੍|
4 ௪ மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய முதலாளிக்கே அவன் பொறுப்பாளி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராக இருக்கிறாரே.
ਹੇ ਪਰਦਾਸਸ੍ਯ ਦੂਸ਼਼ਯਿਤਸ੍ਤ੍ਵੰ ਕਃ? ਨਿਜਪ੍ਰਭੋਃ ਸਮੀਪੇ ਤੇਨ ਪਦਸ੍ਥੇਨ ਪਦਚ੍ਯੁਤੇਨ ਵਾ ਭਵਿਤਵ੍ਯੰ ਸ ਚ ਪਦਸ੍ਥ ਏਵ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ ਯਤ ਈਸ਼੍ਵਰਸ੍ਤੰ ਪਦਸ੍ਥੰ ਕਰ੍ੱਤੁੰ ਸ਼ਕ੍ਨੋਤਿ|
5 ௫ அன்றியும், ஒருவன் ஒருநாளைவிட மற்றொரு நாள் சிறந்தது என்று நினைக்கிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சமமாக நினைக்கிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாக இருக்கட்டும்.
ਅਪਰਞ੍ਚ ਕਸ਼੍ਚਿੱਜਨੋ ਦਿਨਾਦ੍ ਦਿਨੰ ਵਿਸ਼ੇਸ਼਼ੰ ਮਨ੍ਯਤੇ ਕਸ਼੍ਚਿੱਤੁ ਸਰ੍ੱਵਾਣਿ ਦਿਨਾਨਿ ਸਮਾਨਾਨਿ ਮਨ੍ਯਤੇ, ਏਕੈਕੋ ਜਨਃ ਸ੍ਵੀਯਮਨਸਿ ਵਿਵਿਚ੍ਯ ਨਿਸ਼੍ਚਿਨੋਤੁ|
6 ௬ நாட்களை சிறப்பாக்கிக்கொள்கிறவன் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்கிறான்; நாட்களை சிறப்பாக்கிக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்ளாமல் இருக்கிறான். சாப்பிடுகிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று சாப்பிடுகிறான்; சாப்பிடாமல் இருக்கிறவனும் கர்த்தருக்கென்று சாப்பிடாமல், தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறான்.
ਯੋ ਜਨਃ ਕਿਞ੍ਚਨ ਦਿਨੰ ਵਿਸ਼ੇਸ਼਼ੰ ਮਨ੍ਯਤੇ ਸ ਪ੍ਰਭੁਭਕ੍ਤ੍ਯਾ ਤਨ੍ ਮਨ੍ਯਤੇ, ਯਸ਼੍ਚ ਜਨਃ ਕਿਮਪਿ ਦਿਨੰ ਵਿਸ਼ੇਸ਼਼ੰ ਨ ਮਨ੍ਯਤੇ ਸੋ(ਅ)ਪਿ ਪ੍ਰਭੁਭਕ੍ਤ੍ਯਾ ਤੰਨ ਮਨ੍ਯਤੇ; ਅਪਰਞ੍ਚ ਯਃ ਸਰ੍ੱਵਾਣਿ ਭਕ੍ਸ਼਼੍ਯਦ੍ਰਵ੍ਯਾਣਿ ਭੁਙ੍ਕ੍ਤੇ ਸ ਪ੍ਰਭੁਭਕ੍ਤਯਾ ਤਾਨਿ ਭੁਙ੍ਕ੍ਤੇ ਯਤਃ ਸ ਈਸ਼੍ਵਰੰ ਧਨ੍ਯੰ ਵਕ੍ਤਿ, ਯਸ਼੍ਚ ਨ ਭੁਙ੍ਕ੍ਤੇ ਸੋ(ਅ)ਪਿ ਪ੍ਰਭੁਭਕ੍ਤ੍ਯੈਵ ਨ ਭੁਞ੍ਜਾਨ ਈਸ਼੍ਵਰੰ ਧਨ੍ਯੰ ਬ੍ਰੂਤੇ|
7 ௭ நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதும் இல்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதும் இல்லை.
ਅਪਰਮ੍ ਅਸ੍ਮਾਕੰ ਕਸ਼੍ਚਿਤ੍ ਨਿਜਨਿਮਿੱਤੰ ਪ੍ਰਾਣਾਨ੍ ਧਾਰਯਤਿ ਨਿਜਨਿਮਿੱਤੰ ਮ੍ਰਿਯਤੇ ਵਾ ਤੰਨ;
8 ௮ நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; எனவே, பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாக இருக்கிறோம்.
ਕਿਨ੍ਤੁ ਯਦਿ ਵਯੰ ਪ੍ਰਾਣਾਨ੍ ਧਾਰਯਾਮਸ੍ਤਰ੍ਹਿ ਪ੍ਰਭੁਨਿਮਿੱਤੰ ਧਾਰਯਾਮਃ, ਯਦਿ ਚ ਪ੍ਰਾਣਾਨ੍ ਤ੍ਯਜਾਮਸ੍ਤਰ੍ਹ੍ਯਪਿ ਪ੍ਰਭੁਨਿਮਿੱਤੰ ਤ੍ਯਜਾਮਃ, ਅਤਏਵ ਜੀਵਨੇ ਮਰਣੇ ਵਾ ਵਯੰ ਪ੍ਰਭੋਰੇਵਾਸ੍ਮਹੇ|
9 ௯ கிறிஸ்துவும் மரித்தவர்களுக்கும், ஜீவனுள்ளவர்களுக்கும் ஆண்டவராக இருப்பதற்காக, மரித்தும், உயிரோடு எழுந்தும், பிழைத்தும் இருக்கிறார்.
ਯਤੋ ਜੀਵਨ੍ਤੋ ਮ੍ਰੁʼਤਾਸ਼੍ਚੇਤ੍ਯੁਭਯੇਸ਼਼ਾਂ ਲੋਕਾਨਾਂ ਪ੍ਰਭੁਤ੍ਵਪ੍ਰਾਪ੍ਤ੍ਯਰ੍ਥੰ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੋ ਮ੍ਰੁʼਤ ਉੱਥਿਤਃ ਪੁਨਰ੍ਜੀਵਿਤਸ਼੍ਚ|
10 ௧0 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளி என்று தீர்க்கிறது என்ன? நீ உன் சகோதரனை அற்பமாக நினைக்கிறது என்ன? நாமெல்லோரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.
ਕਿਨ੍ਤੁ ਤ੍ਵੰ ਨਿਜੰ ਭ੍ਰਾਤਰੰ ਕੁਤੋ ਦੂਸ਼਼ਯਸਿ? ਤਥਾ ਤ੍ਵੰ ਨਿਜੰ ਭ੍ਰਾਤਰੰ ਕੁਤਸ੍ਤੁੱਛੰ ਜਾਨਾਸਿ? ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਵਿਚਾਰਸਿੰਹਾਸਨਸ੍ਯ ਸੰਮੁਖੇ ਸਰ੍ੱਵੈਰਸ੍ਮਾਭਿਰੁਪਸ੍ਥਾਤਵ੍ਯੰ;
11 ௧௧ அப்படியே: “முழங்கால்கள் எல்லாம் எனக்கு முன்பாக முடங்கும், நாக்குகள் எல்லாம் தேவனை அறிக்கைப்பண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன்” என்பதாகக் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
ਯਾਦ੍ਰੁʼਸ਼ੰ ਲਿਖਿਤਮ੍ ਆਸ੍ਤੇ, ਪਰੇਸ਼ਃ ਸ਼ਪਥੰ ਕੁਰ੍ੱਵਨ੍ ਵਾਕ੍ਯਮੇਤਤ੍ ਪੁਰਾਵਦਤ੍| ਸਰ੍ੱਵੋ ਜਨਃ ਸਮੀਪੇ ਮੇ ਜਾਨੁਪਾਤੰ ਕਰਿਸ਼਼੍ਯਤਿ| ਜਿਹ੍ਵੈਕੈਕਾ ਤਥੇਸ਼ਸ੍ਯ ਨਿਘ੍ਨਤ੍ਵੰ ਸ੍ਵੀਕਰਿਸ਼਼੍ਯਤਿ|
12 ௧௨ எனவே, நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கு ஒப்புவிப்பான்.
ਅਤਏਵ ਈਸ਼੍ਵਰਸਮੀਪੇ(ਅ)ਸ੍ਮਾਕਮ੍ ਏਕੈਕਜਨੇਨ ਨਿਜਾ ਕਥਾ ਕਥਯਿਤਵ੍ਯਾ|
13 ௧௩ இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகள் என்று தீர்க்காமல் இருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடையையும் இடறலையும் போடக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
ਇੱਥੰ ਸਤਿ ਵਯਮ੍ ਅਦ੍ਯਾਰਭ੍ਯ ਪਰਸ੍ਪਰੰ ਨ ਦੂਸ਼਼ਯਨ੍ਤਃ ਸ੍ਵਭ੍ਰਾਤੁ ਰ੍ਵਿਘ੍ਨੋ ਵ੍ਯਾਘਾਤੋ ਵਾ ਯੰਨ ਜਾਯੇਤ ਤਾਦ੍ਰੁʼਸ਼ੀਮੀਹਾਂ ਕੁਰ੍ੰਮਹੇ|
14 ௧௪ எந்தப்பொருளும் தன்னில்தானே தீட்டானவைகள் இல்லை என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டானது என்று நினைக்கிறவன் எவனோ அவனுக்கு அது தீட்டானதாக இருக்கும்.
ਕਿਮਪਿ ਵਸ੍ਤੁ ਸ੍ਵਭਾਵਤੋ ਨਾਸ਼ੁਚਿ ਭਵਤੀਤ੍ਯਹੰ ਜਾਨੇ ਤਥਾ ਪ੍ਰਭੁਨਾ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟੇਨਾਪਿ ਨਿਸ਼੍ਚਿਤੰ ਜਾਨੇ, ਕਿਨ੍ਤੁ ਯੋ ਜਨੋ ਯਦ੍ ਦ੍ਰਵ੍ਯਮ੍ ਅਪਵਿਤ੍ਰੰ ਜਾਨੀਤੇ ਤਸ੍ਯ ਕ੍ਰੁʼਤੇ ਤਦ੍ ਅਪਵਿਤ੍ਰਮ੍ ਆਸ੍ਤੇ|
15 ௧௫ ஆகாரத்தினாலே உன் சகோதரனுக்கு விசனம் உண்டாக்கினால், நீ அன்பாக நடக்கிறவன் இல்லை; அவனை உன் ஆகாரத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.
ਅਤਏਵ ਤਵ ਭਕ੍ਸ਼਼੍ਯਦ੍ਰਵ੍ਯੇਣ ਤਵ ਭ੍ਰਾਤਾ ਸ਼ੋਕਾਨ੍ਵਿਤੋ ਭਵਤਿ ਤਰ੍ਹਿ ਤ੍ਵੰ ਭ੍ਰਾਤਰੰ ਪ੍ਰਤਿ ਪ੍ਰੇਮ੍ਨਾ ਨਾਚਰਸਿ| ਖ੍ਰੀਸ਼਼੍ਟੋ ਯਸ੍ਯ ਕ੍ਰੁʼਤੇ ਸ੍ਵਪ੍ਰਾਣਾਨ੍ ਵ੍ਯਯਿਤਵਾਨ੍ ਤ੍ਵੰ ਨਿਜੇਨ ਭਕ੍ਸ਼਼੍ਯਦ੍ਰਵ੍ਯੇਣ ਤੰ ਨ ਨਾਸ਼ਯ|
16 ௧௬ உங்களுடைய நல்ல செயல்கள் அவமதிக்கப்பட இடங்கொடுக்காமல் இருங்கள்.
ਅਪਰੰ ਯੁਸ਼਼੍ਮਾਕਮ੍ ਉੱਤਮੰ ਕਰ੍ੰਮ ਨਿਨ੍ਦਿਤੰ ਨ ਭਵਤੁ|
17 ௧௭ தேவனுடைய ராஜ்யம் சாப்பிடுவதும் குடிப்பதும் இல்லை, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியானவரால் உண்டாகும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
ਭਕ੍ਸ਼਼੍ਯੰ ਪੇਯਞ੍ਚੇਸ਼੍ਵਰਰਾਜ੍ਯਸ੍ਯ ਸਾਰੋ ਨਹਿ, ਕਿਨ੍ਤੁ ਪੁਣ੍ਯੰ ਸ਼ਾਨ੍ਤਿਸ਼੍ਚ ਪਵਿਤ੍ਰੇਣਾਤ੍ਮਨਾ ਜਾਤ ਆਨਨ੍ਦਸ਼੍ਚ|
18 ௧௮ இவைகளிலே கிறிஸ்துவிற்கு ஊழியம் செய்கிறவன் தேவனுக்குப் பிரியமானவனும் மனிதனால் அங்கீகரிக்கப்பட்டவனுமாக இருக்கிறான்.
ਏਤੈ ਰ੍ਯੋ ਜਨਃ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੰ ਸੇਵਤੇ, ਸ ਏਵੇਸ਼੍ਵਰਸ੍ਯ ਤੁਸ਼਼੍ਟਿਕਰੋ ਮਨੁਸ਼਼੍ਯੈਸ਼੍ਚ ਸੁਖ੍ਯਾਤਃ|
19 ௧௯ எனவே, சமாதானத்திற்குரியவைகளையும், ஐக்கிய பக்திவளர்ச்சியை உண்டாக்கக்கூடியவைகளையும் நாடுவோம்.
ਅਤਏਵ ਯੇਨਾਸ੍ਮਾਕੰ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਪਰਸ੍ਪਰਮ੍ ਐਕ੍ਯੰ ਨਿਸ਼਼੍ਠਾ ਚ ਜਾਯਤੇ ਤਦੇਵਾਸ੍ਮਾਭਿ ਰ੍ਯਤਿਤਵ੍ਯੰ|
20 ௨0 ஆகாரத்திற்காக தேவனுடைய செயல்களை அழித்துப்போடாதே. எந்த உணவுப்பொருளும் சுத்தமானதுதான்; ஆனாலும் இடறல் உண்டாகச் சாப்பிடுகிறவனுக்கு அது தீமையாக இருக்கும்.
ਭਕ੍ਸ਼਼੍ਯਾਰ੍ਥਮ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਕਰ੍ੰਮਣੋ ਹਾਨਿੰ ਮਾ ਜਨਯਤ; ਸਰ੍ੱਵੰ ਵਸ੍ਤੁ ਪਵਿਤ੍ਰਮਿਤਿ ਸਤ੍ਯੰ ਤਥਾਪਿ ਯੋ ਜਨੋ ਯਦ੍ ਭੁਕ੍ਤ੍ਵਾ ਵਿਘ੍ਨੰ ਲਭਤੇ ਤਦਰ੍ਥੰ ਤਦ੍ ਭਦ੍ਰੰ ਨਹਿ|
21 ௨௧ இறைச்சி சாப்பிடுவதும், மதுபானம் அருந்துகிறதும், வேறு எதையாவது செய்கிறதும், உன் சகோதரன் இடறுவதற்கோ, தவறுவதற்கோ, பலவீனப்படுகிறதற்கோ காரணமாக இருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமல் இருப்பதே நன்மையாக இருக்கும்.
ਤਵ ਮਾਂਸਭਕ੍ਸ਼਼ਣਸੁਰਾਪਾਨਾਦਿਭਿਃ ਕ੍ਰਿਯਾਭਿ ਰ੍ਯਦਿ ਤਵ ਭ੍ਰਾਤੁਃ ਪਾਦਸ੍ਖਲਨੰ ਵਿਘ੍ਨੋ ਵਾ ਚਾਞ੍ਚਲ੍ਯੰ ਵਾ ਜਾਯਤੇ ਤਰ੍ਹਿ ਤਦ੍ਭੋਜਨਪਾਨਯੋਸ੍ਤ੍ਯਾਗੋ ਭਦ੍ਰਃ|
22 ௨௨ உனக்கு விசுவாசம் இருந்தால் அது தேவனுக்குமுன்பாக உனக்குள்மட்டும் இருக்கட்டும். நல்லது என்று நிச்சயித்த விஷயத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்.
ਯਦਿ ਤਵ ਪ੍ਰਤ੍ਯਯਸ੍ਤਿਸ਼਼੍ਠਤਿ ਤਰ੍ਹੀਸ਼੍ਵਰਸ੍ਯ ਗੋਚਰੇ ਸ੍ਵਾਨ੍ਤਰੇ ਤੰ ਗੋਪਯ; ਯੋ ਜਨਃ ਸ੍ਵਮਤੇਨ ਸ੍ਵੰ ਦੋਸ਼਼ਿਣੰ ਨ ਕਰੋਤਿ ਸ ਏਵ ਧਨ੍ਯਃ|
23 ௨௩ ஒருவன் சந்தேகத்துடன் சாப்பிட்டால், அவன் விசுவாசம் இல்லாமல் சாப்பிடுகிறதினால், தண்டனைக்குரியவனாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத எதுவும் பாவமே.
ਕਿਨ੍ਤੁ ਯਃ ਕਸ਼੍ਚਿਤ੍ ਸੰਸ਼ੱਯ ਭੁਙ੍ਕ੍ਤੇ(ਅ)ਰ੍ਥਾਤ੍ ਨ ਪ੍ਰਤੀਤ੍ਯ ਭੁਙ੍ਕ੍ਤੇ, ਸ ਏਵਾਵਸ਼੍ਯੰ ਦਣ੍ਡਾਰ੍ਹੋ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ, ਯਤੋ ਯਤ੍ ਪ੍ਰਤ੍ਯਯਜੰ ਨਹਿ ਤਦੇਵ ਪਾਪਮਯੰ ਭਵਤਿ|