< வெளிப்படுத்தின விசேஷம் 6 >
1 ௧ ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னைப் பார்த்து: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போல சத்தமாகச் சொல்வதைக்கேட்டேன்.
ଅନନ୍ତରଂ ମଯି ନିରୀକ୍ଷମାଣେ ମେଷଶାୱକେନ ତାସାଂ ସପ୍ତମୁଦ୍ରାଣାମ୍ ଏକା ମୁଦ୍ରା ମୁକ୍ତା ତତସ୍ତେଷାଂ ଚତୁର୍ଣାମ୍ ଏକସ୍ୟ ପ୍ରାଣିନ ଆଗତ୍ୟ ପଶ୍ୟେତିୱାଚକୋ ମେଘଗର୍ଜନତୁଲ୍ୟୋ ରୱୋ ମଯା ଶ୍ରୁତଃ|
2 ௨ நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.
ତତଃ ପରମ୍ ଏକଃ ଶୁକ୍ଲାଶ୍ଚୋ ଦୃଷ୍ଟଃ, ତଦାରୂଢୋ ଜନୋ ଧନୁ ର୍ଧାରଯତି ତସ୍ମୈ ଚ କିରୀଟମେକମ୍ ଅଦାଯି ତତଃ ସ ପ୍ରଭୱନ୍ ପ୍ରଭୱିଷ୍ୟଂଶ୍ଚ ନିର୍ଗତୱାନ୍|
3 ௩ அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லக்கேட்டேன்.
ଅପରଂ ଦ୍ୱିତୀଯମୁଦ୍ରାଯାଂ ତେନ ମୋଚିତାଯାଂ ଦ୍ୱିତୀଯସ୍ୟ ପ୍ରାଣିନ ଆଗତ୍ୟ ପଶ୍ୟେତି ୱାକ୍ ମଯା ଶ୍ରୁତା|
4 ௪ அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்வதற்காகச் சமாதானத்தை பூமியிலிருந்து எடுத்துப்போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய வாளும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
ତତୋ ଽରୁଣୱର୍ଣୋ ଽପର ଏକୋ ଽଶ୍ୱୋ ନିର୍ଗତୱାନ୍ ତଦାରୋହିଣି ପୃଥିୱୀତଃ ଶାନ୍ତ୍ୟପହରଣସ୍ୟ ଲୋକାନାଂ ମଧ୍ୟେ ପରସ୍ପରଂ ପ୍ରତିଘାତୋତ୍ପାଦନସ୍ୟ ଚ ସାମର୍ଥ୍ୟଂ ସମର୍ପିତମ୍, ଏକୋ ବୃହତ୍ଖଙ୍ଗୋ ଽପି ତସ୍ମା ଅଦାଯି|
5 ௫ அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்வதைக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.
ଅପରଂ ତୃତୀଯମୁଦ୍ରାଯାଂ ତନ ମୋଚିତାଯାଂ ତୃତୀଯସ୍ୟ ପ୍ରାଣିନ ଆଗତ୍ୟ ପଶ୍ୟେତି ୱାକ୍ ମଯା ଶ୍ରୁତା, ତତଃ କାଲୱର୍ଣ ଏକୋ ଽଶ୍ୱୋ ମଯା ଦୃଷ୍ଟଃ, ତଦାରୋହିଣୋ ହସ୍ତେ ତୁଲା ତିଷ୍ଠତି
6 ௬ அப்பொழுது, ஒரு வெள்ளிக்காசுக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு வெள்ளிக்காசுக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சைரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.
ଅନନ୍ତରଂ ପ୍ରାଣିଚତୁଷ୍ଟଯସ୍ୟ ମଧ୍ୟାଦ୍ ୱାଗିଯଂ ଶ୍ରୁତା ଗୋଧୂମାନାମେକଃ ସେଟକୋ ମୁଦ୍ରାପାଦୈକମୂଲ୍ୟଃ, ଯୱାନାଞ୍ଚ ସେଟକତ୍ରଯଂ ମୁଦ୍ରାପାଦୈକମୂଲ୍ୟଂ ତୈଲଦ୍ରାକ୍ଷାରସାଶ୍ଚ ତ୍ୱଯା ମା ହିଂସିତୱ୍ୟାଃ|
7 ௭ அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன்.
ଅନନ୍ତରଂ ଚତୁର୍ଥମୁଦ୍ରାଯାଂ ତେନ ମୋଚିତାଯାଂ ଚତୁର୍ଥସ୍ୟ ପ୍ରାଣିନ ଆଗତ୍ୟ ପଶ୍ୟେତି ୱାକ୍ ମଯା ଶ୍ରୁତା|
8 ௮ நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs )
ତତଃ ପାଣ୍ଡୁରୱର୍ଣ ଏକୋ ଽଶ୍ୱୋ ମଯା ଦୃଷ୍ଟଃ, ତଦାରୋହିଣୋ ନାମ ମୃତ୍ୟୁରିତି ପରଲୋକଶ୍ଚ ତମ୍ ଅନୁଚରତି ଖଙ୍ଗେନ ଦୁର୍ଭିକ୍ଷେଣ ମହାମାର୍ୟ୍ୟା ୱନ୍ୟପଶୁଭିଶ୍ଚ ଲୋକାନାଂ ବଧାଯ ପୃଥିୱ୍ୟାଶ୍ଚତୁର୍ଥାଂଶସ୍ୟାଧିପତ୍ୟଂ ତସ୍ମା ଅଦାଯି| (Hadēs )
9 ௯ அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினாலும் தாங்கள் கொடுத்த சாட்சியினாலும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழேப் பார்த்தேன்.
ଅନନ୍ତରଂ ପଞ୍ଚମମୁଦ୍ରାଯାଂ ତେନ ମୋଚିତାଯାମ୍ ଈଶ୍ୱରୱାକ୍ୟହେତୋସ୍ତତ୍ର ସାକ୍ଷ୍ୟଦାନାଚ୍ଚ ଛେଦିତାନାଂ ଲୋକାନାଂ ଦେହିନୋ ୱେଦ୍ୟା ଅଧୋ ମଯାଦୃଶ୍ୟନ୍ତ|
10 ௧0 அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமும் உள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடம் எங்களுடைய இரத்தத்தைக்குறித்து எவ்வளவு காலங்கள் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று அதிக சத்தமாகக் கேட்டார்கள்.
ତ ଉଚ୍ଚୈରିଦଂ ଗଦନ୍ତି, ହେ ପୱିତ୍ର ସତ୍ୟମଯ ପ୍ରଭୋ ଅସ୍ମାକଂ ରକ୍ତପାତେ ପୃଥିୱୀନିୱାସିଭି ର୍ୱିୱଦିତୁଂ ତସ୍ୟ ଫଲ ଦାତୁଞ୍ଚ କତି କାଲଂ ୱିଲମ୍ବସେ?
11 ௧௧ அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்களுடைய உடன்பணியாளர்களும் தங்களுடைய சகோதரர்களுமானவர்களின் எண்ணிக்கை நிறைவாகும்வரை இன்னும் கொஞ்சக்காலம் காத்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
ତତସ୍ତେଷାମ୍ ଏକୈକସ୍ମୈ ଶୁଭ୍ରଃ ପରିଚ୍ଛଦୋ ଽଦାଯି ୱାଗିଯଞ୍ଚାକଥ୍ୟତ ଯୂଯମଲ୍ପକାଲମ୍ ଅର୍ଥତୋ ଯୁଷ୍ମାକଂ ଯେ ସହାଦାସା ଭ୍ରାତରୋ ଯୂଯମିୱ ଘାନିଷ୍ୟନ୍ତେ ତେଷାଂ ସଂଖ୍ୟା ଯାୱତ୍ ସମ୍ପୂର୍ଣତାଂ ନ ଗଚ୍ଛତି ତାୱଦ୍ ୱିରମତ|
12 ௧௨ அவர் ஆறாம் முத்திரையை உடைப்பதைப் பார்த்தேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கருப்புக் கம்பளியைப்போலக் கருத்துப்போனது; சந்திரன் இரத்தம்போல ஆனது.
ଅନନ୍ତରଂ ଯଦା ସ ଷଷ୍ଠମୁଦ୍ରାମମୋଚଯତ୍ ତଦା ମଯି ନିରୀକ୍ଷମାଣେ ମହାନ୍ ଭୂକମ୍ପୋ ଽଭୱତ୍ ସୂର୍ୟ୍ୟଶ୍ଚ ଉଷ୍ଟ୍ରଲୋମଜୱସ୍ତ୍ରୱତ୍ କୃଷ୍ଣୱର୍ଣଶ୍ଚନ୍ଦ୍ରମାଶ୍ଚ ରକ୍ତସଙ୍କାଶୋ ଽଭୱତ୍
13 ௧௩ அத்திமரம் பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.
ଗଗନସ୍ଥତାରାଶ୍ଚ ପ୍ରବଲୱାଯୁନା ଚାଲିତାଦ୍ ଉଡୁମ୍ବରୱୃକ୍ଷାତ୍ ନିପାତିତାନ୍ୟପକ୍କଫଲାନୀୱ ଭୂତଲେ ନ୍ୟପତନ୍|
14 ௧௪ வானமும் சுருட்டப்பட்ட புத்தகம்போல விலகிப்போனது; மலைகள் தீவுகள் எல்லாம் தங்களுடைய இடங்களைவிட்டு விலகிச்சென்றன.
ଆକାଶମଣ୍ଡଲଞ୍ଚ ସଙ୍କୁଚ୍ୟମାନଗ୍ରନ୍ଥଇୱାନ୍ତର୍ଧାନମ୍ ଅଗମତ୍ ଗିରଯ ଉପଦ୍ୱୀପାଶ୍ଚ ସର୍ୱ୍ୱେ ସ୍ଥାନାନ୍ତରଂ ଚାଲିତାଃ
15 ௧௫ பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், படைத்தளபதிகளும், பலவான்களும், அடிமைகள், சுதந்திரமானவர்கள் எல்லோரும், குகைகளிலும் மலைகளின் பாறைகளிலும் ஒளிந்துகொண்டு,
ପୃଥିୱୀସ୍ଥା ଭୂପାଲା ମହାଲ୍ଲୋକାଃ ସହସ୍ତ୍ରପତଯୋ ଧନିନଃ ପରାକ୍ରମିଣଶ୍ଚ ଲୋକା ଦାସା ମୁକ୍ତାଶ୍ଚ ସର୍ୱ୍ୱେ ଽପି ଗୁହାସୁ ଗିରିସ୍ଥଶୈଲେଷୁ ଚ ସ୍ୱାନ୍ ପ୍ରାଚ୍ଛାଦଯନ୍|
16 ௧௬ மலைகளையும் பாறைகளையும் பார்த்து: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;
ତେ ଚ ଗିରୀନ୍ ଶୈଲାଂଶ୍ଚ ୱଦନ୍ତି ଯୂଯମ୍ ଅସ୍ମଦୁପରି ପତିତ୍ୱା ସିଂହାସନୋପୱିଷ୍ଟଜନସ୍ୟ ଦୃଷ୍ଟିତୋ ମେଷଶାୱକସ୍ୟ କୋପାଚ୍ଚାସ୍ମାନ୍ ଗୋପାଯତ;
17 ௧௭ அவருடைய கோபத்தின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைத்து நிற்கமுடியும் என்றார்கள்.
ଯତସ୍ତସ୍ୟ କ୍ରୋଧସ୍ୟ ମହାଦିନମ୍ ଉପସ୍ଥିତଂ କଃ ସ୍ଥାତୁଂ ଶକ୍ନୋତି?