< வெளிப்படுத்தின விசேஷம் 7 >
1 ௧ இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலோ, கடலின்மேலோ, ஒரு மரத்தின்மேலோ காற்று அடிக்காதபடி பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருப்பதைப் பார்த்தேன்.
Tukun ma inge nga liye lipufan akosr elos tu ke sruwasrik akosr lun faclu, ac elos sruokya eng akosr lun faclu, tuh in wangin eng fah tuhtuh fin faclu, ku fin meoa, ku nu ke kutena sak.
2 ௨ ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலை வைத்திருந்த வேறொரு தூதன் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து ஏறிவருவதைப் பார்த்தேன்; அவன், பூமியையும் கடலையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி:
Ac nga liye sie pac lipufan tuku kutulap me, us sil se lun God moul. El wowoyak ke pusra lulap in pangon lipufan akosr su God El sang ku nu selos in kunausla faclu ac meoa.
3 ௩ நாம் நமது தேவனுடைய ஊழியக்காரர்களின் நெற்றிகளில் முத்திரைப் போடும்வரைக்கும் பூமியையும் கடலையும் மரங்களையும் சேதப்படுத்தாமல் இருங்கள் என்று அதிக சத்தமாகச் சொன்னான்.
Lipufan sac fahk, “Nimet kunausla faclu, ku meoa, ku sak uh, nwe ke kut akilenya mwet kulansap lun God lasr ke sie sil fin motonsrolos.”
4 ௪ முத்திரைபோடப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சொல்வதைக்கேட்டேன்; இஸ்ரவேல் மக்களுடைய எல்லாக் கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர்.
Ac nga lohng lah pisalos su akilenyuki ke sil lun God fin motonsrolos, oasr siofok angngaul akosr tausin. Mwet inge ma ke sruf singoul luo lun Israel.
5 ௫ யூதாகோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
Sin sruf lal Judah: siliyuki singoul luo tausin; sin sruf lal Reuben: singoul luo tausin; sin sruf lal Gad: singoul luo tausin;
6 ௬ ஆசேர் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
sin sruf lal Asher: singoul luo tausin; sin sruf lal Naphtali: singoul luo tausin; sin sruf lal Manasseh: singoul luo tausin;
7 ௭ சிமியோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
sin sruf lal Simeon: singoul luo tausin; sin sruf lal Levi: singoul luo tausin; sin sruf lal Issachar: singoul luo tausin;
8 ௮ செபுலோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
sin sruf lal Zebulun: singoul luo tausin; sin sruf lal Joseph: singoul luo tausin; ac sin sruf lal Benjamin: singoul luo tausin.
9 ௯ இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, எல்லாத் தேசங்களிலும் கோத்திரங்களிலும் மக்களிலும் மொழிக்காரர்களிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணிப்பார்க்க முடியாத திரளான மக்கள்கூட்டம், வெள்ளை அங்கிகளை அணிந்து, தங்களுடைய கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பதைக் கண்டேன்.
Tukun ma inge, nga ngetak ac liye u na lulap se, su wangin mwet ku in oakla pisalos. Elos ma ke kain in mwet nukewa, ke sruf nukewa, ke mutunfacl nukewa, ac ke kain in kas nukewa, ac elos tu ye mutun tron ac ye mutun Lamb, nuknukyang ke nuknuk fasrfasr ac elos sruok lesak palm in paolos.
10 ௧0 அவர்கள் அதிக சத்தமாக: இரட்சிப்பு, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்களுடைய தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரியது என்று ஆர்ப்பரித்தார்கள்.
Elos wowoyak ke pusra lulap ac fahk, “Molela tuku sin God lasr su muta fin tron, ac sin Lamb.”
11 ௧௧ தூதர்கள் எல்லோரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சுற்றிநின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:
Ac lipufan nukewa tu raunela tron ac mwet elder ac ma moul akosr ah. Na elos faksufi ye mutun tron, ac alu nu sin God
12 ௧௨ ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (aiōn )
ac fahk, “Amen! Kaksak, wolana, lalmwetmet, sang kulo, sunak, wal fulat, ac kulana ma lun God lasr ma pahtpat ac ma pahtpat! Amen!” (aiōn )
13 ௧௩ அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: வெள்ளை அங்கிகளை அணிந்திருக்கிற இவர்கள் யார்? எங்கே இருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
Ac sie sin mwet elder uh siyuk sik, “Su mwet ma nukum nuknuk fasrfasr inge, ac elos tuku oya me?”
14 ௧௪ அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் அதிக உபத்திரவத்தில் இருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்களுடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே நனைத்து வெண்மையாக்கிக்கொண்டவர்கள்.
Ac nga fahk nu sel, “Nga nikin. Kom pa etu.” Ac el fahk nu sik, “Elos inge pa mwet su painmoulla ke pacl in akkeok lulap. Elos ohlla nuknuk lalos ac akfasrfasrye ke srahn Lamb.
15 ௧௫ எனவே, இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை ஆராதிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களோடு இருந்து பாதுகாப்பார்.
Ke sripa se inge elos tu ye mutun tron lun God ac kulansupal in tempul ke len ac fong. El su muta fin tron el fah muta yorolos ac karinganulos.
16 ௧௬ இவர்கள் இனிப் பசியடைவதும் இல்லை, இனித் தாகமடைவதும் இல்லை; வெயிலோ, வெப்பமோ இவர்கள்மேல் படுவதும் இல்லை.
Elos fah tia sifil masrinsral ku malu; ac faht uh, ku kutena fol upa, ac tia sifil akfolyalos,
17 ௧௭ சிங்காசனத்தின் நடுவில் இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்றுகளுக்கு நடத்திக்கொண்டு போவார்; தேவனே இவர்களுடைய கண்ணீர் எல்லாவற்றையும் துடைப்பார்” என்றான்.
ke sripen Lamb, su muta infulwen tron, el ac fah mwet shepherd lalos, ac el ac fah kololos nu ke unon in kof in moul. Ac God El ac fah eela sroninmutalos.