< வெளிப்படுத்தின விசேஷம் 14 >
1 ௧ பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடு அவருடைய பிதாவின் பெயர் தங்களுடைய நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேரும் நிற்பதைப் பார்த்தேன்.
Mā yeze mu henu ini iri bitam bi turi anipana ni sihiyona. Ni gome nan we anu 144,000 tiza tiwe me nan ta co awe me itini me.
2 ௨ அல்லாமலும், பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர்கள் தங்களுடைய சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது.
Ma kunna nigwirang asesere gu u rumzo ugmei ma dangdang nan utusa u dandang. Ugumurko sa ma kunna wazi gu anu utira magangang.
3 ௩ அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம் நபர்களைத்தவிர வேறொருவரும் கற்றுக்கொள்ளமுடியாமல் இருந்தது.
Wa wuzi ire iso ahira atigomo upuru ana aje nan inama ini jaa. Akem unu ugesa madi ziki ire me ba senke anu 144,000 sa a kpi we unee me.
4 ௪ பெண்களால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே சென்றாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனிதர்களில் இருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
We wani sa nyari we uchara apum aweme inna na neh, wa inki apum aweme lau. We wani anu tarsa ubitam vat ahira sa ta hana. akpi we anyimo anu tuba barki Asere barki bitam me.
5 ௫ இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக குற்றமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.
akem we im macico ba anyimo anyo aweme ba, akem we ina buri ba, we zi lau.
6 ௬ பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, (aiōnios )
Ma iri bire bibe bi kadura ka Asere unu sum azesere, sa ma canti kadura kariri sa madi bezi anu sa wa ciki anyimo uney, ko tiya tilem, ti hira, nan na nabu. (aiōnios )
7 ௭ அதிக சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது; வானத்தையும் பூமியையும் கடலையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரைத் தொழுதுகொள்ளுங்கள் என்று சொன்னான்.
Ma yeze nigmyinrang kang, ''kunna ni biyau ba Asere i nonzo me. Uganiya uweki tize me wa biki nonzo ni me unu ge sa ma bari asesere adizi niwin nan mei ma gwandan.
8 ௮ வேறொரு தூதன் பின்னேசென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான்.
Bire bi be bi kuri bagu, ''ubabila wa rizo sa ma wu vat ti hira wa si ubere usensen.
9 ௯ அவர்களுக்குப் பின்னால் மூன்றாம் தூதன் வந்து, அதிக சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்கித் தன் நெற்றியிலோ தன் கையிலோ அதின் முத்திரையை அணிந்து கொள்ளுகிறவன் எவனோ,
Bire bibe bi kadura bi taru ba tarsi we innu gusa, '' inka uye ma nonzo bi nama bi buri bigeme ba na ire imum ma'amu in bini, i kabi bihori abitini nani tari.
10 ௧0 அவன் தேவனுடைய கோபத்தின் தண்டனையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் ஊற்றப்பட்ட அவருடைய கோபமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.
Madi kuri ma sii ubere icara iriba ya Asere, ubere sa a wun anyimo ahira u kunna riba imeme. Anu ge sa ma sa urah udi ponsi me nan ti ene turah aje ibe ika dura iriri ya Asere nan bitam me.
11 ௧௧ அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. (aiōn )
Muchungo anyimo ahira urah ma nyene, wa zoo me innu venke ba niye nan uwui, anu nonzo u bi nama bi biru me nan nanu nuge ma kabi bihori uniza nimeme. (aiōn )
12 ௧௨ தேவனுடைய கட்டளைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே வெளிப்படும் என்று சொன்னான்.
Kunna ni utisa wa nu iriba ishew wanu sa wa zi lau, anu sa wa kabsa tize sere nan nu inko iruba anyimo Yeso.
13 ௧௩ பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்று எழுது; அவர்கள் தங்களுடைய வேலைகளில் இருந்து ஒய்வெடுப்பார்கள்; அவர்களுடைய செய்கைகள் அவர்களோடு கூடப்போகும்; ஆவியானவரும் ஆம் என்று சொல்லியிருக்கிறார் என்று சொல்லியது.
Mā kuuna nigmyirang aseser nyettike, ''anu ani nonzo wani sa wa wii anyimo ugomo Asere.'' I bibie ba guna barki wa di venke katuma kawe katuma kawe me kadi tarsi we.''
14 ௧௪ பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனிதகுமாரனைப்போல தமது தலையின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கூர்மையான அரிவாளையும் வைத்திருக்கும் ஒருவர் உட்கார்ந்திருப்பதையும் பார்த்தேன்.
Ma iri uhurtu upau unno wa eh. Asesere uhurtu me wa gu vana unubu mani ma canti ma canti ni ere niriri anice nimeme nan nu lanjiye utire a tarē timeme.
15 ௧௫ அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரைப் பார்த்து: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, எனவே உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான்.
Bire bi be bi kadura ba sura ba suri anyimo udenge Asere mā titi unu sa ma ciki uhurtu me in nigmyirang ni dandang, ''kaba lanjiye uweme utubi okorko utimumum. Uganiya ukorko wa biki barki utarika uney wa hina.
16 ௧௬ அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைச்சல் அறுக்கப்பட்டது.
Unu gesa ma unēy me, monno ma humurko vat.
17 ௧௭ பின்பு வேறொரு தூதனும் கூர்மையான அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.
Bire bibe bikadura ba suri anyimo udenge Asere anyimo asesere. Ma cangi mā canti ulanjiye utire.
18 ௧௮ அக்கினியின்மேல் அதிகாரம் உள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கூர்மையான அரிவாளைப் பிடித்திருக்கிறவனைப் பார்த்து: பூமியின் திராட்சைப்பழங்கள் பழுத்திருக்கிறது, கூர்மையான உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று அதிக சத்தத்தோடு சொன்னான்.
Bire ba suri anyimo ubagadi upunsa timumum, sa mā teki nikara ni urame. Mā titi inni gmyinrang ni dandang u ge sa ma canti ulanjiye atire me, ''zaka ulanjiye utire me u ori imum ishimzo utiti anyimo uney me, imum ishimzo me ya hina.''
19 ௧௯ அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சைப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபத்தின் தண்டனை என்னும் பெரிய ஆலையிலே போட்டான்;
Bibi bi kadura ba vivirko ulanjiye anyimo uney ma ori imum ishimzo me. Ma veten anyimo iharu ipojo iriba Asere me.
20 ௨0 நகரத்திற்கு வெளியே உள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து முந்நூறு கிலோமீட்டர் தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டு குதிரைகளின் கடிவாளங்களின் உயரம்வரைக்கும் பெருகிவந்தது.
Iharu ipuji ya pura a kamarka nipin me, maye ma sumi ma biki apuru a barka gu 1.600 anabu.