< வெளிப்படுத்தின விசேஷம் 18 >
1 ௧ இவைகளுக்குப் பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாக, வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாக இருந்தது.
ತದನನ್ತರಂ ಸ್ವರ್ಗಾದ್ ಅವರೋಹನ್ ಅಪರ ಏಕೋ ದೂತೋ ಮಯಾ ದೃಷ್ಟಃ ಸ ಮಹಾಪರಾಕ್ರಮವಿಶಿಷ್ಟಸ್ತಸ್ಯ ತೇಜಸಾ ಚ ಪೃಥಿವೀ ದೀಪ್ತಾ|
2 ௨ அவன் அதிக சத்தமிட்டு: “மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், எல்லாவித அசுத்தஆவிகளுக்கும் காவல் வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள எல்லாவித பறவைகளுடைய கூடுமானது.
ಸ ಬಲವತಾ ಸ್ವರೇಣ ವಾಚಮಿಮಾಮ್ ಅಘೋಷಯತ್ ಪತಿತಾ ಪತಿತಾ ಮಹಾಬಾಬಿಲ್, ಸಾ ಭೂತಾನಾಂ ವಸತಿಃ ಸರ್ವ್ವೇಷಾಮ್ ಅಶುಚ್ಯಾತ್ಮನಾಂ ಕಾರಾ ಸರ್ವ್ವೇಷಾಮ್ ಅಶುಚೀನಾಂ ಘೃಣ್ಯಾನಾಞ್ಚ ಪಕ್ಷಿಣಾಂ ಪಿಞ್ಜರಶ್ಚಾಭವತ್|
3 ௩ அவளுடைய வேசித்தனத்தின் கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள்; பூமியிலிருந்த வியாபாரிகள் அவளுடைய செல்வச்செழிப்பினால் செல்வந்தர்களானார்கள்” என்று சொன்னான்.
ಯತಃ ಸರ್ವ್ವಜಾತೀಯಾಸ್ತಸ್ಯಾ ವ್ಯಭಿಚಾರಜಾತಾಂ ಕೋಪಮದಿರಾಂ ಪೀತವನ್ತಃ ಪೃಥಿವ್ಯಾ ರಾಜಾನಶ್ಚ ತಯಾ ಸಹ ವ್ಯಭಿಚಾರಂ ಕೃತವನ್ತಃ ಪೃಥಿವ್ಯಾ ವಣಿಜಶ್ಚ ತಸ್ಯಾಃ ಸುಖಭೋಗಬಾಹುಲ್ಯಾದ್ ಧನಾಢ್ಯತಾಂ ಗತವನ್ತಃ|
4 ௪ பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: “என் மக்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நடக்கும் வாதைகளில் சிக்காமலும் இருக்கும்படி அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
ತತಃ ಪರಂ ಸ್ವರ್ಗಾತ್ ಮಯಾಪರ ಏಷ ರವಃ ಶ್ರುತಃ, ಹೇ ಮಮ ಪ್ರಜಾಃ, ಯೂಯಂ ಯತ್ ತಸ್ಯಾಃ ಪಾಪಾನಾಮ್ ಅಂಶಿನೋ ನ ಭವತ ತಸ್ಯಾ ದಣ್ಡೈಶ್ಚ ದಣ್ಡಯುಕ್ತಾ ನ ಭವತ ತದರ್ಥಂ ತತೋ ನಿರ್ಗಚ್ಛತ|
5 ௫ அவளுடைய பாவம் வானம்வரை எட்டியது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைத்தார்.
ಯತಸ್ತಸ್ಯಾಃ ಪಾಪಾನಿ ಗಗನಸ್ಪರ್ಶಾನ್ಯಭವನ್ ತಸ್ಯಾ ಅಧರ್ಮ್ಮಕ್ರಿಯಾಶ್ಚೇಶ್ವರೇಣ ಸಂಸ್ಮೃತಾಃ|
6 ௬ அவள் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் அவளுக்குச் செய்யுங்கள்; அவளுடைய செய்கைகளுக்கு தகுந்தவாறு அவளுக்கு இரண்டுமடங்காகக் கொடுங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரண்டுமடங்காக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.
ಪರಾನ್ ಪ್ರತಿ ತಯಾ ಯದ್ವದ್ ವ್ಯವಹೃತಂ ತದ್ವತ್ ತಾಂ ಪ್ರತಿ ವ್ಯವಹರತ, ತಸ್ಯಾಃ ಕರ್ಮ್ಮಣಾಂ ದ್ವಿಗುಣಫಲಾನಿ ತಸ್ಯೈ ದತ್ತ, ಯಸ್ಮಿನ್ ಕಂಸೇ ಸಾ ಪರಾನ್ ಮದ್ಯಮ್ ಅಪಾಯಯತ್ ತಮೇವ ತಸ್ಯಾಃ ಪಾನಾರ್ಥಂ ದ್ವಿಗುಣಮದ್ಯೇನ ಪೂರಯತ|
7 ௭ அவள் தன்னை மகிமைப்படுத்தி, எவ்வளவு செல்வச்செழிப்பாய் வாழ்ந்தாளோ அந்த அளவுக்கே வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் அரசியாக இருக்கிறேன்; நான் விதவைப் பெண் இல்லை, நான் துக்கத்தைப் பார்ப்பதில்லை என்று அவள் தன் இருதயத்திலே நினைத்தாள்.
ತಯಾ ಯಾತ್ಮಶ್ಲಾಘಾ ಯಶ್ಚ ಸುಖಭೋಗಃ ಕೃತಸ್ತಯೋ ರ್ದ್ವಿಗುಣೌ ಯಾತನಾಶೋಕೌ ತಸ್ಯೈ ದತ್ತ, ಯತಃ ಸಾ ಸ್ವಕೀಯಾನ್ತಃಕರಣೇ ವದತಿ, ರಾಜ್ಞೀವದ್ ಉಪವಿಷ್ಟಾಹಂ ನಾನಾಥಾ ನ ಚ ಶೋಕವಿತ್|
8 ௮ எனவே அவளுக்கு வரும் வாதைகளாகிய மரணமும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமை உள்ளவர்.
ತಸ್ಮಾದ್ ದಿವಸ ಏಕಸ್ಮಿನ್ ಮಾರೀದುರ್ಭಿಕ್ಷಶೋಚನೈಃ, ಸಾ ಸಮಾಪ್ಲೋಷ್ಯತೇ ನಾರೀ ಧ್ಯಕ್ಷ್ಯತೇ ವಹ್ನಿನಾ ಚ ಸಾ; ಯದ್ ವಿಚಾರಾಧಿಪಸ್ತಸ್ಯಾ ಬಲವಾನ್ ಪ್ರಭುರೀಶ್ವರಃ,
9 ௯ “அவளுடன் வேசித்தனம்செய்து செல்வச்செழிப்பாய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் அக்கினியில் வேகிறதினால் உண்டான புகையைப் பார்க்கும்போது அவளுக்காக அழுது புலம்பி,
ವ್ಯಭಿಚಾರಸ್ತಯಾ ಸಾರ್ದ್ಧಂ ಸುಖಭೋಗಶ್ಚ ಯೈಃ ಕೃತಃ, ತೇ ಸರ್ವ್ವ ಏವ ರಾಜಾನಸ್ತದ್ದಾಹಧೂಮದರ್ಶನಾತ್, ಪ್ರರೋದಿಷ್ಯನ್ತಿ ವಕ್ಷಾಂಸಿ ಚಾಹನಿಷ್ಯನ್ತಿ ಬಾಹುಭಿಃ|
10 ௧0 அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒருமணிநேரத்தில் உனக்கு தண்டனை வந்ததே! என்பார்கள்.
ತಸ್ಯಾಸ್ತೈ ರ್ಯಾತನಾಭೀತೇ ರ್ದೂರೇ ಸ್ಥಿತ್ವೇದಮುಚ್ಯತೇ, ಹಾ ಹಾ ಬಾಬಿಲ್ ಮಹಾಸ್ಥಾನ ಹಾ ಪ್ರಭಾವಾನ್ವಿತೇ ಪುರಿ, ಏಕಸ್ಮಿನ್ ಆಗತಾ ದಣ್ಡೇ ವಿಚಾರಾಜ್ಞಾ ತ್ವದೀಯಕಾ|
11 ௧௧ “பூமியின் வியாபாரிகளும் தங்களுடைய பொருட்களான பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், மெல்லிய ஆடைகளையும், இரத்தாம்பரத்தையும், பட்டு ஆடைகளையும், சிவப்பு ஆடைகளையும்,
ಮೇದಿನ್ಯಾ ವಣಿಜಶ್ಚ ತಸ್ಯಾಃ ಕೃತೇ ರುದನ್ತಿ ಶೋಚನ್ತಿ ಚ ಯತಸ್ತೇಷಾಂ ಪಣ್ಯದ್ರವ್ಯಾಣಿ ಕೇನಾಪಿ ನ ಕ್ರೀಯನ್ತೇ|
12 ௧௨ எல்லாவிதமான வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்த பொருள்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற பொருள்களையும்,
ಫಲತಃ ಸುವರ್ಣರೌಪ್ಯಮಣಿಮುಕ್ತಾಃ ಸೂಕ್ಷ್ಮವಸ್ತ್ರಾಣಿ ಕೃಷ್ಣಲೋಹಿತವಾಸಾಂಸಿ ಪಟ್ಟವಸ್ತ್ರಾಣಿ ಸಿನ್ದೂರವರ್ಣವಾಸಾಂಸಿ ಚನ್ದನಾದಿಕಾಷ್ಠಾನಿ ಗಜದನ್ತೇನ ಮಹಾರ್ಘಕಾಷ್ಠೇನ ಪಿತ್ತಲಲೌಹಾಭ್ಯಾಂ ಮರ್ಮ್ಮರಪ್ರಸ್ತರೇಣ ವಾ ನಿರ್ಮ್ಮಿತಾನಿ ಸರ್ವ್ವವಿಧಪಾತ್ರಾಣಿ
13 ௧௩ இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனிதர்களுடைய ஆத்துமாக்களையும் இனி வாங்குகிறவர்கள் இல்லை என்பதால் அவளுக்காக அழுது புலம்புவார்கள்.
ತ್ವಗೇಲಾ ಧೂಪಃ ಸುಗನ್ಧಿದ್ರವ್ಯಂ ಗನ್ಧರಸೋ ದ್ರಾಕ್ಷಾರಸಸ್ತೈಲಂ ಶಸ್ಯಚೂರ್ಣಂ ಗೋಧೂಮೋ ಗಾವೋ ಮೇಷಾ ಅಶ್ವಾ ರಥಾ ದಾಸೇಯಾ ಮನುಷ್ಯಪ್ರಾಣಾಶ್ಚೈತಾನಿ ಪಣ್ಯದ್ರವ್ಯಾಣಿ ಕೇನಾಪಿ ನ ಕ್ರೀಯನ್ತೇ|
14 ௧௪ உன் ஆத்துமா விரும்பிய பழவகைகள் உன்னைவிட்டு நீங்கிப்போனது; ஆடம்பரங்களும், செல்வச்செழிப்பும் உன்னைவிட்டு நீங்கிப்போனது; நீ அவைகளை இனிப் பார்ப்பதில்லை.
ತವ ಮನೋಽಭಿಲಾಷಸ್ಯ ಫಲಾನಾಂ ಸಮಯೋ ಗತಃ, ತ್ವತ್ತೋ ದೂರೀಕೃತಂ ಯದ್ಯತ್ ಶೋಭನಂ ಭೂಷಣಂ ತವ, ಕದಾಚನ ತದುದ್ದೇಶೋ ನ ಪುನ ರ್ಲಪ್ಸ್ಯತೇ ತ್ವಯಾ|
15 ௧௫ இப்படிப்பட்டவைகளினால் வியாபாரம் செய்து அவளால் செல்வந்தர்களாக மாறியவர்கள் அவளுக்கு உண்டான வாதையைப் பார்த்து பயந்து, தூரத்திலே நின்று;
ತದ್ವಿಕ್ರೇತಾರೋ ಯೇ ವಣಿಜಸ್ತಯಾ ಧನಿನೋ ಜಾತಾಸ್ತೇ ತಸ್ಯಾ ಯಾತನಾಯಾ ಭಯಾದ್ ದೂರೇ ತಿಷ್ಠನತೋ ರೋದಿಷ್ಯನ್ತಿ ಶೋಚನ್ತಶ್ಚೇದಂ ಗದಿಷ್ಯನ್ತಿ
16 ௧௬ ஐயோ! மெல்லிய ஆடையும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் அணிந்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரே மணிநேரத்தில் எல்லாச் செல்வமும் அழிந்துபோனதே! என்று சொல்லி, அழுது துக்கத்தோடு இருப்பார்கள்.
ಹಾ ಹಾ ಮಹಾಪುರಿ, ತ್ವಂ ಸೂಕ್ಷ್ಮವಸ್ತ್ರೈಃ ಕೃಷ್ಣಲೋಹಿತವಸ್ತ್ರೈಃ ಸಿನ್ದೂರವರ್ಣವಾಸೋಭಿಶ್ಚಾಚ್ಛಾದಿತಾ ಸ್ವರ್ಣಮಣಿಮುಕ್ತಾಭಿರಲಙ್ಕೃತಾ ಚಾಸೀಃ,
17 ௧௭ கப்பல்களில் பயணம்செய்கிறவர்களும், மாலுமிகள் அனைவரும், கப்பலில் வேலை செய்கிறவர்களும், கடலில் தொழில்செய்கிற அனைவரும் தூரத்திலே நின்று,
ಕಿನ್ತ್ವೇಕಸ್ಮಿನ್ ದಣ್ಡೇ ಸಾ ಮಹಾಸಮ್ಪದ್ ಲುಪ್ತಾ| ಅಪರಂ ಪೋತಾನಾಂ ಕರ್ಣಧಾರಾಃ ಸಮೂಹಲೋಕಾ ನಾವಿಕಾಃ ಸಮುದ್ರವ್ಯವಸಾಯಿನಶ್ಚ ಸರ್ವ್ವೇ
18 ௧௮ அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கு ஒப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,
ದೂರೇ ತಿಷ್ಠನ್ತಸ್ತಸ್ಯಾ ದಾಹಸ್ಯ ಧೂಮಂ ನಿರೀಕ್ಷಮಾಣಾ ಉಚ್ಚೈಃಸ್ವರೇಣ ವದನ್ತಿ ತಸ್ಯಾ ಮಹಾನಗರ್ಯ್ಯಾಃ ಕಿಂ ತುಲ್ಯಂ?
19 ௧௯ தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: ஐயோ, மகா நகரமே! கடலிலே கப்பல்களை உடையவர்கள் எல்லோரும் இவளுடைய செல்வத்தினால் செல்வந்தர்களானார்களே! ஒருமணி நேரத்திலே இவள் அழிந்துபோனாளே!” என்று அழுது துக்கத்தோடு ஓலமிடுவார்கள்.
ಅಪರಂ ಸ್ವಶಿರಃಸು ಮೃತ್ತಿಕಾಂ ನಿಕ್ಷಿಪ್ಯ ತೇ ರುದನ್ತಃ ಶೋಚನ್ತಶ್ಚೋಚ್ಚೈಃಸ್ವರೇಣೇದಂ ವದನ್ತಿ ಹಾ ಹಾ ಯಸ್ಯಾ ಮಹಾಪುರ್ಯ್ಯಾ ಬಾಹುಲ್ಯಧನಕಾರಣಾತ್, ಸಮ್ಪತ್ತಿಃ ಸಞ್ಚಿತಾ ಸರ್ವ್ವೈಃ ಸಾಮುದ್ರಪೋತನಾಯಕೈಃ, ಏಕಸ್ಮಿನ್ನೇವ ದಣ್ಡೇ ಸಾ ಸಮ್ಪೂರ್ಣೋಚ್ಛಿನ್ನತಾಂ ಗತಾ|
20 ௨0 பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்களுக்காக தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே!” என்று தூதன் சொன்னான்.
ಹೇ ಸ್ವರ್ಗವಾಸಿನಃ ಸರ್ವ್ವೇ ಪವಿತ್ರಾಃ ಪ್ರೇರಿತಾಶ್ಚ ಹೇ| ಹೇ ಭಾವಿವಾದಿನೋ ಯೂಯಂ ಕೃತೇ ತಸ್ಯಾಃ ಪ್ರಹರ್ಷತ| ಯುಷ್ಮಾಕಂ ಯತ್ ತಯಾ ಸಾರ್ದ್ಧಂ ಯೋ ವಿವಾದಃ ಪುರಾಭವತ್| ದಣ್ಡಂ ಸಮುಚಿತಂ ತಸ್ಯ ತಸ್ಯೈ ವ್ಯತರದೀಶ್ವರಃ||
21 ௨௧ அப்பொழுது, பலமுள்ள தூதன் ஒருவன் பெரிய எந்திரக்கல்லுக்கு சமமான ஒரு கல்லை எடுத்துக் கடலிலே தூக்கியெறிந்து: “இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாகத் தள்ளப்பட்டு, இனி ஒருபோதும் பார்க்கமுடியாமல்போகும்.
ಅನನ್ತರಮ್ ಏಕೋ ಬಲವಾನ್ ದೂತೋ ಬೃಹತ್ಪೇಷಣೀಪ್ರಸ್ತರತುಲ್ಯಂ ಪಾಷಾಣಮೇಕಂ ಗೃಹೀತ್ವಾ ಸಮುದ್ರೇ ನಿಕ್ಷಿಪ್ಯ ಕಥಿತವಾನ್, ಈದೃಗ್ಬಲಪ್ರಕಾಶೇನ ಬಾಬಿಲ್ ಮಹಾನಗರೀ ನಿಪಾತಯಿಷ್ಯತೇ ತತಸ್ತಸ್ಯಾ ಉದ್ದೇಶಃ ಪುನ ರ್ನ ಲಪ್ಸ್ಯತೇ|
22 ௨௨ சுரமண்டலக்காரர்களும், கீதவாத்தியக்காரர்களும், நாகசுரக்காரர்களும், எக்காளக்காரர்களுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தக் கைவினைத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் இருக்கமாட்டார்கள்; எந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.
ವಲ್ಲಕೀವಾದಿನಾಂ ಶಬ್ದಂ ಪುನ ರ್ನ ಶ್ರೋಷ್ಯತೇ ತ್ವಯಿ| ಗಾಥಾಕಾನಾಞ್ಚ ಶಬ್ದೋ ವಾ ವಂಶೀತೂರ್ಯ್ಯಾದಿವಾದಿನಾಂ| ಶಿಲ್ಪಕರ್ಮ್ಮಕರಃ ಕೋ ಽಪಿ ಪುನ ರ್ನ ದ್ರಕ್ಷ್ಯತೇ ತ್ವಯಿ| ಪೇಷಣೀಪ್ರಸ್ತರಧ್ವಾನಃ ಪುನ ರ್ನ ಶ್ರೋಷ್ಯತೇ ತ್ವಯಿ|
23 ௨௩ விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணமகன் மற்றும் மணமகளுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன்னுடைய வியாபாரிகள் உலகத்தின் முக்கிய நபர்களாக இருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா நாட்டு மக்களும் மோசம்போனார்களே.
ದೀಪಸ್ಯಾಪಿ ಪ್ರಭಾ ತದ್ವತ್ ಪುನ ರ್ನ ದ್ರಕ್ಷ್ಯತೇ ತ್ವಯಿ| ನ ಕನ್ಯಾವರಯೋಃ ಶಬ್ದಃ ಪುನಃ ಸಂಶ್ರೋಷ್ಯತೇ ತ್ವಯಿ| ಯಸ್ಮಾನ್ಮುಖ್ಯಾಃ ಪೃಥಿವ್ಯಾ ಯೇ ವಣಿಜಸ್ತೇಽಭವನ್ ತವ| ಯಸ್ಮಾಚ್ಚ ಜಾತಯಃ ಸರ್ವ್ವಾ ಮೋಹಿತಾಸ್ತವ ಮಾಯಯಾ|
24 ௨௪ தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது” என்று சொன்னான்.
ಭಾವಿವಾದಿಪವಿತ್ರಾಣಾಂ ಯಾವನ್ತಶ್ಚ ಹತಾ ಭುವಿ| ಸರ್ವ್ವೇಷಾಂ ಶೋಣಿತಂ ತೇಷಾಂ ಪ್ರಾಪ್ತಂ ಸರ್ವ್ವಂ ತವಾನ್ತರೇ||