< ரோமர் 11 >
1 ௧ இப்படியிருக்க, தேவன் தம்முடைய மக்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் வம்சத்திலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.
La man toki, Kwam ko ko nubo loca? mani a mati nyo. Wori mõ keneu, man Ba-Icraile, naniyak Ibraimek tuwe luwe Bilyaminu.
2 ௨ தேவன், தாம் முன்குறித்துக்கொண்ட தம்முடைய மக்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை தெரியாமல் இருக்கிறீர்களா? அவன் தேவனைப் பார்த்து:
Kwama kobo nubo lo ceu wo ki kaba ca nyimo meu. La kom nyombo dike bifumero toki dor Iliyare, kambo co yaki kiyane Icraila kabum Kwama meu.
3 ௩ கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மட்டும் மீதியாக இருக்கிறேன், என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு எதிராக விண்ணப்பம் செய்தபோது,
“Teeluwe, cii twalangum nob dukumeb mwebo, ciin bubam fiye wabe meu, miki kwami ma kume, la cii do dumeti.
4 ௪ அவனுக்கு உண்டான தேவனுடைய பதில் என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
La Kwama kar cinen kiye? Min wiki nubo bi kate niber buro cung bo Ba'al nin cngeu.”
5 ௫ அதுபோல இந்தக்காலத்திலும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாக இருக்கிறது.
Kebo nyori na weu kum kangembo wi buro ma cokkeu ker cokka lumau.
6 ௬ அது கிருபையினாலே உண்டாயிருந்தால் செயல்களினாலே உண்டாயிருக்காது; அப்படியில்லை என்றால், கிருபையானது கிருபை இல்லையே. அன்றியும் அது செயல்களினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாக இருக்காது; அப்படியில்லை என்றால் செய்கையானது செய்கை இல்லையே.
La naki luma, kebo ki nangen tak, na kebo nyorri luma mani a yila luma ti tak.
7 ௭ அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமல் இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றைய நாள்வரை கடினப்பட்டிருக்கிறார்கள்.
Lan ye tak? Dike Icraila do tiyeu cii fiyabo, la nubo cok-cokeu ciin fiya co, tangnumbo kwamum ner cero.
8 ௮ தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது.
La nawo mulangum mulangeu, Kwama neci yuwa tangbe bwini nyomka. nuwe tini wo la nacia tore fiye, tu'u niu wo la mani ci a nuwati, yau ciko diye wo.
9 ௯ அன்றியும், “அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும், கண்ணியும், இடறுதற்கான கல்லும், பதிலுக்குப்பதில் கொடுப்பதுமாக இருக்கட்டும்;
Dauda ki, “Bntilen cero ayilam biliyar, kange ciito, ayilam ter kwaka nāak kange cokka cunek.
10 ௧0 பார்க்காதபடிக்கு அவர்களுடைய கண்கள் இருள் அடையட்டும்; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும்” என்று தாவீதும் சொல்லியிருக்கிறான்.
La nuwe ce a fikongum kume naci tore. tarye ceu a kuro kure diri.
11 ௧௧ இப்படியிருக்க, விழுந்துபோவதற்காகவா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படி இல்லையே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்புவதற்காக அவர்களுடைய தவறுதலினாலே யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு கிடைத்தது.
La man toki, cii kottang kottang naci yari ka? Diker nawo a bwire. La nyeu, yila ka bwiye ko cii yilau, yila fulokako bou nubo kumtacili nin, na dok cii maka korek.
12 ௧௨ அவர்களுடைய தவறு உலகத்திற்கு செல்வமும், அவர்களுடைய குறைவு யூதரல்லாத மக்களுக்கு செல்வமாகவும் இருக்க அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாக அப்படியிருக்கும்.
No yila ka bwiyeko cii yilam cweka dorbitiner di, la yare ciyeu cuweka nubo kumtaili yeu, la duwi ka ceko ba cuwa nyi, no ci bou takka ri?
13 ௧௩ யூதரல்லாத மக்களாகிய உங்களோடு பேசுகிறேன்; யூதரல்லாத மக்களுக்கு நான் அப்போஸ்தலனாக இருக்கிறதினாலே, என் இனத்தார்களுக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று,
Naweu maki tok kero kange kom nubo kumtaciliyeu, wori man nii tomange nubo kumtaciliyeu, maki maka bwik mor nangene miu.
14 ௧௪ என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.
Man mani kangeri an dok keb mibbo kor, na nyo cek kange.
15 ௧௫ அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாக இருக்க, அவர்களை அங்கீகரித்துக்கொள்ளுதல் எப்படி இருக்கும்? மரித்தோருக்கு ஜீவன் உண்டானதுபோல இருக்கும் அல்லவோ?
No koka ciyeko bouki ywelkangka dor bitinero nin di, yoka ciyeko la a yila nyi, ayila dume fiye bwaro nine.
16 ௧௬ மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாக இருந்தால், பிசைந்த மாவு முழுவதும் பரிசுத்தமாக இருக்கும்; வேரானது பரிசுத்தமாக இருந்தால், கிளைகளும் பரிசுத்தமாக இருக்கும்.
No bituttui wucak ri, nyo mimbo fuu ri kumeu, no nuti to wucak ri, nyo katini ceu ken.
17 ௧௭ சில கிளைகள் முறித்துப் போடப்பட்டிருக்க, காட்டு ஒலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும், சாரத்திற்கும் உடன்பங்காளியாக இருந்தால்,
La no kange kangni tiyeu kangembo kiya rangum di, na kom, ƙani jeitune ken di, wo ci bwabti more ciyeu, la kom ki kwali kange ci, mor ti jeitune co.
18 ௧௮ நீ அந்தக் கிளைகளுக்கு எதிராகப் பெருமைப்படாதே; பெருமைப்பட்டால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறது என்று நினைத்துக்கொள்.
Kom mare bi tē nam dor kanitini nin. La no kom ma bitenam di, kebo kom ko ne niye bikwan tiye, la niye nekom bikwan tiye.
19 ௧௯ நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டது என்று சொல்லுகிறாயே.
Mwan toki moki, “cin kim kangko nan bwab tiye mor.
20 ௨0 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப் போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாக இல்லாமல் பயந்திரு.
Wuro bilenker, ki bwini bilenker ciyero cin kim cii wi kanko nin, la mo, tim ki bikwan mor bilen kerer kumebo nin, ko ture dor kumero na kange diker, la ko nuwa tai.
21 ௨௧ சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாமல் இருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாக இரு.
Lano Kwama dobbo kani kendo ri, mani a dobkom ti.
22 ௨௨ எனவே, தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடம் கண்டிப்பையும், உன்னிடத்தில் தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருந்தால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைக்காவிட்டால் நீயும் வெட்டப்பட்டுப் போவாய்.
Ko to, nangen kange dotange Kwama wo ki dimeneu, ki kangko wineu tak, dotangeu ki bou dor Yahudawa buro yaru meu. La ki kangko wineu, cini Kwama bou monen, no ko ca kaba mor luma ce ri. La no mo kori, an tom nen.
23 ௨௩ அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மீண்டும் ஒட்டவைக்கிறதற்கு தேவன் வல்லவராக இருக்கிறாரே.
La nyo, na cii yi bo mor bwini bilenker ciyero ri, a yila ken ki cii bwi tini. Wori Kwama an yila ken kici tak.
24 ௨௪ சுபாவத்தின்படி காட்டு ஒலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு எதிராக நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்களுடைய சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?
No cin mwatu nen jigindo wo kiye nin, ri cin mwer kang nen kange tii jigindo luwe ri, la a ma nyi na Yahudawa wo cii kani kwattiyeu, a yilauti ki cii tak mor tii jigin ciyere?
25 ௨௫ மேலும், சகோதரர்களே, நீங்கள் உங்களையே புத்திமான்கள் என்று நினைக்காதபடி ஒரு இரகசியத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்; அது என்னவென்றால், யூதரல்லாத மக்களுடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பகுதி மக்களுக்கு கடினமான மனது உண்டாயிருக்கும்.
Keb mibbo, ma cwibo kom yi mor kumtacili, dor yur kero wuro, kati yilo ki yilam ki yulan mor nere kime. Yur kere wo co kwamka duwek ko kebo nawo diriyeu mani Icraila, nimde nubo kumtacili ou more ce.
26 ௨௬ இப்படியே இஸ்ரவேல் மக்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். “மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு நீக்குவார் என்றும்;
Nyo Icraila gwam ciyan fiya fuloka, nawo mulangum mulangeu: “Mor ciyona nii cēr kako an ceru. Can an nyinangum bwini cak-cakeu Yakubu nin,
27 ௨௭ நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கை” என்றும் எழுதியிருக்கிறது.
Wo an yilam nor mir kange cii kambo ma tum bwiran ker ciyereu.
28 ௨௮ நற்செய்தியைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைவர்களாக இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் முற்பிதாக்களினிமித்தம் நேசிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
Cunga ko kange, ker fulen kerero, cii nob kiyeb nyi kom. Ki cungako kange ki cok ka Kwamak, nubo ca cwi cwiye ker teb ciyeb.
29 ௨௯ தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
Wori nēka Kwamak, kange bi cor Kwama, mani fulonger.
30 ௩0 எனவே, நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல,
La kom ken no mani kom ne Kwama dur, la naweu, kom fiya cire duwe ker bwini neka durek ciyek.
31 ௩௧ அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம்பெறுவார்கள்.
Ki nure wo tak keu, Yahudawa buro mani ne dur. Ki cire duwe ci nung kumeneu, naweu nacii yo cire duwe ken.
32 ௩௨ எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். (eleēsē )
Wori Kwama nungum nubo gwam mor bwini neka durek, na ci nung cire duwe dor nubo gwam. (eleēsē )
33 ௩௩ ஆ! தேவனுடைய செல்வம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாக இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளந்துபார்க்க முடியாதவைகள், அவருடைய வழிகள் ஆராய்ந்துபார்க்க முடியாதவைகள்!
Cuwaka cuweka yilen kange nyoka Kwama! Warka bolangek ceko cum bi kwan fuwaka, nure ce cum kabum nyomkam.
34 ௩௪ “கர்த்தருடைய சிந்தையைத் தெரிந்துகொண்டவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்?
We nyumom dike co kwati nercere kaka we yilam nii kiye kerti kange ce?
35 ௩௫ தனக்குத் திரும்பக்கிடைக்கும் என்று முதலில் அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?”
Kaka we ter neka kwamak dike kange, wo tam nyo Kwama yāa co nan do ce?”
36 ௩௬ எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
La fiye co wiye kange morce, dikero gwam ceruwe na yilaken cinen. Cinen duktangka diri. Ati nyo. (aiōn )