< வெளிப்படுத்தின விசேஷம் 15 >

1 பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்களைப் பார்த்தேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிவிற்கு வந்தது.
Ještě jiné mocné a podivuhodné úkazy jsem uviděl na nebi. Přede mnou se rozprostíralo křišťálově průzračné jezero, jiskřící jako oheň. U něho se shromáždili všichni ti, kdo zůstali věrni Bohu a zvítězili nad ďábelskou šelmou, neuctívali její sochu a nedali se označit jejím číslem.
2 அன்றியும், அக்கினிக் கலந்த கண்ணாடிக் கடல்போல ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் உருவத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் பெயரின் எண்ணிற்கும் உள்ளாகாமல் ஜெயம் பெற்றவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் பார்த்தேன்.
3 அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
Nyní dostali od Boha harfy, aby hráli a zpívali píseň vysvoboditele Božího lidu a píseň Spasitele světa Ježíše: „Velké a podivuhodné jsou tvé činy, Pane Bože všemohoucí. Tvoje cesty jsou spravedlivé a přímé, Králi všech národů.
4 கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.
Kdo by se tě, Pane, nebál a kdo by neuctíval tvoje jméno? Vždyť ty jediný jsi Svatý. Všechny národy přijdu a skloní se před tebou, všichni poznají, že tvoje soudy jsou spravedlivé.“
5 இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது;
Potom jsem viděl: Otevřela se svatyně nebeského chrámu
6 அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அந்த ஏழு தூதர்களும் பரிசுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடையணிந்து, மார்பில் பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
a vyšlo z ní sedm andělů – vykonavatelů sedmi posledních pohrom, kterými se dovrší spravedlivý Boží hněv. Ti andělé měli zářivě čistá kněžská roucha a byli přepásáni zlatými šerpami.
7 அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn g165)
Jedna ze čtyř bytostí od Božího trůnu jim předala sedm zlatých číší naplněných hněvem od Boha, živého od věků na věky. (aiōn g165)
8 அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவனுடைய ஆலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் செல்லமுடியவில்லை.

< வெளிப்படுத்தின விசேஷம் 15 >