< வெளிப்படுத்தின விசேஷம் 4 >

1 இவைகளுக்குப் பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முதலில் எக்காளசத்தம்போல என்னோடு பேசின சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு நடக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னது.
ତତଃ ପରଂ ମଯା ଦୃଷ୍ଟିପାତଂ କୃତ୍ୱା ସ୍ୱର୍ଗେ ମୁକ୍ତଂ ଦ୍ୱାରମ୍ ଏକଂ ଦୃଷ୍ଟଂ ମଯା ସହଭାଷମାଣସ୍ୟ ଚ ଯସ୍ୟ ତୂରୀୱାଦ୍ୟତୁଲ୍ୟୋ ରୱଃ ପୂର୍ୱ୍ୱଂ ଶ୍ରୁତଃ ସ ମାମ୍ ଅୱୋଚତ୍ ସ୍ଥାନମେତଦ୍ ଆରୋହଯ, ଇତଃ ପରଂ ଯେନ ଯେନ ଭୱିତୱ୍ୟଂ ତଦହଂ ତ୍ୱାଂ ଦର୍ଶଯିଷ୍ୟେ|
2 உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
ତେନାହଂ ତତ୍କ୍ଷଣାଦ୍ ଆତ୍ମାୱିଷ୍ଟୋ ଭୂତ୍ୱା ଽପଶ୍ୟଂ ସ୍ୱର୍ଗେ ସିଂହାସନମେକଂ ସ୍ଥାପିତଂ ତତ୍ର ସିଂହାସନେ ଏକୋ ଜନ ଉପୱିଷ୍ଟୋ ଽସ୍ତି|
3 வீற்றிருந்தவர், பார்ப்பதற்கு வச்சிரக்கல்லைப்போலவும், பதுமராகத்தைப்போலவும் இருந்தார்; அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் ஒரு வானவில் இருந்தது; அது பார்ப்பதற்கு மரகதம்போல தோன்றியது.
ସିଂହାସନେ ଉପୱିଷ୍ଟସ୍ୟ ତସ୍ୟ ଜନସ୍ୟ ରୂପଂ ସୂର୍ୟ୍ୟକାନ୍ତମଣେଃ ପ୍ରୱାଲସ୍ୟ ଚ ତୁଲ୍ୟଂ ତତ୍ ସିଂହାସନଞ୍ଚ ମରକତମଣିୱଦ୍ରୂପୱିଶିଷ୍ଟେନ ମେଘଧନୁଷା ୱେଷ୍ଟିତଂ|
4 அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் இருபத்துநான்கு சிங்காசனங்கள் இருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்மையான ஆடை அணிந்து, தங்களுடைய தலைகளில் பொற்கிரீடம் சூடி, அந்த சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.
ତସ୍ୟ ସିଂହାସନେ ଚତୁର୍ଦିକ୍ଷୁ ଚତୁର୍ୱିଂଶତିସିଂହାସନାନି ତିଷ୍ଠନ୍ତି ତେଷୁ ସିଂହାସନେଷୁ ଚତୁର୍ୱିଂଶତି ପ୍ରାଚୀନଲୋକା ଉପୱିଷ୍ଟାସ୍ତେ ଶୁଭ୍ରୱାସଃପରିହିତାସ୍ତେଷାଂ ଶିରାଂସି ଚ ସୁୱର୍ଣକିରୀଟୈ ର୍ଭୂଷିତାନି|
5 அந்தச் சிங்காசனத்தில் இருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.
ତସ୍ୟ ସିଂହାସନସ୍ୟ ମଧ୍ୟାତ୍ ତଡିତୋ ରୱାଃ ସ୍ତନିତାନି ଚ ନିର୍ଗଚ୍ଛନ୍ତି ସିଂହାସନସ୍ୟାନ୍ତିକେ ଚ ସପ୍ତ ଦୀପା ଜ୍ୱଲନ୍ତି ତ ଈଶ୍ୱରସ୍ୟ ସପ୍ତାତ୍ମାନଃ|
6 அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக் கல்லைப்போல கண்ணாடிக் கடல் இருந்தது; அந்தச் சிங்காசனத்தின் நடுவிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன, அவைகள் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.
ଅପରଂ ସିଂହାସନସ୍ୟାନ୍ତିକେ ସ୍ଫଟିକତୁଲ୍ୟଃ କାଚମଯୋ ଜଲାଶଯୋ ୱିଦ୍ୟତେ, ଅପରମ୍ ଅଗ୍ରତଃ ପଶ୍ଚାଚ୍ଚ ବହୁଚକ୍ଷୁଷ୍ମନ୍ତଶ୍ଚତ୍ୱାରଃ ପ୍ରାଣିନଃ ସିଂହସନସ୍ୟ ମଧ୍ୟେ ଚତୁର୍ଦିକ୍ଷୁ ଚ ୱିଦ୍ୟନ୍ତେ|
7 முதலாம் ஜீவன் சிங்கத்தைப்போலவும், இரண்டாம் ஜீவன் காளையைப்போலவும், மூன்றாம் ஜீவன் மனிதமுகம் போன்ற முகம் உள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுபோலவும் இருந்தன.
ତେଷାଂ ପ୍ରଥମଃ ପ୍ରାଣୀ ସିଂହାକାରୋ ଦ୍ୱିତୀଯଃ ପ୍ରାଣୀ ଗୋୱାତ୍ସାକାରସ୍ତୃତୀଯଃ ପ୍ରାଣୀ ମନୁଷ୍ୟୱଦ୍ୱଦନୱିଶିଷ୍ଟଶ୍ଚତୁର୍ଥଶ୍ଚ ପ୍ରାଣୀ ଉଡ୍ଡୀଯମାନକୁରରୋପମଃ|
8 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் ஆறுஆறு சிறகுகள் உள்ளவைகளும், சுற்றிலும், உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாக இருந்தன. அவைகள்: “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று இரவும் பகலும் ஓய்வு இல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
ତେଷାଂ ଚତୁର୍ଣାମ୍ ଏକୈକସ୍ୟ ପ୍ରାଣିନଃ ଷଟ୍ ପକ୍ଷାଃ ସନ୍ତି ତେ ଚ ସର୍ୱ୍ୱାଙ୍ଗେଷ୍ୱଭ୍ୟନ୍ତରେ ଚ ବହୁଚକ୍ଷୁର୍ୱିଶିଷ୍ଟାଃ, ତେ ଦିୱାନିଶଂ ନ ୱିଶ୍ରାମ୍ୟ ଗଦନ୍ତି ପୱିତ୍ରଃ ପୱିତ୍ରଃ ପୱିତ୍ରଃ ସର୍ୱ୍ୱଶକ୍ତିମାନ୍ ୱର୍ତ୍ତମାନୋ ଭୂତୋ ଭୱିଷ୍ୟଂଶ୍ଚ ପ୍ରଭୁଃ ପରମେଶ୍ୱରଃ|
9 மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, (aiōn g165)
ଇତ୍ଥଂ ତୈଃ ପ୍ରାଣିଭିସ୍ତସ୍ୟାନନ୍ତଜୀୱିନଃ ସିଂହାସନୋପୱିଷ୍ଟସ୍ୟ ଜନସ୍ୟ ପ୍ରଭାୱେ ଗୌରୱେ ଧନ୍ୟୱାଦେ ଚ ପ୍ରକୀର୍ତ୍ତିତେ (aiōn g165)
10 ௧0 இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: (aiōn g165)
ତେ ଚତୁର୍ୱିଂଶତିପ୍ରାଚୀନା ଅପି ତସ୍ୟ ସିଂହାସନୋପୱିଷ୍ଟସ୍ୟାନ୍ତିକେ ପ୍ରଣିନତ୍ୟ ତମ୍ ଅନନ୍ତଜୀୱିନଂ ପ୍ରଣମନ୍ତି ସ୍ୱୀଯକିରୀଟାଂଶ୍ଚ ସିଂହାସନସ୍ୟାନ୍ତିକେ ନିକ୍ଷିପ୍ୟ ୱଦନ୍ତି, (aiōn g165)
11 ௧௧ கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்கிறதற்குத் தகுதி உடையவராக இருக்கிறீர்; நீரே எல்லாவற்றையும் படைத்தீர், உம்முடைய விருப்பத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் படைக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது” என்றார்கள்.
ହେ ପ୍ରଭୋ ଈଶ୍ୱରାସ୍ମାକଂ ପ୍ରଭାୱଂ ଗୌରୱଂ ବଲଂ| ତ୍ୱମେୱାର୍ହସି ସମ୍ପ୍ରାପ୍ତୁଂ ଯତ୍ ସର୍ୱ୍ୱଂ ସସୃଜେ ତ୍ୱଯା| ତୱାଭିଲାଷତଶ୍ଚୈୱ ସର୍ୱ୍ୱଂ ସମ୍ଭୂଯ ନିର୍ମ୍ମମେ||

< வெளிப்படுத்தின விசேஷம் 4 >