< வெளிப்படுத்தின விசேஷம் 15 >
1 ௧ பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்களைப் பார்த்தேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிவிற்கு வந்தது.
And I saw another sign in the heaven, great and wonderful, seven angels having the seven last plagues; that in them the wrath of God is finished.
2 ௨ அன்றியும், அக்கினிக் கலந்த கண்ணாடிக் கடல்போல ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் உருவத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் பெயரின் எண்ணிற்கும் உள்ளாகாமல் ஜெயம் பெற்றவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் பார்த்தேன்.
And I saw as it were a sea of glass mingled with fire: and those who conquer from the beast, and from his image, and from the number of his name, standing on the sea of glass, having the harps of God.
3 ௩ அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
And they are singing the song of Moses the servant of God, and the song of the Lamb, saying, Great and wonderful are thy works, O Lord God Omnipotent; true and righteous are thy ways, thou King of the nations:
4 ௪ கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.
Who may not fear, O Lord, and will not glorify thy name? because thou alone art holy; because all the nations shall come and worship before thee; because thy righteous acts have been made manifest.
5 ௫ இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது;
And after these things I saw, and the temple of the tabernacle of the testimony in the heaven was open:
6 ௬ அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அந்த ஏழு தூதர்களும் பரிசுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடையணிந்து, மார்பில் பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
and the seven angels, having the seven plagues, came out from the temple, clothed in clean, bright linen, and encircled about the breast with golden girdles.
7 ௭ அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn )
And one of the four living creatures gave to the seven angels seven golden bowls full of the wrath of God who liveth unto the ages of the ages. (aiōn )
8 ௮ அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவனுடைய ஆலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் செல்லமுடியவில்லை.
And the temple was filled with smoke from the glory of God, and from his power; and no one was able to enter into the temple, until the seven plagues of the seven angels may be finished.